Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மே 26-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மே 26-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்

திர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள் மாமியாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மகளின் கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி பாராட்டுவார்.

புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரமிது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்

ரிஷபம்

திறமைகள் யாவும் வெளிப்படும். புதிய டிசைனில் நகை வாங்கத் திட்டமிடுவீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தது போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். கணவருக்கு அலைச்சல் உண்டாகும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாமியாரை அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும்.

தன்னடக்கத்தால் சாதிக்கும் நேரமிது!

ராசி பலன்கள்

மிதுனம்

சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். முகப்பொலிவு கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கணவர் உங்களுக்கு உதவிகரமாக சில பணிகளைச் செய்வார். பிள்ளைகளால் செல்வாக்கு கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் நிதானம் அவசியம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களால் அலைச்சல் வரும். செலவுகள் தொடரும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும் பொறுமை அவசியம்.

மன உறுதியால் வெற்றி பெறும் நேரமிது!

ராசி பலன்கள்

கடகம்

கோபம் குறையும். படபடப்பு நீங்கும். மனத்தில் தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நல்லவிதமாக முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் பக்கபலமாக இருப்பார். மகள் உங்களைப் புரிந்துகொள்வார். சொத்துப் பிரச்னைகள் தீரும். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு கூடும்.

அச்சம் விலகி ஆதிக்கம் செலுத்தும் நேரமிது!

ராசி பலன்கள்

சிம்மம்

சொத்து வாங்குவீர்கள். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்கத் திட்டமிடுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். சகோதரரின் மனம் மாறும். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர்கள், தோழிகளைச் சந்திப்பீர்கள். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னிச்சை யாக முடிவெடுக்க வேண்டாம்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் நேரமிது!

ராசி பலன்கள்

கன்னி

திலும் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். மகனுக்கு வேலை கிடைக்கும். உங்களின் ரசனைக்கேற்ற சொத்து அமைவதுடன், வங்கிக் கடனும் கிடைக்கும். பழைய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். மாமனார், மாமியார் ஆதரவாக இருப்பார்கள். புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

தொடர்முயற்சியால் சாதிக்கும் நேரமிது!

ராசி பலன்கள்

துலாம்

சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கௌரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவர் வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வார். பிள்ளைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நாத்தனார், மாமியாருடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நேரமிது!

ராசி பலன்கள்

விருச்சிகம்

புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். வீடு, வாகன வசதி பெருகும். கணவர் சில நேரங்களில் கோபமாகப் பேசினாலும், அரவணைத்துப் போவது நல்லது. பிள்ளைகளை அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்திலும் பாடப்பிரிவிலும் சேர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

ஒருபடி முன்னேறும் நேரமிது!

ராசி பலன்கள்

தனுசு

லம் பலவீனத்தை உணர்வீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

வளைந்துகொடுத்து வெற்றிபெறும் நேரமிது!

ராசி பலன்கள்

மகரம்

திர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணத்தட்டுப்பாட்டைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். நட்புவட்டம் விரிவடையும். விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை யின்றி எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

அறிவுப்பூர்வமாகச் செயல்படவேண்டிய நேரமிது!

ராசி பலன்கள்

கும்பம்

நீண்ட நாளாகத் தள்ளிப்போன சவாலான விஷயங்களைச் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புண்ணியதலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் விரைவில் இடமாற்றம் உண்டு.

நினைத்ததைச் சாதித்துக்காட்டும் நேரமிது!

ராசி பலன்கள்

மீனம்

திர்ப்புகள் மறையும். திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சொத்து தகராறு தீரும். வழக்கு சாதகமாகும். வாகனப்பழுது நீங்கும். வீடு வாங்குவது, விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனாலும் செலவுகள் துரத்தும். உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.

தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் நேரமிது!