Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மார்ச் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மார்ச் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்

மேஷம்
மேஷம்

மேஷம் :  குடும்பத்தினருடன் கலந்து பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் பாசம் காட்டுவார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப் படுத்த வேண்டிய நேரமிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: எதிலும் வெற்றிபெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பத்திரப்பதிவு செய்வீர்கள். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மாமியார், நாத்தனார் மனம் மாறும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள், தோழிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மெச்சும் படி நடந்து கொள்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

மிதுனம்
மிதுனம்

மிதுனம் : லமுறை முயற்சி செய்தும் முடிக்க முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். கணவரின் புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானம் உயரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். மாமியாரின் ஆதரவு கிட்டும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.

கடகம்

கடகம்
கடகம்

கடகம் : தொட்ட காரியம் துலங்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல் நீங்கும். தடைகள் உடைபடும் நேரமிது.

சிம்மம்

சிம்மம்
சிம்மம்

சிம்மம் : பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களின் தியாக உணர்வைப் புரிந்து கொள்வார். உறவினர்கள், தோழிகள் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். சமையலறை சாதனங்களை மாற்று வீர்கள். அரசுப் பணிகள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பயணங்களின்போது கவனம் தேவைப்படும் நேரமிது.

கன்னி

கன்னி
கன்னி

கன்னி : தடைப்பட்ட காரியங்கள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். புது வீடு வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினர்கள், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். மாமனார், மாமியார் உதவுவார்கள். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். கணவருடன் அவ்வப்போது கருத்து மோதல் வரும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தன் பலவீனத்தை உணரும் நேரமிது.

துலாம்

துலாம்
துலாம்

துலாம் : எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். கணவர், பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வர். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வேற்றுமதம், வெளிநாட்டில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும் நேரமிது.

விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம் : திலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவர் பாச மழை பொழிவார். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். நாத்தனார் மதிப்பார். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதித்துக்காட்டும் நேரமிது.

தனுசு

தனுசு
தனுசு

தனுசு : பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரின் போக்கு மாறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் கூடும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மாமியார் உங்களிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரமிது.

மகரம்

மகரம்
மகரம்

மகரம் : முயற்சிகள் பலிதமாகும். கணவர் உங்களை அனுசரித்துப் பேசுவார். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். திடீர்ப் பணவரவு உண்டு. வாகனப் பழுது நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரி மனம்விட்டுப் பேசுவார். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். முன்கோபம், அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். துணிச்சலான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

கும்பம்

கும்பம்
கும்பம்

கும்பம் : தைரியம் கூடும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மாமியார் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார். முன்கோபம், டென்ஷன், அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். இங்கிதமான பேச்சால் வெற்றிபெறும் நேரமிது.

மீனம்

மீனம்
மீனம்

மீனம் : ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவர் ஏதேனும் ஒரு வகையில் குற்றம், குறை கூறுவார். மாமியார், நாத்தனாரை அனுசரித்துப் போங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகிப்புத் தன்மையால் முன்னேறும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism