Published:Updated:

கேள்வி - பதில்:`புதிய வீட்டு மனைக்கு பரிகார பூஜைகள் தேவையா?’

பரிகார 
பூஜைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பரிகார பூஜைகள்

கன்றுகளின் வாயிலிருந்து சிந்திய நுரையாலும் பசுக்களின் பால் பெருக்கினாலும் அந்தப் பூமி சுத்தம் செய்யப்படுகிறது.

? புதிதாக மனை வாங்கியிருக்கிறோம். கட்டடம் எழுப்புமுன் மனையின் தோஷங்களை நீக்கும் வகையில் உரிய வழிபாடுகள் செய்யவேண்டும் என்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள். இதுகுறித்து தங்களின் வழிகாட்டலை வேண்டுகிறோம்.

- கே.ராஜலட்சுமி, சாத்தூர்

!`மய மதம்’ எனும் ஞானநூல் மனைகள் குறித்து வழிகாட்டுகிறது. பூமியில் முறையாக பூஜைகள் செய்து, மங்கல வாத்திய சத்தங்க ளுடன், ‘இந்தப் பூமியில் வசிக்கக்கூடிய பூதங் களும், தேவதைகளும், ராட்சஸர்களும் இந்தப் பூமியிலிருந்து விலகி வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். இந்தப் பூமியை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்’ என்று மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்யவேண்டும்’ என்கிறார் மயன்.

இவ்வாறு பிரார்த்தனை செய்யப்பட்ட இடத்தை உழுது, பசுஞ்சாணம் கலந்த விதைகளை விதைக்கவேண்டும். அந்த இடத்தில் பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். பசுக்களின் குளம்படி பட்டதும், அவற்றால் முகர்ந்துபார்க்கப்பட்டதுமான பூமி பரமபவித்திரமாகிறது.

கன்றுகளின் வாயிலிருந்து சிந்திய நுரையாலும் பசுக்களின் பால் பெருக்கினாலும் அந்தப் பூமி சுத்தம் செய்யப்படுகிறது. கோமியத் தில் நனைந்தும், பசுஞ்சாணத்தில் மூழ்கியும், பசுக்களின் அசைவுகளால் மணம் பெற்றதுமான அந்தப் பூமி, பசுக்களின் குளம்படிகளால் கெளது பந்தனம் (காப்பு கட்டுதல்) செய்யப்பட்டதாகிறது. இத்தகைய பூமியில், சுபமுகூர்த்த சுபநாளில் வெள்ளை புஷ்பங்களால் பலிஹரணம் செய்ய வேண்டும் என்றும் மயன் அறிவுறுத்துகிறார்!

கேள்வி - பதில்:`புதிய வீட்டு மனைக்கு பரிகார 
பூஜைகள் தேவையா?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

? என் மகனின் ஜாதகப்படி அவனுக்கு நல்ல வேலை அமையுமா?

-சோ.ராமசுப்பு, முக்காணி

!ஒருவரது ஜாதகத்தில் தனம் - செல்வந்த - சம்பத் யோகம் சிறப்பாக அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல வேலை அமையும். தங்கள் மகனின் ஜாதகத்தில் சுக்கிரன் 5-ல் இருக்கிறார். தன ஸ்தானமாகிய 2-ம் வீட்டில் கேது அமர்ந்துள்ளார். இந்த நிலைப்படி பார்த்தால் அவர் நன்கு சம்பாதித்தாலும் செலவுகளால் பொருள் கரையும்.

10-ம் இடத்துக்கு மாந்தியின் பார்வை உள்ளது. அவருடைய அமைப்பால், வேலை அமைவது தடைப்படுகிறது. எனினும் முயற்சி செய்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். `இந்த வேலைதான் வேண்டும்’ என்று எண்ணாமல் கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்; அதில் வெற்றி பெறலாம்.

ஜாதகப்படி 10-ம் பாவம் நன்கு அமைந் திருந்தால் வேலையிலும் உத்தியோகத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தங்கள் மகனின் ஜாதகத்தில் அந்த பாவம் பாதிக்கப் பட்டுள்ளது. தினமும் வீட்டில் நெய்விளக்கு ஏற்றிவைத்து, பதிகங்கள் மற்றும் பாசுரங்கள் பாடி, வழிபாடு செய்துவரச் சொல்லுங்கள். விரைவில் நல்லதொரு வாய்ப்பு வரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். எனது முயற்சி வெற்றி பெறுமா, அரசாங்கத் துறைகளில் வேலை கிடைக்குமா?

-சி.கோபாலகிருஷ்ணன், துறையூர்

!தங்கள் ஜாதகத்தில் 10-ம் இடத்து அதிபதி 11-ல் இருக்கிறார். லக்னத்தில் குரு உச்சம். அத்துடன் அவர் 9-ம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். சூரியன் 4-ல் நீசம் பெற்றிருந்தாலும், 7-ம் பார்வையால் ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கிறார். இந்தக் கிரக நிலைப்படி பார்த்தால், தங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் தற்போது நடைபெறும் தசாகாலமும் உங்களுக்கு உற்றத் துணையாக இருக்கிறது. ஆகவே, தங்களின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்; அரசுத் துறையில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல வேலை கிடைக்கும்.

? நண்பரின் உறவினர் ஒருவர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகியிருக் கிறார். ஜாதகப்படி பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?

- கே.ராஜசேகரன், தூத்துக்குடி

!சந்திரனை மனோகாரகன் என்கின்றன ஜோதிட நூல்கள். ஜாதகத்தில் அவரின் நிலை பலம் குறைந்திருந்தால், மனத்தளவில் பாதிப்புகள் நிகழும். ஜாதகப்படி, நண்பரின் உறவினர் மெள்ள மெள்ள குணம் அடைவார்.

வீட்டில் தினமும் காலையில் மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரத்தையும் மாலையில் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தையும் படித்து வழிபடச் சொல்லுங்கள். இயன்றால் நண்பரின் உறவினரையும் அந்தப் பாராயணத்தைக் கவனிக்கும்படி செய்யுங்கள். தெய்வ அருளால் விரைவில் குணம் அடைவார்.

? மகளுக்குத் திருமண யோகம் எப்படி. கல்யாணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. இதற்குப் பரிகாரம் என்ன?

- எல்.மஞ்சுளா, காரைக்குடி

!லக்னத்தில் கேதுவும் 7-ல் ராகுவும் இருக்கும் நிலை கல்யாணத்தில் தடையை ஏற்படுத்து கிறது. மேலும் 7-க்கு உடைய குரு பகவான், களத்திரக் காரகனான சுக்கிரன் ஆகியோரின் நிலையும் பலவீனமாக உள்ளது. அதேநேரம் குரு 5-ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஆகவே உரிய பரிகாரங்கள் மூலம் கல்யாண வரம் பெறலாம்.

ராகு-கேதுவுக்குப் பரிகார ஹோமம் செய்வதுடன், சுக்கிர சாந்தி ஹோமமும் செய்ய வேண்டும். ஒருமுறை திருவீழிமிழலை அருள்மிகு மாப்பிள்ளை ஸ்வாமியை தரிசித்து வழிபட்டு வாருங்கள். அத்துடன் சுமங்கலி பூஜை, கன்யா பூஜை போன்ற வழிபாடுகளில் கலந்து கொள்வதாலும் தோஷங்கள், தடைகள் நீங்கி கல்யாண வரம் கைகூடும்.

- பதில்கள் தொடரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com