Published:Updated:

கனவில் பழங்களைக் கண்டால் என்ன பலன்?

கனவு
பிரீமியம் ஸ்டோரி
கனவு

வர இருக்கும் நிகழ்ச்சிகளை, சகுனங்கள் சுட்டிக்காட்டுவது போலவே ஒருவர் காணும் கனவுகளும் எதிர்கால நிகழ்ச்சிகளைக் காட்டும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

கனவில் பழங்களைக் கண்டால் என்ன பலன்?

வர இருக்கும் நிகழ்ச்சிகளை, சகுனங்கள் சுட்டிக்காட்டுவது போலவே ஒருவர் காணும் கனவுகளும் எதிர்கால நிகழ்ச்சிகளைக் காட்டும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

Published:Updated:
கனவு
பிரீமியம் ஸ்டோரி
கனவு

? படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. எனக்கு இன்னும் சரியான வேலை அமையவில்லை. அதனால் திருமண முயற்சிகளும் தோல்வியடைகின்றன. எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும். திருமண பிராப்தி எப்போது?

- எம்.ராகவன், பெங்களூரு

! நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர் கள். உங்கள் ஜாதகத்துக்கு களத்திரஸ்தான அதிபதி குரு 12-ல் மறைந்திருக்கிறார். களத்திர காரகன் சுக்கிரனும் கன்னியில் நீசம் பெற்றுள்ளார். எனவே, திருமணம் நடைபெறுவதில் சில தடைகள் காணப்படுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வரவும். காலப்போக்கில் தோஷம் நிவர்த்தியாகி, திருமணம் நடைபெறும்.

தற்போது தங்களுக்கு 25 வயது ஆகிறது. 27 வயதுக்கு மேல் திருமணம் நடைபெறும். வேலைக்கும் திருமணத்துக்கும் சம்பந்தமில்லை. உத்தியோகத்தைப் பற்றிப் பார்க்கும்போது, குருவே ஜீவனஸ்தான அதிபதியாகி 12-ல் மறைந்திருக் கிறார். குருவுக்கு உரிய ப்ரீதி ஹோமம் செய்து, ஒன்பது வெள்ளிக்கிழமைகள் பசுவுக்கு அகத்திக் கீரை மற்றும் வாழைப்பழம் கொடுத்து வரவும். தங்களுக்கு இப்போது அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால், இந்த வருட இறுதிக்குள் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? எனக்கு ஸ்திரமான வேலையோ தொழிலோ அமையவில்லை. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

- ஏ.ராமு, திருவண்ணாமலை

! நீங்கள் அனுப்பியுள்ள விவரங்களைக் கொண்டு ஜாதகம் கணித்துப்பார்த்ததில், நீங்கள் ரிஷப ராசியில் பிறந்திருக்கிறீர்கள். உங்களுடைய லக்னம் விருச்சிகம். லக்னத்துக்கு உரிய செவ்வாய் 8-ல் பகை வீட்டில் மறைந்திருக் கிறார். 10-க்கு உடைய சூரியன் லக்னத்தில் நீசம் பெற்றிருக்கிறார். இதனால்தான் வேலை கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. இப்படியான அமைப்பு ஒருவகையில் குலதெய்வ வழிபாடு தடைப்பட்டதைக் குறிக்கும்.

குடும்பப் பெரியவர்களிடம் உங்கள் குலதெய்வம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு வழிபட்டு வரவும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய குலதெய்வ வழிபாடு ஒன்றே வழி.

உங்களின் குல தெய்வம் ஊருக்கு வடக்கில் உயரமான இடத்தில் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனவு
கனவு

? கனவுகளைக்கொண்டு பலன் சொல்ல முடியுமா? என் கனவில் அடிக்கடி பழங்கள் மற்றும் குயில் போன்ற பறவை களைக் காண்கிறேன். சுப விஷயங்களை உணர்த்தும் கனவுக் காட்சிகள் என்னென்ன என்று விளக்க முடியுமா?

- கே.வீரபாண்டியன், திசையன்விளை

! வர இருக்கும் நிகழ்ச்சிகளை, சகுனங்கள் சுட்டிக்காட்டுவது போலவே ஒருவர் காணும் கனவுகளும் எதிர்கால நிகழ்ச்சிகளைக் காட்டும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். உங்கள் கனவின் பலன்களை அறிந்துகொள்வோம்.

தங்களின் கனவில் குயில் மற்றும் பழங்களைக் காண்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இனிய குரல் எழுப்பி கூவும் குயிலைக் கனவில் கண்டால், வாழ்க்கைத் துணையால் யோகம் வரும். குயில் கூவுவது போன்று கனவு கண்டு ஒருவர் சட்டென விழித்து எழுந்தால், இனிய வாழ்க்கைத் துணை அமையும். திருமணமானவர் அவ்வாறு கனவு கண்டால், வாழ்க்கைத் துணைவர் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

பழங்கள், மலர்கள், ரத்தினங்கள், தயிர், பால், அரிசி நிரம்பிய பானைகள் ஆகியவற்றைக் கனவில் காண்பவர், வளமான வாழ்வை விரைவில் அடைவார்.

இதேபோல் இன்னும் பல சுப கனவுகள் உண்டு. சந்தனக் குழம்பு, சங்கு, முத்துகள், தாம்பூலம், ஜாதி மல்லிகை, செல்வம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதைப்போல் கனவு கண்டால் நல்லது நடக்கும். மாடி வீட்டில் நுழைவதுபோல் கனவு காண்பவர், சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரச யோகம் பெறுவார்.

நோயாளி ஒருவர் கனவில் சூரியனையோ அல்லது சந்திரனையோ பார்த்தால், அவர் விரைவில் குணமடைவார். நோயில்லாத ஒருவர் இதே கனவைக் கண்டால் நல்ல உடல்நலமும் செல்வமும் சேரும். நல்ல கனவுகள், சாதகமான கனவுகளைக் கண்டவர் உடனடியாக விழித்து எழுந்து குளித்து இறைவனை வணங்கி, பின் அந்த இரவு முழுவதும் தூங்காமலே கழிக்க வேண்டும். கெட்ட கனவுகளைக் காணநேரிட்டால், உடன் எழுந்து கை கால்களைச் சுத்தம் செய்து தெய்வ நாமத்தை 12 முறை உச்சரித்து வணங்க வேண்டும்.

? ராகு மற்றும் கேதுவின் ஆட்சி வீடு எது? ராகுவால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னென்ன? ஜாதகத்தில் ராகு பலம் குறைந்திருந்தால் என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

- எம். சுபத்திரா, திருநெல்வேலி-2

! ராகு, கேது நிழல் கிரகங்கள் என்பதால் அவர்களுக்கென ஆட்சி வீடுகள் இல்லை. இருந்தும் புதன் மற்றும் குரு வீடுகள் இவர்களுக்குச் சிறப்பானவை. ராகு என்றால் மறைத்தல்,

விழுங்குதல் என்று பொருள் உண்டு. உலக ஆசை களின் காரகர் ராகுவே. புகழ், பேராசை, மதிநுட்பம், விசித்திர பழக்கவழக்கங்கள், சரிகட்டும் வகையில் திறமையாக இயங்குதல், தொற்றுநோய்கள், பரவலாகப் பரவி தாக்கும் நோய்கள், ஞாபக மறதி, செயலற்ற நிலை ஆகிய யாவும் ராகுவோடு தொடர்புடையவையே.

மனத்தில் இறுக்கம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், எதிலும் ஆர்வம் இல்லாத நிலை, தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள், அயல் நாட்டில் இருக்கும்போது தொல்லைகள் ஏற்படுதல், தீய வழிகளில் பணத்தை இழத்தல், உடல்நலம் பாதிப்பு, திருடரால் பயம், வழக்கு பிரச்னைகள், தீய ஆவிகளால் பீடிக்கப்படுதல் போன்றவை ராகு தோஷத்தால் ஏற்படும் பலன்களாகும்.

சிவன், துர்கை மற்றும் பைரவரை பூஜை செய்து வணங்குதல், காலபைரவாஷ்டகம் துதித்தல், எண்முக ருத்ராட்சம் அணிதல், சனிக்கிழமைகளில் உபவாச விரதம் மேற்கொள்ளுதல், தேங்காய், உளுந்து, ஆகியவற்றை ஏழைகளுக்குச் சனிக்கிழமையன்று தானம் செய்தல் ஆகியவற்றால் ராகு தோஷம் நீங்கி நலம் பெறலாம்.

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism