Published:Updated:

ராசி பலன்கள்...

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

நவம்பர் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை

ராசி பலன்கள்...

நவம்பர் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்...

மேஷம்: பணவரவு அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும். கணவன் மனைவி உறவு பலப்படும்.சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் அடுத்தடுத்து செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். சமையலறை சாதனங்கள் பழுதாகி சரியாகும். மாமியார் ஒத்தாசையாக இருப்பார். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

தைரியத்தால் சாதிக்கும் நேரமிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்...

ரிஷபம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். மகனின் அலட்சியப் போக்கு மாறும். தோழியிடம் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நாத்தனார் உதவுவார் என்றாலும் மாமியார் உங்களை விமர்சிப்பார். மின்னணு சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். உறவினர்கள், நண்பர்களால் அலைச்சல்களும் செலவுகளும் இருந்துகொண்டே இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.

பழைய பிரச்னை தீரும் நேரமிது.

ராசி பலன்கள்...

மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன வசதி பெருகும். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். வராது என்றிருந்த பணம் வரும். நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

ஒருபடி முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்...

கடகம்: நினைத்தது நிறைவேறும். பூர்வீகச் சொத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும். கணவரின் புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். மாமியார் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்...

சிம்மம்: சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். சகோதரிக்குத் திருமணம் முடியும். சகோதர வகையில் பிரச்னை வரும். விலையுயர்ந்த பொருள்கள் தொலைந்து போக வாய்ப்பிருக்கிறது கவனம். வியாபாரத்தில் எதிர்பாராத புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

சொந்தங்களால் பயனடையும் நேரமிது.

ராசி பலன்கள்...

கன்னி: சாதுரியமாகப் பேசி சாதிப்பீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். நட்பு வட்டம் விரியும். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். சகோதரர்களிடையே சச்சரவு வந்து நீங்கும். யாரையும் பகைத்துக்கொள்ளா தீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துகொண்டே இருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.

அலுப்பு, சலிப்பைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்...

துலாம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள். சகோதரர்கள் ஒத்துழைப்பார்கள். கடன் பிரச்னைகளை இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். மாமனார், நாத்தனார் வகையில் மகிழ்ச்சி தங்கும். அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

பேச்சைக் குறைத்துகொள்ள வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்...

விருச்சிகம்: புகழ், கௌரவம் கூடும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு மாறுவது, கட்டுவது சாதகமாக அமையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். பிள்ளைகளின் மனத்தில் இருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

திட்டமிடுதலால் வெற்றியடையும் நேரமிது.

ராசி பலன்கள்...

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். பணபலம் உயரும். பழைய கடன் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரின் புது முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்தால் ஆதாயமடைவீர்கள். ஆபரணம் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் உயர் பதவியில் அமர்வீர்கள்.

வருமானம் உயரும் நேரமிது.

ராசி பலன்கள்...

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. ஓரளவு பணம் வரும். கணவர் அவ்வப்போது சலித்துக்கொள்வார். சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உத்தியோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

வாக்குறுதிகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்...

கும்பம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டைச் சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். கணவரின் சந்தேகத்தைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழியைச் சந்திப்பீர்கள். மாமியார், நாத்தனார் உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் சுலபமாக முடியும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்...

மீனம்: திட்டமிட்டு காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கல்வியாளர்களின் நட்பால் புகழ் கூடும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். பிள்ளைகளின் கூடாநட்பு விலகும். பாதிப்பணம் தந்து முடிக்காமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.

திருப்பங்கள் உண்டாகும் நேரமிது.