தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மார்ச் 3-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்: 

டுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.உயர் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அரசியலில் செல்வாக்கு கூடும். பழைய இடத்தை விற்று புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். விஸ்வரூபமெடுக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்:

ங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமா வார்கள். உயர்பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. உங்களைத் தாழ்த்திப்பேசியவர்கள் மதிப்பார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் வீண்பழி வந்து விலகும். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: 

பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த பணம் வரும். கணவர் உங்களிடம் அன்பாக நடந்துகொள்வார். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்தில் உங்களின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சவாலான விஷயங்களைச் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த பகை விலகும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். விடாமுயற்சியால் விட்டதைப்பிடிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: 

டுமாறிக்கொண்டிருந்த நீங்கள் திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னை நீங்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். திட்டத்தில் ஒன்று நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: 

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: 

திர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நாத்தனாருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வார். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். வெற்றிக்கு வழிவகுக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: 

சோர்ந்துகிடந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். வி.ஐ.பிக்கள் உதவுவார்கள். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனின் பிடிவாதம் தளரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். பிரச்னைகளை எளிதில் சமாளிப்பீர்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகச் செயல்படவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: 

ளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களை முழுமையாக நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள், தோழிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். உயர்பதவிகள் தேடி வரும். எதையும் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: 

குடும்பத்தில் முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுத்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறை வேறும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: 

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவரின் கோபம் குறையும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வாகனம் பழுது நீங்கி சரியாகும். மாமியார் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்வார். அடகிலிருந்த நகையை மீட்கும் அளவுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். தொடர்முயற்சியால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: 

திர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நாத்தனார் உதவுவார். சுப செலவுகள் அதிகரிக்கும். வீடு வாங்க கடன் கிடைக்கும். உறவினர் களால் அனுகூலம் உண்டு. சகோதரர் சரியாகப் புரிந்துகொள்வார். உயர்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

நிர்வாகத் திறன் கூடும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகள் நீண்ட நாள்களாக கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அநாவசிய செலவுகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் தயக்கமில்லாமல் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். விமர்சனங்களைத் தாண்டி வெற்றிபெறும் நேரமிது.