Published:Updated:

கேள்வி - பதில்:`பிள்ளை வரம் கிடைக்க பரிகாரம் உண்டா ?’

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

பிள்ளைப் பேறின்மைக்கு பல தோஷங்கள் காரணம் ஆகின்றன. அவற்றுள் முக்கியமானது நாக தோஷம்.

? கலைத் துறையில் சாதிக்க விரும்பு கிறேன். என் ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா?

-கே.வினோத் ராம், கோவை-2

ஒருவருக்குச் சடுதியில் பெரும் புகழையும் செல்வத்தையும் எளிதில் பெற்றுத் தருவது கலைத் துறை. இந்தத் துறையில் ஒருவர் ஜொலிக்க வேண்டுமெனில் அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் வலுப்பெற்றிருக்கவேண்டும்.

தங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் 9-ல் வலிமையாக இருந்தாலும், அது சூரியனின் வீடு என்பதால் பகைவீடாக அமைந்துவிட்டது. எனவே, சில தடைகள் ஏற்படவே செய்யும். எனினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டால் உரிய பலன் கிடைக்கும். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரைச் சேவித்து வரலாம். மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது கலைவாணி கோயில் கொண்டிருக்கும் கூத்தனூருக்குச் சென்று, அவளை வணங்கி வழிபட்டு வாருங்கள்; நல்ல சேதி தேடிவரும்.

கேள்வி - பதில்:`பிள்ளை வரம் கிடைக்க பரிகாரம் உண்டா ?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

? பிள்ளைப் பேறின்மைக்கு எவ்விதமான தோஷங்கள் காரணம். அந்த தோஷங்கள் நீங்க பரிகாரம் உண்டா?

- கே.கீர்த்தனா, செங்கல்பட்டு

!பிள்ளைப் பேறின்மைக்கு பல தோஷங்கள் காரணம் ஆகின்றன. அவற்றுள் முக்கியமானது நாக தோஷம். நாகத்தைக் கொல்லுவது, பாம்புப் புற்றை இடிப்பது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படுகிறது. தாயாரை சரியாக கவனிக்காமல் விட்டு, அவரின் சாபத்தைச் சம்பாதித்தாலும் குழந்தை பிறக்காது.

மனைவியையே சரியாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் பார்யாள் மூலம் தோஷம் ஏற்படும். பசுவைக் கொன்றாலும் கோ தோஷம் உண்டாகி அதன் காரணமாகப் பிள்ளை பிறப்பது தடைப்படும். இப்படி நிறைய தோஷங்கள் உண்டு. இவற்றைக் கண்டறிந்து தோஷத்துக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும். தோஷங்களால் உண்டாகும் தடை நீங்க இறையருள் துணை நிற்கும். தேவர்களுக்குப் பிடித்தமான ஹோமங்களைச் செய்வதால் கர்ம வினைகள் மாறுகின்றன. ஹோமங்களில் குறிப்பிடத்தக்கது சந்தான கோபால ஹோமம். குழந்தையாக இருக்கிற கிருஷ்ண பரமாத்மாவை இதில் பூஜிக்கி றோம். இந்த ஹோமத்தில் இரண்டு மந்திரங்கள் உள்ளன. முதலாவது,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் கௌம்

தேவகீ சுத கோவிந்தா

வாசுதேவ ஜெகத்பதே

தேகிமே தநயம் க்ருஷ்ணா

த்வாமகம் சரணம் கத:

கருத்து: ‘தேவகியின் மகனாக இருக்கக் கூடிய வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக் கூடிய பகவானே, எனக்கு ஒரு நல்ல மகனைக் கொடு. அதற்காக நான் உன்னையே சரணம் அடைகிறேன்’ என்று வேண்டுகிறோம்.

அடுத்த மந்திரம்:

தேவ தேவ ஜெகந்நாதா கோத்ர வ்ருத்தி தரப்ரபோ

தேகிமே தநயம் சீக்ஷம் ஆயுஷ் மந்தம் யசஸ்விநம்

‘தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் ஜகந் நாதனாகவும் இருக்கும் பகவானே, என் குலம் அபிவிருத்தி அடைவதற்காக எனக்கு சீக்கிரமே மகனைக் கொடு. அதுவும் ஆயுள் அதிகம் இருக்கக் கூடிய மகனைக் கொடு. நல்ல சுபாவத் தோடு இருப்பவனைக் கொடு. அவன் என் கோத்திரத்தை விருத்தி செய்யட்டும். அப்படிப்பட்ட மகனைக் கொடு’ என்று இரண்டாவது மந்திரத்தால் வேண்டுகிறோம்.

ஆக, இந்த ஹோமத்தின் மூலம் தோஷங்கள் நீங்கும்; குழந்தை வரம் விரைவில் ஸித்திக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? மகனுக்கு வேலை வாய்ப்பு தடைப்பட்டு வருகிறது. ஜாதகப்படி அவனுக்கு வேலை யோகம் எப்படி?

- மா. பெரியகருப்பன், தேனி

!தங்கள் மகனின் ஜாதகத்தில் பெரிய குறைகள் இல்லை. எனினும் சந்திரனின் நிலை, மகனின் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத் தும் விதம் அமைந்துள்ளது. மேலும், பாப கோள்கள் தன ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் தனக் காரகராகிய குரு 12-ல் மறைந்திருப்பதாலும், சற்றுச் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனினும், சுக பாக்கியாதிபதியாகிய சுக்கிரனின் நிலை சற்று சாதகமாக உள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் மனத்துக்கு ஏற்ற நல்ல வேலை அமையும். இப்போதைக்கு, கிடைக்கும் வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள்.

? தொடர்ந்து கடன் பிரச்னைகள் வாட்டு கின்றன. எனது ஜாதகப்படி பொருளாதார நிலை உயர வாய்ப்பு உண்டா. ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- கே.ராமமூர்த்தி, திருநெல்வேலி-3

!ஒருவருடைய வாழ்க்கை வசதிகளைக் குறிப்பிடும் இரண்டு யோகங்கள் உண்டு. அவை: குபேர யோகம், தரித்திர யோகம்.

குபேர யோகத்தைப் பொறுத்தவரை, தன ஸ்தானம் (2-ம் இடம்) பாக்கிய ஸ்தானம் (9-ம் இடம்) ஆகியவற்றை ஆராய வேண்டும். அதேபோல், லாப ஸ்தானம் எனப்படும் 11-ம் இடத்தையும் பார்க்கவேண்டும். 11-க்கு உடைய வரும் 2-க்கு உடையவரும் பரிவர்த்தனை பெற்றி ருப்பதும் குபேர யோகத்தைக் குறிப்பிடும்.

மேற்காணும் இடங்களோடு சுக ஸ்தானமாகிய 4-ம் இடத்தையும் நாம் கவனிக்கவேண்டும். ஜாதகத்தில் 2 மற்றும் 4 ஆகிய வீடுகளில் ராகு, கேது, சனி, செவ்வாய், தேய்பிறைச் சந்திரன் ஆகிய கோள்கள் இருந்தால், அது தரித்திர யோகத்தைக் குறிப்பிடும்.

உங்கள் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் இருக்கும் சனி பகவானை, 10-ல் இருக்கும் குருபகவான் 7-ம் பார்வையால் பார்க்கிறார்.

ஆகவே, நீங்கள் லட்சுமி குபேர ஹோமம் செய்வதுடன், வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால், வறுமை நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com