Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

செப்டம்பர் 15 முதல் 28 வரை

ராசி பலன்கள்

செப்டம்பர் 15 முதல் 28 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்:

திலும் சாதிப்பீர்கள். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது வீடு கட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். கணவர் சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திணறுவார். உங்கள் அனுபவ அறிவால் கணவரை வழி நடத்துவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்

ரிஷபம்:

தையும் சாமர்த்தியமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். விலகிச்சென்ற சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். மாமனார், மாமியாரின் மனது மாறும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளின் போக்கைக் கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

தன்கையே தனக்கு உதவி என்பதை உணர்வீர்கள்.

ராசி பலன்கள்

மிதுனம்:

வாலான காரியங்களைக்கூட சமயோஜித புத்தியால் எளிதாக முடிப்பீர்கள். புது வேலைக்கான முயற்சி வெற்றிபெறும். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவருக்கு ஆதரவாக இருப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நாத்தனார் ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் செல்வம், செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை யார் எதிர்த்துப் பேசி னாலும் பதற்றப்படாதீர்கள்.

சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும்.

ராசி பலன்கள்

கடகம்:

திர்பார்ப்புகள் எளிதாக முடிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட அரசாங்க அனுமதி கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. கணவரின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மாமியார், நாத்தனார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பழைய தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைப் புகழ்வார்கள்.

புதிய பொறுப்பும் வாய்ப்புகளும் வரும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்:

நீண்ட நாள் திட்டங்கள் நிறை வேறும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய பிரச்னைகளுக்குப் புது வழியில் தீர்வுகள் யோசிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவருக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையைச் சரி செய்வீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் சுமுகமாக முடியும். மறைமுகமாகச் செயல்பட்டவர்களை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும்.

இங்கிதமான பேச்சால் உயரும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி:

னதைரியம் கூடும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மாமியார் சில பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பார். உறவினர், தோழிகள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்:

ங்களின் அணுகு முறையை மாற்றிக்கொள்வீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கணவருக்கு நெருக்கடி நேரத்திலும் நிதானமாகச் செயல்படும் மனப்பக்குவத்தைத் தருவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

தலைநிமிர்ந்து நடக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

திலும் வெற்றி அடைவீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. கணவரின் ரசனைக்கேற்ப உங்களின் ஆடை, அணிகலன்களை அமைத்துக் கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைத் தர வழி பிறக்கும். மாமியார் குறைபட்டுக் கொள்வார் என்றாலும் உடல் நலத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும்.

ராசி பலன்கள்

தனுசு:

ங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வேடிக்கையாகப் பேசி விபரீதங்களில் சிக்கிக்கொள்ளும் கணவரின் போக்கை மாற்றுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்குப் புது வேலை அமையும். மாமனார், மாமியாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் தேங்கிக்கிடக்கும் சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறுவீர்கள்.

ராசி பலன்கள்

மகரம்:

தொட்டது துலங்கும். அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வீடு வாங்க, கட்ட வங்கிக்கடன் உதவி கிடைக்கும். கணவரின் முன்கோபத்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து அவரை நெறிப்படுத்துவீர்கள். தங்க ஆபரணம் வாங்கு வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். மச்சினர், நாத்தனார் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

ஈகை குணத்தால் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

கும்பம்:

டைபட்ட வேலைகள் முடியும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பணவரவு திருப்தி தரும். வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். கணவரின் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வழி செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வர். மாமனார், மாமியார் பாசமாக நடந்துகொள்வர். தோழிகளின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

முன்னேற்றம் காணும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

ற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நெடுநாள்களாக முடியாமல் இருந்து வந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். யாரை நம்புவதென்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மாமியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம்.

மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.