Published:Updated:

`குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம் என்ன?’

குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம்

ஒருவருடைய திருமணத்துக்கும் அவருடைய வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பே இல்லை

`குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம் என்ன?’

ஒருவருடைய திருமணத்துக்கும் அவருடைய வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பே இல்லை

Published:Updated:
குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம்

?எனக்குத் திருமணமாகி ஆறு வருடங் கள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- ராதா கோபிநாத், மும்பை - 1

! நீங்கள் துலா லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 5-ல் குரு உள்ளார். புத்திரக் காரகர் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது, புத்திர தோஷமுள்ள அமைப்பாகும். மேலும், அவர் 3 மற்றும் 6 ஆகிய இடங்களுக்கும் உரியவராகிறார். மறைவு ஸ்தானத்துக்கு உரிய குரு 5-ல் இருப்பதும் தோஷம்தான்.

அதேநேரம், ஜாதகத்தில் குருவுடன் செவ்வாய் இணைந்திருக்கிறார். இந்த அமைப்பு குருமங்கள யோகத்தைத் தந்திருக்கிறது. எனவே, உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை குழந்தைப் பாக்கியம் உண்டு. என்றாலும், தங்களுடைய கணவரின் ஜாதகத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். நீங்கள் உங்கள் கணவரின் ஜாதகத்தை அனுப்பவில்லை என்றாலும், உங்கள் ஜாதகத்தில் புத்திரயோகம் இருப்பதால், அவருடைய ஜாதகத்திலும் அதற்கேற்ற கிரக அமைப்புகளே இருக்கும்.

`குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம் என்ன?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனினும், ஜாதகத்தில் புத்திரதோஷம் இருப்பதால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும் வகையில், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் செய்வது நல்லது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

?கடந்த பல வருடங்களாகவே பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எவ்வளவுதான் உழைத்துச் சம்பாதித்தாலும் பணப்பற்றாக்குறை இருப்ப துடன், கடன் வாங்கவும் நேரிடுகிறது. பணக் கஷ்டத்திலிருந்து விடுபட, நான் என்ன செய்ய வேண்டும்?

- எஸ்.பாலகிருஷ்ணன், மன்னார்குடி

! ஜோதிட சாஸ்திரத்தில் பரிவர்த்தனை யோகம், கஜகேசரி யோகம், குருசந்திர யோகம், குருமங்கள யோகம் என்று பல யோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில், ஒருவருடைய வாழ்க்கை வசதிகளைக் குறிப்பிடும் இரண்டு யோகங்கள் உண்டு. அவை: குபேர யோகம், தரித்திர யோகம் ஆகியவை.

குபேர யோகத்தைப் பொறுத்தவரை, தனஸ்தானம் எனும் 2-ம் இடத்தையும் பாக்கிய ஸ்தானம் எனப் படும் 9-ம் இடத்தையும் ஆராயவேண்டும். அதேபோல், லாப ஸ்தானம் எனப்படும் 11-ம் இடத்தையும் கவனிக்கவேண்டும். 2-க்கு உடையவரும் 9-க்கு உடையவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், அதேபோல் 11-க்கு உடையவரும் 2-க்கு உடைய வரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் குபேர யோகத் தைக் குறிப்பிடும். இந்த வகையில் பரிவர்த்தனை யோகம் அமையப்பெற்றவர்கள், மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட, பிற்காலத்தில் செல்வச்செழிப்பான வாழ்க்கையை அடைவார்கள். இங்கே முக்கியமாக சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்தையும் கவனிக்கவேண்டும்.

ஜாதகத்தில் 2 மற்றும் 4 ஆகிய வீடுகளில் ராகு, கேது, சனி, செவ்வாய், தேய்பிறைச் சந்திரன் ஆகிய கோள்கள் இருந்தால், அது தரித்திர யோகத்தைக் குறிப்பிடும். இப்படியான கிரகநிலைகளுடன் கூடிய ஜாதகக்காரர்கள், பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பிற்காலத்தில் வறுமைக்கு ஆட்பட நேரிடும். ஜாதகத்தில் குறிப்பிட்ட அந்த வீடுகள், குறிப்பிட்ட அந்த கிரகங்களின் சொந்த, உச்ச வீடாக இருந்தாலும் பாதிப்பு இருக்கவே செய்யும். ஆனால், அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் சனி இருக்கிறார். ஆனால், 10-ல் இருக்கும் குரு தன் 7-ம் பார்வையால் சனியைப் பார்க்கிறார். ஆகவே, நீங்கள் லக்ஷ்மிகுபேர ஹோமம் செய்வதுடன், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி, லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு வந்தால், வறுமை நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

?என் வயது 32. நல்ல வேலையில் - நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். சொந்த வீடு, கார் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. இருந்தும் திருமணம் தடைப்பட்டு வருகிறது. நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- எம்.குமரேசன், பழநி

! ஒருவருடைய திருமணத்துக்கும் அவருடைய வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பே இல்லை. ஒருவருடைய வசதி வாய்ப்புகளைக் குறிப்பிடும் கிரக அமைப்புக்கும் திருமண யோகத்தைக் குறிப்பிடும் கிரக அமைப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது.

வசதியான நிலையில் இருப்பவர்களுக்குத் திருமணம் தடைப்பட்டுத் திகழ்வதையும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுவதையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.

`குழந்தைப்பேற்றுக்கு பரிகாரம் என்ன?’

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை குருபலம் அவசியம். என்றாலும் களத்திர ஸ்தானம் எனும் 7-ம் இடமும் சுப வலிமை பெற்றிருக்கவேண்டும். லக்னத்துக்கு 7-ம் அதிபதியின் தசை நடைபெறும்போது, ஒருவருக்குத் திருமணம் நடைபெறக் கூடும். லக்னாதிபதி மற்றும் 7-ம் அதிபதி ஆகியோரின் வீடுகளில் குரு இருந்தாலும் திருமணத் தடை ஏற்படாது. 7-ம் வீட்டில் அசுப கிரகங்கள் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அவற்றுக்குச் சுபகிரகத்தின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருந்தால், தோஷம் விலகி திருமணம் நடைபெறும்.

நீங்கள் கடக லக்னம் மீன ராசியில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத் துக்கு 7-ம் வீட்டில் கேது, செவ்வாய் ஆகியோர் உள்ளனர். ஆனாலும், கடக லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கும் குருவின் பார்வை கேது, செவ்வாய்க்கு ஏற்படுவதால், வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. மற்றபடி பரிகாரம் எதுவும் தேவையில்லை.

?என் வாழ்க்கையில், நினைவு தெரிந்த நாளிலிருந்தே மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படுகிறது. எந்த வேலையிலும் என்னால் மனம் ஒன்றி ஈடுபட முடியவில்லை. என்ன பரிகாரம் - வழிபாடு செய்தால், என் மனம் அமைதி பெறும்?

- எஸ்.விஸ்வநாதன், சென்னை - 24

! மனோகாரகன் சந்திரன். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மிக நல்ல நிலையில் அமைந்திருக்கவேண்டும். ஜாதகத்தில் சந்திரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறாமலும் பகை, நீசம் அடையாமலும் இருக்கவேண்டும்.

அதேபோல், செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காரணம் செவ்வாய் ரத்தத்துடன் தொடர்புடையது. செவ்வாய் சாதகமாக இல்லாத நிலையில், ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருப்பதுடன், சந்திரனும் லக்னத்துக்கு 8-ல் மறைந்திருக்கிறார். இந்த அமைப்பு சிறப்பானதல்ல. எனவேதான் அடிக்கடி மன நிம்மதி இழந்து தவிக்கிறீர்கள்.

நீங்கள் ஒருமுறை, வைத்தீஸ்வரன்கோவிலுக்கும் திங்களூருக்கும் சென்று முறைப்படி வழிபட்டு வாருங்கள். மேலும், மாதம் ஒருமுறை உங்களின் பிறந்த தேதி அல்லது நட்சத்திரம் வரும் நாளில் திருப்பதிக்குச் சென்று திருவேங்கடவனை வணங்கி வழிபட்டு வாருங்கள். இங்ஙனம், குறைந்தது ஆறு மாதங்கள் திருப்பதிக்குச் சென்று வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

அதேபோல், தினமும் காலையில் வீட்டில் கோளறு பதிகம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து குறிப்பிட்ட தெய்வங்களை வழிபட்டு வாருங்கள். விரைவில் சஞ்சலங்கள் நீங்கி, சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.

?எனக்குத் திருமணம் தடைப்பட்டு வருகிறது. பல பரிகாரங்களையும் செய்துவிட்டோம். எனினும் திருமணம் கூடிவரவில்லை. என் ஜாதகத்தில் என்ன தோஷம் உள்ளது, வேறு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- ரேவதி, திருவனந்தபுரம்

! நீங்கள் ரேவதி நட்சத்திரம் 3- ம் பாதம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். 2-ல் மாந்தி, 7-ல் எந்த கிரகமும் இல்லை.

7-ம் வீட்டுக்கு உரிய குரு, 10-ம் வீட்டில் உள்ளார். 7-க்கும் 10-க்கும் உரிய குரு கேந்திரத்தில் அமையப்பெற்றுள்ளதால், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டுள்ளது. மேலும் 10-ம் வீட்டில் குருவுடன் சூரியன், சந்திரன், ராகு ஆகியோரும் உள்ளனர். ராகு, சூரியன், சந்திரன் இருப்பது கிரகண யோகத்தைக் குறிப்பிடுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரகண யோகம் காணப்பட்டால், என்னதான் மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்திருந்தாலும், மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுவதில் தாமதம் ஏற்படவே செய்யும்.

கிரகண தோஷ பிராயச்சித்தம் என்பது பற்றி, ‘ஜ்யோதிர் நிபந்தம்’ என்ற நூலில் உரிய பரிகார ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிகாரத்தை தக்க புரோகிதர்கள் வழிகாட்டலுடன் செய்தால், தோஷம் மற்றும் தடைகள் நீங்கி, திருமணம் கூடி வரும்.

மேலும், தங்கள் ஜாதக அமைப்புப்படி 2021-ம் ஆண்டு வரை சுக்கிரதசை நடைபெறவிருக்கிறது. சுக்கிரன் 9-ம் வீட்டில் நல்ல நிலையில் காணப் படுவதால், நிச்சயம் திருமண யோகம் உண்டு.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism