Published:Updated:

ராசி பலன்கள்...

அக்டோபர் 13 முதல் 26 வரை

பிரீமியம் ஸ்டோரி

மேஷம்:

ராசி பலன்கள்...

உங்கள் செயலில் வேகம் கூடும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். பணவரவு அதிகரிக்கும். கணவருடன் இருந்த பனிப் போர் நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வீடு வாங்குவீர்கள். நாத்தனார் உதவியாக இருப்பார். உறவினர்கள், நண்பர்களால் பிரச்னைகள், வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ரிஷபம்:

ராசி பலன்கள்...

வால்களில் வெற்றி பெறுவீர்கள். கணவரின் திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் கோபப்படுவீர்கள். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சகோதரர்கள் உதவுவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். நாத்தனார், மச்சினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஏதேனும் குறை கூறினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

தன் பலவீனத்தை உணரும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்:

ராசி பலன்கள்...

செல்வம், செல்வாக்கு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நேரமிது.

கடகம்:

ராசி பலன்கள்...

டினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். தோற்றப் பொலிவுகூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி உண்டு. வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் தாமாக வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கடையை அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

அந்தஸ்து ஒருபடி உயரும் நேரமிது.

சிம்மம்:

ராசி பலன்கள்...

நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். மாமியார் புகழ்வார். வியாபாரம் சூடு பிடிக்கும். வரவு உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிகாரிகள் உங்களை நம்புவார்கள்.

சாதித்துக்காட்டும் நேரமிது.

கன்னி:

ராசி பலன்கள்...

வால்களில் வெற்றி கிட்டும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். கணவர் உங்களை முழுமையாக நம்பிச் சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். நாத்தனார் உதவுவார். பேச்சில் கோபம் காட்ட வேண்டாம். மாமியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். பள்ளி, கல்லூரிக் காலத் தோழியைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும்.

விட்டுக் கொடுப்பதால் வெற்றி பெறும் நேரமிது.

துலாம்:

ராசி பலன்கள்...

ங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சகோதரி மனம்விட்டுப் பேசுவார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது.

விருச்சிகம்:

ராசி பலன்கள்...

பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவரின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக் காட்ட வேண்டாம். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் மோதல் வேண்டாம்.

எதிர்ப்புகளை எளிதாகச் சமாளிக்கும் நேரமிது.

தனுசு:

ராசி பலன்கள்...

திலும் வெற்றி கிட்டும். பணவரவு அதிகரிக்கும். கணவர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். மாமனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வீண்செலவைக் குறைத்துக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. நல்ல வாய்ப்புகளும் தேடி வரும்.

நினைத்ததை நிறைவேற்றும் நேரமிது.

மகரம்:

ராசி பலன்கள்...

தமாகப் பேசி சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்தங்கள் மதிப்பார்கள். மாமியார் உதவுவார். பதவிகள் தேடி வரும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும்.

சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் நேரமிது.

கும்பம்:

ராசி பலன்கள்...

நிர்வாகத் திறன் கூடும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். வியாபாரத்தில் தரமான பொருள்களை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத் தில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

தடைகள் நீங்கும் நேரமிது.

மீனம்:

ராசி பலன்கள்...

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். புது வீடு கட்டுவீர்கள். கணவர் நேசிப்பார். ஆனாலும் உங்களுக்குள் வாக்குவாதங்களும் வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்போங்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.

மதிப்பு மரியாதை கூடும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு