Published:Updated:

பிரச்னத்துக்கும் சகுனத்துக்கும் தொடர்பு உண்டா?

பிரச்னம், சகுனம்
பிரீமியம் ஸ்டோரி
பிரச்னம், சகுனம்

உதாரணமாகத் திருமணம் தொடர்பாக பிரச்னம் கேட்கச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

பிரச்னத்துக்கும் சகுனத்துக்கும் தொடர்பு உண்டா?

உதாரணமாகத் திருமணம் தொடர்பாக பிரச்னம் கேட்கச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

Published:Updated:
பிரச்னம், சகுனம்
பிரீமியம் ஸ்டோரி
பிரச்னம், சகுனம்

? சமீபத்தில் சுப காரியம் தொடர்பாகப் பிரச்னம் பார்க்க நேரிட்டது. பிரச்னத்தோடு, அந்த நேரத்தில் நிகழ்ந்த சில சகுனங்களையும் சுட்டிக்காட்டி, பலன் சொன்னார் ஜோதிடர். பிரச்னத்துக்கும் சகுனத் துக்கும் தொடர்பு உண்டா?

- எம்.கே.புருஷோத்தமன், கடையம்

! சோழிப் பிரச்னம், தாம்பூலப் பிரச்னம், ஜாமக்கோள் பிரச்னம் என்று பிரச்ன ஜோதிடத்தில் பல பிரிவுகள் உண்டு. பிரச்ன ஜோதிடத்துடன் சகுனங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.

கேள்வியாளர் வரும் நேரம், அவர் நிற்கும் நிலை, அவரின் அங்க அசைவுகள், பேச்சுகள், ஜோதிடரின் நிலை, கேள்வியாளர் தனக்கான கேள்வியைக் கேட்கும்போது, சுற்றிலும் நிகழும் நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நன்கு ஆய்ந்து பலன் சொல்வார் ஜோதிடர். இந்த வழிமுறையையே ஜோதிட சாஸ்திர நூல்களும் வலியுறுத்துகின்றன.

உதாரணமாகத் திருமணம் தொடர்பாக பிரச்னம் கேட்கச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருள்கள், புதிய ஆடைகள், மலர்கள், இரண்டு கன்னிப் பெண்கள், பல வண்ணத்தில் திகழும் புடவை, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றைக் கண்டால், திருமணம் மிக நல்லபடியாக நிறைவேறும் என்று அர்த்தம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? பொதுவாக ராகு மற்றும் எமகண்ட காலத்தைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், ஜோதிடர்களால் ராகு கால பூஜைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த பூஜைக்கு அப்படியென்ன சிறப்பு?

- சி. சங்கர வடிவேலன், பொள்ளாச்சி

! ராகு காலத்தை `அமிர்த காலம்’ என்று சொல்வார்கள். அமிர்தம் எப்படி அதை அருந்தியவர்களுக்குப் பூரண ஆயுளைத் தருகிறதோ, அதுபோல் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன; பூஜை செய்கிறவர்களுக்குச் சகல வளத்தையும் அள்ளித் தருகின்றன.

ராகு ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு காலம் தங்குவார். அதேபோல், ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் தங்குவார். இதைத்தான் `ராகு காலம்’ என்கிறோம். ராகுவைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை நினைப்பதே புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.

ராகு காலத்தில் துர்காதேவி, காளி, வீரபத்திரர், சரபர் போன்ற வீரக் கடவுள்களுக்கு வழிபாடு செய்யலாம். பெரும்பாலும் ராகு கால பூஜை என்பது, துர்கை பூஜையையே குறிப்பதாகக் கருதுகிறோம். ராகு கால துர்கை வழிபாடுகளில்... அஷ்டமி பூஜை, மங்கள வார பூஜை, சுக்ரவார பூஜை எனப் பலவித பூஜைகள் உள்ளன.

நிறைய அன்பர்கள் இந்த வழிபாடுகளைத் திருமணத் தடங்கல்களை நீக்கும் வழிபாடுகளாக மட்டுமே நினைக்கிறார்கள். அப்படியில்லை! துக்கம் போக்கும் துர்கா பூஜைகளாக இவை கருதப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது ராகுகால அஷ்டமி பூஜை.

வளர்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் இந்த பூஜையை ஆரம்பித்து, ஒன்பது அல்லது பதினாறு அஷ்டமிகள் தொடர்ந்து செய்யவேண்டும். ஆரம்பிக்கும்போது வளர்பிறை அஷ்டமியாக இருக்கவேண்டும். அதன் பிறகு, தேய்பிறைகளிலும் செய்யலாம். இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான சுகங்களையும் பரலோக வாழ்க்கைக்குத் தேவையான புண்ணியங்களையும் ஒருங்கே தரும்விதமக இந்த வழிபாடு போற்றப்படுகிறது.

பூஜை செய்யும் தினங்களில், வழிபாடு நிறைவுற்றதும் தீர்த்தத்தை வீடு முழுக்கவும், வீட்டிலுள்ளவர்களின் மீதும் தெளிக்கவேண்டும். அவல், நெற்பொரி, சத்துமாவு, தேன், தேங்காய், வெற்றிலை-பாக்கு, தயிர்சாதம், மொச்சைச் சுண்டல் ஆகியவற்றை அம்பாளுக்கு நைவேத்தியமாகப் படைத்து வழிபடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? ஜாதகப்படி என் தங்கை மகனுக்குப் புத்திர பாக்கியம் உண்டா. தடைகள் ஏதேனும் இருப்பின், உரிய பரிகாரத்தைச் சொல்லி வழிகாட்டவும்.

- கே.ராமநாதன், சென்னை-44

! குரு, லக்னம் - சந்திரனுக்கு 5-ம் வீட்டுக்கான அதிபதி மற்றும் 5-ம் வீட்டுக்குச் சுபர் பார்வை அமைதல். 6, 8, 12 ஆகிய இடங்களைத் தவிர்த்து இதர வீட்டுச் சுபர் பார்வை அமைதல்.

லக்னம் மற்றும் 5-ம் வீட்டு அதிபதிகள் ஒரே இடத்தில் கூடியிருத்தல் அல்லது 1, 5-ம் அதிபதி களின் பரிவர்த்தனை அல்லது இந்த இருவருக்குமான பரஸ்வர பார்வை அமைவது.

இப்படியான நிலைகள் ஜாதகத்தில் அமைந்தால், அற்புதமான புத்திர பாக்கியம் அமையும்.

பிரச்னத்துக்கும் சகுனத்துக்கும் தொடர்பு உண்டா?

அந்த வகையில் தங்கள் தங்கையின் மகன் ஜாதகத்தில், சத்புத்திர பாக்கியத்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனினும் காலதாமதமின்றி அந்தப் பாக்கியத்தைப் பெற்று மகிழ, ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். அத்துடன் செவ்வாய்க் கிழமைகளில் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து கந்தக் கடவுளை மனமுருகி வழிபடச் சொல்லுங்கள். கந்தன் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

? ஜாதகப்படி கல்யாணத் தடை நீங்க செவ்வாய் வழிபாடு அவசியம் எனச் சொல்கிறார் பெரியவர் ஒருவர். செவ்வாய் வழிபாடு குறித்து தாங்கள்தான் விளக்க வேண்டும்.

- கே. பானுகோபிகா, கோவை-2

! செவ்வாய் வழிபாடு குறித்து பவிஷ்ய புராணம் உட்பட ஞானநூல்கள் பலவும் வழிகாட்டுகின்றன. செவ்வாய்க்கிழமையன்று செப்புத் தகட்டில் செவ்வாய் யந்திரம் வரைந்து, அத்துடன் தங்கத்தாலான செவ்வாய் பகவான் சிலையை வைத்து வழிபடவேண்டும். செப்பு, தங்கம், சிவப்பு நிற ஆடைகள், வெல்லம், சிவப்புச் சந்தனம், சிவப்பு நிற மலர்கள், குங்குமப்பூ ஆகியவற்றைத் தானம் அளிப்பது, செவ்வாயின் அருள்பெற உதவும்.

இப்படி விரிவான வழிபாடு செய்ய இயலாதவர்கள், கீழ்க்காணும் துதிப்பாடலைப் பாடி, செவ்வாய் பகவானை வழிபடலாம்.

தரணிகர்ப்ப சம்பூதம் வித்யூத் காந்தி சம பிரபம்

குமாரம் சக்திஹஸ்தம் ச மங்களம் பிரணாம்யஹம்

ஆற்றலைத் தருபவரும், மின்னல் போன்ற ஒளி மிகுந்தவரும், எப்போதும் இளமையாக இருப்ப வரும், எல்லோருக்கும் நன்மை புரிபவரும், பூமி போன்றவருமான செவ்வாயை வணங்குகிறேன் என்பதே இந்தத் துதிப்பாடலுக்கான பொருள். வியாசர் அருளிய இந்தத் துதி, சகல சுபிட்சங்களையும் அருளும். மேலும், சிவனாரையும் செவ்வாயின் அதிதேவதையான முருகனையும் வழிபட்டு வரம் பெறலாம். 3 முக ருத்ராட்சம் அணியலாம். கோதுமை ரொட்டி, சர்க்கரை சேர்த்த இனிப்புகள் ஆகியவற்றைத் தானம் அளிக்கலாம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism