Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜூன் 23 - ம் தேதி முதல் ஜூலை 6 - ம் தேதிவரை

ராசி பலன்கள்

ஜூன் 23 - ம் தேதி முதல் ஜூலை 6 - ம் தேதிவரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்

ராசி பலன்கள்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கு சாதகமாகும். கணவர் உங்களின் மனம்கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் விரைந்துமுடியும். சகோதரர் வகையில் நல்லது நடக்கும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். சமையலறைச் சாதனங்களைப் புதுப்பிப்பீர்கள். சிலர் புது வீடு கட்டி குடி புகுவார்கள். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் வராமலிருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசி பலன்கள்

மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னை விலகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும் எதிர்பார்த்த அளவுக்குப் பணம் வராவிட்டாலும் ஓரளவு வரும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிரயாணத்துக்குத் திட்டமிடுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாத்தனாரின் ஆதரவு கிடைக்கும். மாமியாருடன் இருந்த மோதல் நீங்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் விமர்சிக்கப்படுவீர்கள். சமயோஜித புத்தி தேவைப்படும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசி பலன்கள்

எதிலும் வெற்றிபெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் எளிதில் முடியும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். மகள் உங்களைப் புரிந்து கொள்வார். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர் கல்வி அமையும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.

கடகம்

ராசி பலன்கள்

புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழுதாகிக்கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் தேங்கிக்கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது.

சிம்மம்

ராசி பலன்கள்

நினைத்த காரியம் நடக்கும். பணவரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை அமையும். தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல் படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி அமையும். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கன்னி

ராசி பலன்கள்

உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு கட்ட எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவர் தன் தவற்றை உணர்வார். செல்வாக்கு கூடும். பணம் பல வழிகளில் வரும். பிள்ளைகள் உங்களின் அறிவுரையை ஏற்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.

துலாம்

ராசி பலன்கள்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறு வீர்கள். பிள்ளைகளின் நட்புவட்டம் விரியும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். எதிலும் தெளிவு பிறக்கும். முகப்பொலிவு கூடும். மாமியார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். பழைய தோழிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் நேரமிது.

விருச்சிகம்

ராசி பலன்கள்

படபடப்பு, கோபம் குறையும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். மகளின் உயர்கல்வி பற்றி யோசிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பாகப் பிரிவினை சுமுகமாகும். சாதுர்யமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். நட்புவட்டம் விரியும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கலைப்பொருள்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டியிருக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும் நேரமிது.

தனுசு

ராசி பலன்கள்

தன்னம்பிக்கை பெருகும். கௌரவம் மிக்க பதவியில் அமர்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களுக்கு புதிய பொறுப்பைத் தருவார். மகளுக்குத் திருமணம் கூடி வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கடன் பிரச்னைகள் தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமனார், மாமியார் புகழும்படி சிலவற்றைச் செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும் நேரமிது.

மகரம்

ராசி பலன்கள்

இழுபறியான வேலைகள் முழுமையடையும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். புதிய சொத்து ஒன்று வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வக்கோயிலுக்கு செல்லத் திட்டமிடுவீர்கள். நாத்தனாரின் மனம் மாறும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். ஷேர் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.

கும்பம்

ராசி பலன்கள்

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவரின் வேலைச்சுமை யைப் பகிர்ந்து கொள்வீர்கள். மாமனார் உதவுவார். மாமியார் ஏதேனும் குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். பள்ளிப் பருவத் தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் வேலைச் சுமையுடன் செல்வாக்கு உயரும். காத்திருந்து காய் நகர்த்தும் நேரமிது.

மீனம்

ராசி பலன்கள்

தட்டுத்தடுமாறிய காரியங்கள் கைகூடும். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவர் உங்களின் பெருந் தன்மையை புரிந்துகொள்வார். பணப் புழக்கம் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் கோரிக்கையை ஏற்பார். தைரியமாக முடிவுகள் எடுக்கும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism