Published:Updated:

குழந்தை பாக்கியம் எப்போது?

குழந்தை பாக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை பாக்கியம்

உங்கள் ஜாதகம் ஒரு வகையில் நன்றாகத்தான் இருக்கிறது.

குழந்தை பாக்கியம் எப்போது?

உங்கள் ஜாதகம் ஒரு வகையில் நன்றாகத்தான் இருக்கிறது.

Published:Updated:
குழந்தை பாக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை பாக்கியம்

? எனக்கு நீண்டநாள்களாக நீரிழிவு உள்ளது. இதிலிருந்து விடுபட ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை - 20

! ‘நோய் என்பது பல காரணங்களினால் வந்தாலும், சாஸ்திரப்படி ‘ஜன்மாந்தர கிருதம் பாவம் வியாதி ரூபேண ஜாயதே’ என்று பூர்வஜன்ம பாவங்களின் விளைவாகவே நோய்கள் ஏற்படுகின்றன.

உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தோம். ஜாதகம், நல்ல ஜாதகம்தான். நீரிழிவுக்குரிய காரகரான சுக்கிரன், ராகு ஆகியோர் 6-ம் வீட்டில் அமையப்பெற்றுள்ளார்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் 6-ம் வீட்டில் அமையப்பெற்றிருப்பதும், துலாம் ராசியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமையப்பெறுவதும், காலபுருஷ தத்துவத்தின்படி ஏழாவது ராசியாக உள்ள துலா ராசியில் பிறந்தவர்களும் பொதுவாக நீரிழிவுக்கு ஆட்படக்கூடும் என்கிறது சாஸ்திரம். துலா ராசியின் அதிபதியான சுக்கிரன் நீர்க்கோள் என்று சொல்வார்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய்களைத் தரக் கூடியவர். மேலும், உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கிறார். அவர், ராசி அதிபதியாகவும் இருப்பதால் நீரிழிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் 6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டிலும், 8-ம் வீட்டு அதிபதி 6-ம் வீட்டிலும் இடம்பெற்றிருப்பதும் நீரிழிவை ஏற்படுத்தக்கூடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுக்கிரன், சந்திரன், குரு போன்ற கோள்களின் அமைப்பைப்பொறுத்தே நீரிழிவின் தன்மை அமைகிறது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் 6-வது வீடாக அமையப்பெற்றால், இது வரக்கூடும் என்று ஒரு ஸ்லோகம் கூறுகிறது. புதனுக்கு சூரியனின் சம்பந்தம் இருந்தாலும் நீரிழிவு வரக்கூடும். தற்போது தங்கள் ஜாதகத்தில் புதன் தசையில் சூரியனின் புக்தி 7.6.2020 வரை நடைபெறுகிறது.

குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம்

நீரிழிவு வருவதற்கான காரணம் பற்றி கர்ம விபாகம் என்ற நூலில் பெண்களின் சாபமே பிரதானமானதாக இருக்கிறது. இந்த நோயைத் தணிப்பதற்கு ஆயுர்வேதத்தில் கடங்கடாதி கஷாயம் போன்ற பல மருந்துகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நோயில் இருந்து விடுபடுவதற் காக மூன்று முறை சாந்திராயண விரதம் என்ற விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். புருஷ சூக்தம், சஹஸ்ரநாமம் போன்றவற்றை ஜபித்து ஹோமம் செய்யலாம். வசதி படைத்தவர்கள் பல தானங்களைச் செய்ய வேண்டும் என்று கௌதம ரிஷி கூறியுள்ளார்.

உணவைப் பொறுத்தவரை அசைவம், மது, எண்ணெய், நெய், புளிப்பான வஸ்துக்கள், பால், இனிப்பு வகைகள், கரும்புச்சாறு போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? எந்த வேலையும் நீண்டநாள் நிலைத் திருப்பதில்லை. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்கவும் முடியவில்லை. என் எதிர்காலம் எப்படி இருக்கிறது?

ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை - 33

! உங்கள் ஜாதகம் ஒரு வகையில் நன்றாகத்தான் இருக்கிறது. தனஸ்தான அதிபதியான சனி, 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமைந்திருக்கிறார். இந்த அமைப்பைச் சிறப்பான தனயோகம் என்று கூறுவார்கள். இருந்தாலும், நான்கு கிரகங்கள் சேர்ந்து சுகஸ்தானமான 4-ம் வீட்டில் இருப்பதால் சந்நியாச யோகம் என்னும் ஒருவித விரக்தி யோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து 6-ம் வீட்டில் மறைந்திருக்கிறார்கள். சுகஸ்தான அதிபதியும் லாபஸ்தான அதிபதியுமான செவ்வாய் மறைந்திருப்பதாலும், மனகாரகனாகிய சந்திரன் மறைந்திருப்பதாலும் உலக சௌகர்யங்களை அடைவதில் தடைகள் ஏற்படுகிறது. இருந்தாலும் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் காரணத் தினால், கண்டிப்பாக நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அளவு, மிதமான பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

? கடந்த வருடம் டிகிரி படித்து முடித்துள்ளேன். இன்னும் சரியான வேலை அமையவில்லை. எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்?

எஸ்.அன்பழகன், ராணிப்பேட்டை

! உங்கள் ஜாதகத்தில் 10-ம் வீடாகிய கர்மஸ்தானத்தில் ஐந்து கோள்களின் சேர்க்கை உள்ளது. ஒரு கிரகம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். இதுபோன்ற அமைப்பு இருப்பது சற்று கஷ்டம்தான். இருப்பினும் தாங்கள் இப்போதுதான் படிப்பை முடித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனவே, தங்களுக்கு 25 வயதுக்கு மேல் இருக்காது. தற்போது தங்களுக்கு சனி தசை நடந்து வருகிறது. சனியானவர் செவ்வாயுடன் சேர்ந்துள்ளார். இதை அக்னிமாருத யோகம் என்று கூறுவார்கள். சிறப்பாகச் செய்ய வேண்டும், வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள். சனி மந்தன் என்பதால் அப்படியெல்லாம் உடனே நடந்துவிடாது. நீங்கள் சற்று பொறுமையாக இருந்தாலே சிறப்பான வேலையும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும்.

? எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. எல்லோரும் இதுபற்றிக் கேட்பது வருத்தமாக இருக்கிறது. எனக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்?

கலைச்செல்வி, திருச்சி - 2

! “நீங்கள் கவலையே பட வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் புத்திரகாரகராகிய குரு லக்னத்தில் இருந்துகொண்டு, புத்திரஸ்தானமான ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். கண்டிப்பாகக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 11.6.2021-க்கு மேல் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு ஏற்படவே செய்யும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism