Published:Updated:

ராசி பலன்கள்...

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை

ராசி பலன்கள்...

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்...

மேஷம்:

திரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் படிப்பில் முன்னேறு வார்கள். கணவர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உறவினர், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்...

ரிஷபம்:

போராட்டங்களைச் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். தைரியம் கூடும். சொத்து வாங்குவீர்கள். மாமனார், நாத்தனார் அன்பாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உறவினர்களில் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை, டென்ஷன், தோழிகளுடன் பகை வந்து செல்லும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

திடீர்ச் செலவுகளால் திணறும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசி பலன்கள்...

மிதுனம்:

ணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலர் வசதியுள்ள வீட்டுக்கு குடிபுகுவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உங்களின் பிரச்னைகள் மற்றவர்களுக்குப் புரியவில்லையே என வருந்துவீர்கள்.

மகிழ்ச்சி கூடும் நேரமிது.

ராசி பலன்கள்...

கடகம்:

குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். கணவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். மகனுக்கு வேலை அமையும்.

வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மாமியார், நாத்தனார் வகையில் மனத்தாங்கல் இருந்தாலும் உறவு பாதிக்காது. வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

விருப்பு வெறுப்பின்றிச் செயல்பட வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்...

சிம்மம்:

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தவிர்க்க முடியாத செலவுகளால் அவ்வப்போது திணறுவீர்கள். கணவர் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். உங்களின் புதிய திட்டங்களை வரவேற்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். நட்பு வட்டம் விரியும். மாமனார், மாமியார் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார்கள். வியாபாரத்தில் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

இங்கிதமான பேச்சால் இலக்கை எட்டும் நேரமிது.

ராசி பலன்கள்...

கன்னி:

முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். திடீர்ப் பணவரவு உண்டு. கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பழைய கடன் பிரச்னையிலிருந்து தப்பிக்க புதிய வழி கிடைக்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம்.

அமைதியாக இருக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்...

துலாம்:

ந்திரமாகப் பேசி பல நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவர் பாசம் காட்டுவார். இருவரும் கலந்துபேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வழக்கு சாதகமாகத் திரும்பும். நாத்தனாருக்கு இருந்த பிரச்னையைத் தீர்த்துவைப்பீர்கள். தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய துறையில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

அலைச்சலுடன் ஆதாயம் தரும் நேரமிது.

ராசி பலன்கள்...

விருச்சிகம்:

நினைத்தது நிறைவேறும். செல்வந்தர்கள் அறிமுகமாவார்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். நல்ல வேலை அமையும். கணவரிடம் பக்குவமாகப் பேசி அவரின் திறமையை மெருகேற்றுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உறவினர், தோழிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பழைய வீட்டை இடித்துக்கட்டுவீர்கள். குற்றம் கூறிக்கொண்டிருந்த மாமியார், நாத்தனார் மனசு மாறும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

சிக்கனமும் நிதானமும் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்...

தனுசு:

ல முறை முயற்சி செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் இப்போது முடியும். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். கணவரை நல்வழிப்படுத்துவீர்கள். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளிடம் உங்களின் பழங்கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சொத்து பிரச்னை ஓரளவு சாதகமாகும். நாத்தனாருடன் ஈகோ வரும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக்கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்...

மகரம்:

ரளவு நிம்மதி உண்டு. வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவருடன் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள். மாமியார், நாத்தனாருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்...

கும்பம்:

மயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் தன்னம்பிக்கை வெளிப்படும். கணவர் உங்களைப் பாராட்டுவார். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். அவ்வப்போது வீண் டென்ஷன், விரயம் வந்து செல்லும். அரசாங்க காரியங்கள் தள்ளிப்போய் முடியும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

செல்வம், செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்...

மீனம்:

திட்டமிட்ட காரியங்கள் உடனே முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர், தோழிகள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தை அன்பால் மாற்றுங்கள். மாமியாரிடம் வீண்வம்பு வேண்டாம். குறுக்குவழியைத் தவிர்ப்பது நல்லது. கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் கவலைப்படாதீர்கள்.

விவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism