மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூன் 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்

செயலில் வேகம் கூடும். உயர்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். கொடுத்த பணம் திரும்ப வரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுவீர்கள். கணவர் உங்களின் மனத்தைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். கவனமாக இருங்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்

தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். சகோதரர் ஓடி வந்து உதவுவார். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வரத் திட்டமிடுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். உறவினர்கள், தோழிகளால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

அனுசரித்துப்போக வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்

குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்கு இருந்த படபடப்பு, வேலைச்சுமை குறையும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்களை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்க்க வாய்ப்புகள் அமையும். வேலைச்சுமையும் மன இறுக்கமும் இருந்துகொண்டேயிருக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை விற்றுப் புதுச் சொத்து வாங்குவீர்கள். உறவினர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம்விட்டுப் பேசுவார்கள்.

நினைத்ததை முடிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். இங்கிதமான பேச்சால் கடினமான காரியங்களைக்கூட சுலபமாக முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். கணவர் பாசம் காட்டுவார். இருவரும் கலந்து பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர், தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் செய்ய வேண்டாம்.

எதிர்ப்புகள் நீங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்

மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஒதுங்கியிருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளைப் பாராட்டுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும்.

சாதித்துக் காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி

சாதுரியமாகப் பேசுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பிக்கள் நண்பர்களாவார்கள். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் கலை திறமையை வளர்ப்பீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். தந்தையின் உடல்நலம் சீராகும். திடீர் யோகம் உண்டாகும். மாமியார் புதிய பொறுப்புகளைத் தருவார். வியாபாரத்தில் ஏற்றுமதி மூலம் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை.

தடைகள் உடைபடும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்ததைத் தந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கணவரின் கோபம் குறையும். அவருக்கிருந்த தோல்வி மனப்பான்மை மாறும். வர வேண்டிய பூர்வீகச் சொத்து வந்து சேரும். அலைச்சல், செலவுகள் வந்து போகும். குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நாத்தனார், மாமியாரை அனுசரித்துப் போவது நல்லது. நட்புவட்டம் விரியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்

குடும்பத்தில் அமைதி நிலவும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். திருமணம் கூடி வரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். நாத்தனாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். மாமியாரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறினாலும் பொறுமை காப்பது நல்லது.

விவாதங்களைத் தவிர்க்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய வீட்டை விற்று புது இடம் வாங்குவீர்கள். கணவரின் புதிய முயற்சிகளுக்கு உதவுவீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சி கூடும். அவர்களின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் திருப்திகரமாக முடியும். அவ்வப்போது வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். மாமியார், நாத்தனார் வகையில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் நல்லது. வியாபாரத்தில் புதிய வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும்.

தொட்டது துலங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்

தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். கணவருடன் இருந்த மோதல் விலகும். பழைய கடன் பிரச்னையிலிருந்து தப்பிக்க புது வழி கிடைக்கும். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். மகளுக்கு வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்கும். அரசு விஷயங்கள் உடனே முடியும். பிரபலங்கள் ஆதரிப்பார்கள். உடல் நலனில் கவனமாக இருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார்.

வேலைச்சுமை அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்

கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது விரைந்து முடியும். கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவார். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தோழிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும்.

பிற்பகுதியில் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்

தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புதிய இடம் வாங்குவீர்கள். கணவரை அனுசரித்துப் போங்கள். வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். பழைய கல்லூரி பள்ளித் தோழிகளைச் சந்திப்பீர்கள். மகளுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரன் அமையும். சுபச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நேரமிது.