Published:Updated:

`அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு உண்டா?’

அரசுப் பணி
பிரீமியம் ஸ்டோரி
அரசுப் பணி

நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்தில் குரு உச்சமாக அமையப்பெற்றுள்ளார்.

`அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு உண்டா?’

நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்தில் குரு உச்சமாக அமையப்பெற்றுள்ளார்.

Published:Updated:
அரசுப் பணி
பிரீமியம் ஸ்டோரி
அரசுப் பணி

? எனக்குத் திருமணம் தடைப்பட்டிருக் கிறது. திருமணம் கூடி வர ஏதேனும் பரிகாரம் உண்டா...

- மும்பை வாசகர்

! உங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில், திருமணத்துக்கான தடைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், லக்னாதிபதி செவ்வாயும் ஒன்பதாம் பாவ அதிபதி குருவும் பரஸ்பரம் பரிவர்த்தனையாகி, குரு லக்னத்திலும் செவ்வாய் குருவின் வீடாகிய தனுசிலும் அமையப்பெற்றுள்ளார்கள்.

மேலும் 7-ம் வீட்டின் அதிபதியும் களத்திர காரகருமான சுக்கிரன் லக்னத்தில் இருந்தபடி 7-ம் வீட்டைப் பார்வை செய்கிறார். எனவே திருமணத்துக்கான யோகம் உண்டு.

இதுவரை நடைபெற்ற தசாபுக்தி காலங்கள் சுமாராகத்தான் இருந்தன. வரும் 20.9.20 வரை குரு தசையில் சனி புக்தி நடைபெற உள்ளது. சனி 10 மற்றும் 11-க்கு உரியவராகி 9-ல் அமையப் பெறுவதாலும் மற்ற தடைகள் எதுவும் இல்லாத காரணத்தாலும், 9.3.20-க்குள் திருமணம் நடைபெறுவதற்கான அமைப்பு வலிமையாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? எனக்குத் திருமணம் நடைபெற்று ஐந்து வயதில் ஒரு பையனும் இருக்கிறான். கடந்த நான்கு வருடங்களாக என் கணவர் என்னுடன் இல்லை. கடந்த ஒரு வருடமாகத்தான் எங்களுக்குத் தேவையான பண உதவி செய்து வருகிறார். அவர் எங்களுடன் சேர்ந்து வாழும் காலம் எப்போது வரும்?

- செல்வமீனாட்சி, சென்னை

! பொதுவாக நாம் ஜாதகங்களைப் பார்க்கும் போது திருமணப் பொருத்தம் பார்ப்போம். உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கும், மிருகசீரிடம் மிதுன ராசியில் பிறந்த தங்கள் கணவருக்கும் சஷ்டாஷ்டக தோஷம் உள்ளது.

உங்களுடைய ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் ஒரே வீட்டில் அமையப் பெற்றுள்ளன. இப்படி அமைந்திருப்பதை சந்நியாச யோகம் என்று கூறுவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் ஒன்றுமே இல்லாததைப் போன்ற அவஸ்தை நிலை உண்டாகும்.

தற்போது உங்கள் ஜாதகத்தில் சூரிய தசையில் சுக்கிரனின் புக்தி முடிந்து, சூரிய தசை முடிவு பெற்று சந்திர தசை ஆரம்பித்துள்ளது. சந்திர தசையில் சந்திர புக்தி முடிந்த பிறகு, நல்ல காலம் பிறக்கவுள்ளது.

உங்கள் கணவரின் ஜாதகத்தில் சனி தசையில் சந்திரனின் புக்தி 8.3.20 வரை இருக்கிறது. அதற்குப் பிறகுதான் அவருக்கு மனமாற்றம் ஏற்படும். ஜாதகத்தில் இருக்கக்கூடிய பொருத்தமின்மையைச் சரிசெய்வதற்காகச் சில வழிமுறைகள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

குறிப்பாக ரிக்வேதத்தில் கடைசி ஸூக்தத்தில்... ஐக்யமத்ய ஸூக்தம் என்று கூறுவார்கள்... இந்த மந்திரத்தால் 3,024 உரு ஹோமங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தைப் பெற்று அருந்தினால், கண்டிப்பாக நீங்கள் இருவரும் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கனிந்து வரும்.

`அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு உண்டா?’

? எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் முடியப்போகிறது. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? அதேபோல், நான் எதிர்பார்த்தபடி நிலையான அரசுப் பணி கிடைக்குமா?

- திருச்சி வாசகர்

! நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்தில் குரு உச்சமாக அமையப்பெற்றுள்ளார். மேலும், குரு லக்னத்தில் இருந்தபடி தன் 5-ம் பார்வையால் புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். 5-க்கு உரிய கிரகம் 5-ம் வீட்டைப் பார்ப்பது, அந்த பாவத்துக்கு புஷ்டி என்கிறது சாஸ்திரம்.

இப்போது, உங்களுக்குச் சனி தசையில் சனி புக்தி நடைபெறுகிறது. அது முடிந்து புதன் புக்தி ஆரம்பிக்கும் நேரத்தில் அதாவது அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துக்குள் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு தெரிகிறது. தொழில்-உத்தியோகத்தைப் பொறுத்தவரை 10-ம் அதிபதியாகிய செவ்வாய் நல்ல நிலையில் இருக்கிறார். எனவே, கண்டிப்பாக நல்ல தொழில் அல்லது வேலை கிடைக்கும். 10-ம் அதிபதி செவ்வாய் 11-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கண்டிப்பாக அரசாங்கம் தொடர்பான உத்தியோகம் கிடைக்கக்கூடும்.

? என் மகன் அமாவாசையன்று பிறந்திருக்கிறான். மேலும், ராகுகாலத்தில் பிறந்திருக்கிறான். இதனால் அவனுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா, பரிகாரம் எதுவும் செய்யவேண்டுமா?

- செல்வகுமாரி, வேலூர்

! உங்கள் மகன் அமாவாசையன்று பிறக்கவில்லை. அவன் பிறந்த நேரம் சுக்லபட்ச பிரதமை ஆகும். அதேபோல் ராகுகாலம் நல்ல காரியங்களைச் செய்வதற்கு உகந்த நேரம். இன்னும் சொல்லப்போனால், ராகு நன்றாக அமையப்பெற்றால், `விதேச தன யோகம்’ அமையும் என்று சொல்வார்கள். எனவே ராகுகாலம் நன்மையே செய்யும்.

மேலும், ஜாதகத்தில் ராகுவுக்கு குருவின் பார்வையும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எல்லா கிரகங்களும் 9, 10, 11 என்ற சுபமான வீடுகளில் அமையப்பெற்றுள்ளன. மேலும், ஐந்து கிரகங்கள் கும்பத்தில் 10-ம் வீட்டில் அமைந்திருக்கின்றன. இப்படி அமைவது சக்கரவர்த்தி யோகத்தைக் குறிப்பிடும்.

எனவே, உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு ஏற்ற படிப்பை படிக்க வைக்கவும். இறையருளாலும் உங்களின் வழிகாட்டுதலாலும் அவனுடைய வாழ்க்கை மிகச்சிறப்பாக அமையும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில்,

சக்தி விகடன்

757,அண்ணாசாலை, சென்னை-600 002 Email:

sakthi@vikatan.com