Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

செப்டம்பர் 1 முதல் 14 வரை

ராசிபலன்கள்

செப்டம்பர் 1 முதல் 14 வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்
ராசிபலன்கள்

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் கருத்தைக்கேட்டு சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

புதிய பாதையில் சென்று வெற்றிபெறும் நேரமிது.

ராசிபலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம்: புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஓரளவு பணவரவு உண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சொந்தங்கள் மதிப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. மாமியார், நாத்தனார் உறவில் விரிசல் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு தேடும் நேரமிது.

ராசிபலன்கள்

மிதுனம்: துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் ஆகும். கணவர் உங்கள் வேலையைப் பகிர்ந்துகொள்வார். அயல்நாட்டுத் தொடர்புடையவர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மாமியார் உங்களுக்குச் சாதகமாக இருப்பார். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

வெற்றி வாய்ப்புகள் தொடங்கும் நேரமிது.

ராசிபலன்கள்

கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். பயணங்களில் முக்கியச் சந்திப்புகள் நிகழும். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொள்வீர்கள். உறவினர் வருகை அதிகரிக்கும். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

திடீர்த் திருப்பங்களைத் தரும் நேரமிது.

ராசிபலன்கள்

சிம்மம்: பணவரவு அதிகரிக்கும். வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவருக்கு இருந்த தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். வாகனம் பழுதாகி சரியாகும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

நேர்மறை எண்ணங்களால் வெற்றிபெறும் நேரமிது.

ராசிபலன்கள்

கன்னி: அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நல்ல வீடு அமையும். கணவர் பாசம் காட்டுவார். இருவரும் கலந்து பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். அவ்வப்போது வீண் வாக்குவாதம், டென்ஷன், மன இறுக்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

இழுபறி நிலைமாறும் நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசிபலன்கள்

துலாம்: சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வளரும். ஓரளவு பணவரவு உண்டு. பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரிக்கு இருந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித் தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசிபலன்கள்

விருச்சிகம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். புதுச் சொத்து வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். மாமனார், மாமியாருக்கு ஆலோசனை வழங்குவீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் அதிரடியாக வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சகிப்புத்தன்மையால் வெற்றிபெறும் நேரமிது.

ராசிபலன்கள்

தனுசு: எதிலும் உங்கள் கை ஓங்கும். தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். பழைய சொத்து கைக்கு வரும். கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களை ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர் களின் வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்வீர்கள்.

ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசிபலன்கள்

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்களின் படைப்புத் திறன் வளரும். எதிர்பார்த்த பணம் வரும். ஒதுங்கியவர்கள் வலிய வந்து பேசுவார்கள். கணவர் உங்களைப் புகழ்ந்துபேசுவார். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைக்கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

வெற்றிகள் தொடரும் நேரமிது.

ராசிபலன்கள்

கும்பம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். பள்ளி, கல்லூரிக் காலத் தோழிகளின் பாசமான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களை கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்கு வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள்.

நிதானம் தேவைப்படும் நேரமிது.

ராசிபலன்கள்

மீனம்: சவாலில் வெற்றிபெறுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அவ்வப்போது மாமியார் கோபப்படுவார். நாத்தனாரின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மௌனத்தால் சாதிக்கும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism