தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மே 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்

நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்குப் புதிய ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாமியார், நாத்தனாரை அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளின் உயர்கல்வியைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி.ஐ.பிக்கள் உதவுவார்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவு செய்ய நேரிடும். மாமனார், மாமியாருடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வீர்கள்.

நினைத்ததை முடிக்கும் நேரமிது

ராசி பலன்கள்

மிதுனம்

சோம்பல், அசதி நீங்கும். பழைய உறவினர்கள், தோழிகளுடன் கலந்துரையாடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். கணவர் பாசமழை பொழிவார். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் ரசனைக்கேற்ப புது வீடு அமையும். தங்க ஆபரணம் வாங்க திட்டமிடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

விடாமுயற்சி வெற்றி தரும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடுவீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களின் உயர்கல்வியைப் பற்றி யோசிப்பீர்கள். மாமியார் உங்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

வசதி வாய்ப்புகள் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்

திர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீட்டை விரிவுபடுத்திச் சீரமைப்பீர்கள். நாத்தனார், மாமியார் மதிப்பார்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்களின் மனம் மாறுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக்கண்டு மேலதிகாரி வியப்பார்.

முக்கிய சந்திப்புகளால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி

டைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். வி.ஐ.பிக்கள் உதவுவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்கள், தோழிகளுடன் பேசும்போது கவனம் தேவை. சிறு அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்

திலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் தீவிரம் காட்டுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி அமையும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய இடத்தில் வேலை அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டு. வீட்டை விரிவுபடுத்துவீர்கள். மாமியாரின் ஆதரவு உண்டு. நாத்தனாரை அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளின் உயர்கல்வி பற்றிய உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முடங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள்.

திருப்பங்கள் நிகழும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு

தொட்ட காரியங்கள் துலங்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சிறிய இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவர் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு கூடும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். மாமனார், நாத்தனார் மெச்சுவார்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் ஈட்டுவீர்கள்.

சமயோஜித புத்தி தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்

னக்குழப்பம் விலகும். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு வரும். மாமியார் உங்களுக்கு உதவுவார். சொத்துப் பிரச்னைகள் தீரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய பாதை தெரியும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்

நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிக்களிடமிருந்து கிடைக்கும். பணபலம் உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேருவார்கள். கணவரின் பாராமுகம் மாறும். இயக்கம், சங்கம் போன்றவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். பிள்ளைகளின் ஓவியம், இசைத் திறமையை வளர்ப்பீர்கள். மாமியார், நாத்தனாரால் இருந்த தொந்தரவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

கடின முயற்சியால் காரியம் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்

குடும்பத்திலிருந்த சச்சரவுகள் நீங்கும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் நேரமிது.