Published:Updated:

ஆயுஷ்ய ஹோமம் அவசியமா?

ஆயுஷ்ய ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
ஆயுஷ்ய ஹோமம்

இந்திரன் இந்த ஹோமத்தினால் சந்தோஷம் அடைந்து, இவருக்கு எல்லா துக்கங்களிலிருந்தும் விமோசனம் அளித்து நூறு ஆண்டுகள் வாழ வைக்கட்டும்.

ஆயுஷ்ய ஹோமம் அவசியமா?

இந்திரன் இந்த ஹோமத்தினால் சந்தோஷம் அடைந்து, இவருக்கு எல்லா துக்கங்களிலிருந்தும் விமோசனம் அளித்து நூறு ஆண்டுகள் வாழ வைக்கட்டும்.

Published:Updated:
ஆயுஷ்ய ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
ஆயுஷ்ய ஹோமம்

? எனக்குத் திருமண யோகம் உண்டா, ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

- குன்னூர் வாசகர்,

! நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்திலேயே சனியும் மாந்தியும் உள்ளனர். 5-ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் இருப்பதுடன், 6-ம் வீட்டில் ராகு இருக்கிறார். 9-ம் வீட்டில் குரு, 10-ம் வீட்டில் சந்திரன், 12-ல் கேது ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

7-ம் அதிபதியாகிய குரு 9-ம் வீட்டில் அமையப்பெற்றிருந்தாலும் சுக்கிரன் 5-ல் ஆட்சி பெற்றிருந்தாலும், அவர் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நடுவில் இருப்பதால், பாப மத்யஸ்திதி என்ற அமைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சுக்கிரனுக்குத் தேவையான பரிகாரங்களைச் செய்யவேண்டியது அவசியம். சுக்கிர ப்ரீதி ஹோமமும், மகாலட்சுமி ஹோமமும் செய்தால், ஒரு வருடத்துக்குள் திருமணம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் கனிந்து வரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? என்னுடைய திருமண வாழ்க்கை சோகமயமாக உள்ளது. நிம்மதி இல்லாமல் போய்விட்டது. என் ஜாதகத்தைப் பரிசீலித்து, உரிய பரிகாரம் சொல்லவும்.

- பாலாம்பிகா, திருவனந்தபுரம்

! உங்கள் ஜாதகத்தைப் பார்த்ததில், அனுகூல மான பல அமைப்புகள் காணப்படுகின்றன. எனினும் 7-ம் அதிபதியாகிய சனி, 5-ம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். அதேபோல், கல்யாணக் காரகர் சுக்கிரன் சொந்த வீட்டில் 11-ல் அமையப்பெற்றுள்ளார். இருந்தாலும்கூட வம்சவிருத்திக்கான வாய்ப்புகள் குறைவாகத் தெரிகின்றன.

மேலும் நவாம்சத்தில்... செவ்வாய், கேது, சுக்கிரன் போன்ற கிரகங்கள் 8-ம் வீட்டில் வலிமையாக உள்ளனர். 8-ல் அமரும் கிரகங்கள் எல்லாம் நன்மை செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால், 1, 4, 7, 10 ஆகிய கேந்திரங்களில் பாவக் கோள்கள் அமைந்தால் நன்மை செய்வார்கள்.

தங்கள் ஜாதகப்படி பல அனுகூலமான அமைப்புகள் உள்ளபடியால், விரைவில் நீங்கள் விரும்பியதுபோன்ற வாழ்க்கை அமையும். அனுதினமும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களின் வழிபாடு சிறப்பான எதிர்காலம் அமைய உறுதுணையாக அமையும்.

? நான் நன்றாகப் படித்து நல்ல வேலை யில் இருக்கிறேன். ஆனாலும் என் திருமணம் தடைப்பட்டு வருகிறது. ஏதேனும் தோஷம் இருக்கிறதா என்பதையும் தக்க பரிகாரத்தையும் சொல்ல வேண்டுகிறேன்.

- ஊர் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர்

! விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் தங்களுக்கு 7-ம் அதிபதியாகிய சுக்கிரன், சொந்த வீடாகிய 12-ம் வீட்டில் உள்ளார். கல்யாணக் காரகரும், கல்யாண பாவாதிபதியுமாகிய சுக்கிரனின் அமைப்பு, பெண் கோளாகிய சந்திரன் மற்றும் புதனுடன் சேர்ந்து காணப்படுகிறது. இவர்களுக்கு வேறு கிரகங்களின் பார்வையோ அல்லது தாக்கமோ இல்லை. மேலும் குருவின் பார்வையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், லக்னத்தில் சூரியனும் சனியும் இருப்பதால் கல்யாணத் தடை ஏற்பட்டிருக்கிறது.

ஆயுஷ்ய ஹோமம் அவசியமா?

உங்கள் ஜாதகப்படி உங்கள் பெற்றோருக்கு நீங்கள் மட்டுமே பிள்ளை என்று தெரிய வருகிறது. இப்போதெல்லாம் திருமண விஷயத்தில் சமூகத் தில் பல நடைமுறைகள் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஒரே பிள்ளை இருக்கும் வீட்டில் பெண் கொடுக்கக்கூடாது, ஒரே பெண் இருக்கும் வீட்டில் பெண் எடுக்கக்கூடாது என்பது போன்ற பல நடைமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், தங்களுக்கு விரைவிலேயே திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

குருவும் செவ்வாயும் சேர்ந்து 4-ம் வீட்டில் நன்றாக உள்ளனர். இந்த அமைப்பு குருமங்கள யோகம் எனப்படும். அதேபோல், கல்யாணக்காரகர் சுக்கிரனுக்குக் குருவின் பார்வை உள்ளது. எனவே, திருமணம் நடைபெறுவதில் தடை எதுவுமில்லை. பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

? என் தாத்தா உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். ஜோதிடம் சார்ந்த பெரியவர்கள் சிலர், `அவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் கிரகங்கள் சரியில்லை. மிருதசஞ்ஜீவினி சூக்தம் சொல்லி ஆயுஷ்ய ஹோமம் செய்தால், உடல்நலம் மேம்படும்’ என்கிறார்கள். இதுகுறித்து தங்களின் வழிகாட்டல் தேவை.

- கே.கல்யாணராமன், கும்பகோணம்

! ஆயுஷ்ய ஹோமத்தின்போது ‘ஆயுஷ்ய சூக்தம்’ என்ற மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஓர் உயிரைக் கருவில் உருவாக்கச் செய்வது; அந்தக் கரு நல்ல முறையில் வளர உதவுவது; கருவில் வளர்ந்த குழந்தையை உரிய நேரத்தில் பிரசவத்தின் மூலம் இந்த உலகைப் பார்க்கச் செய்வது; அந்தக் குழந்தைக்கு அழகையும், அறிவையும், ஆரோக்கியத்தையும் அளித்து நீண்ட காலம் வாழச் செய்வது... இப்படி எல்லாமே இறைவ னின் கையில்தான் இருக்கின்றன. இவ்வளவையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, ஆயுளையும் பலமாக்கிக்கொள்ளவே ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது.

ஒரு குழந்தையின் முதல் பிறந்த நாளின்போது வீட்டில்வைத்து ஆயுஷ்ய ஹோமம் செய்வார்கள். மற்றபடி நோயிலிருந்து விடுதலை வேண்டும்போது திருக்கடையூர் சென்று செய்வது விசேஷம்.

ஒருவரது ஜாதகத்தில் சனி, லக்னாதிபதி, எட்டாவது இடத்தில் இருக்கும் கிரகங்கள் ஆகியவற் றின் அமைப்பு சரியில்லை எனும்போதும் இந்த ஹோமம் செய்யலாம். கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒருவருக்காக ஆயுஷ்ய ஹோமம் செய்யும்போது, அவர் சார்பில் மிருதசஞ்ஜீவினி சூக்தம் என்ற பெயரில் ரிக் வேதத்தில் உள்ள மந்திரத்தையும் சேர்த்து ஜபம் செய்வது நல்ல பலன் தரும் என்பார்கள்.

நோயின் பிடியிலிருப்பவர் சார்பில் ஓர் அந்தணர் சொல்லும் இந்த மந்திரங்களின் சுருக்கம்... ‘இவருக்கு என்னவென்று தெரியாத நோய் வந்துள்ளது. இதிலிருந்து முக்தி கிடைக்கவும், சுகமான வாழ்க்கை அமையவும், ஆயுஷ்ய ஹோமம் செய்து நோயிலிருந்து விடுபட முயற்சி செய்கிறோம். கோர ரூபமான நோய் தேவதை இவரைப் பிடித்திருக்கிறது என்றால்... இந்திர, அக்னி தேவர்களே! நீங்கள் இவரை இந்தக் கஷ்டத்திலிருந்து மீட்டெடுக்கவேண்டும்.

இவருக்கு ஆயுள் குறைந்திருந்தாலோ, மரணம் நெருங்கியிருந்தாலோ, எமலோக வாசல் வரை சென்றிருந்தாலோகூட, மரண வாயிலிலிருந்து திரும்ப அழைத்து வந்து நூறு வயது மட்டும் நோயில்லாத வாழ்க்கையைத் தருவீர்களாக!

இந்திரன் இந்த ஹோமத்தினால் சந்தோஷம் அடைந்து, இவருக்கு எல்லா துக்கங்களிலிருந்தும் விமோசனம் அளித்து நூறு ஆண்டுகள் வாழ வைக்கட்டும். இப்படி புனர்ஜென்மம் அடைந்த இவர் ஆண்டுக்கு ஒரு முறை இந்திரன், அக்னி உள்பட சகல தேவதைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஹோம கர்மாவைச் செய்யட்டும். உங்களின் அருளால் இவரின் சரீர இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் பூரண ஆரோக்கியத்துடன் விளங்கப்போகின்றன!’ என்பதாகும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com