Published:Updated:

பணக்கஷ்டம் எப்போது விலகும் பரிகாரம் என்ன?

பணக்கஷ்டம்
பிரீமியம் ஸ்டோரி
பணக்கஷ்டம்

எனக்கு 35 வயது ஆகிறது. சொந்தத் தொழில், சொந்த வீடு, கார் என்று பல வசதிகள் இருக்கின்றன.

பணக்கஷ்டம் எப்போது விலகும் பரிகாரம் என்ன?

எனக்கு 35 வயது ஆகிறது. சொந்தத் தொழில், சொந்த வீடு, கார் என்று பல வசதிகள் இருக்கின்றன.

Published:Updated:
பணக்கஷ்டம்
பிரீமியம் ஸ்டோரி
பணக்கஷ்டம்

? எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. குழந்தை பாக்கியம் இல்லை. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

- ராமநாதன், சென்னை-44

! ஒருவருடைய ஜாதகத்தைக் கணிக்கும் போது, குறிப்பிட்ட பிரச்னைக்குரிய காரணத்தை மட்டும் ஆராயக் கூடாது. மற்ற அம்சங்களையும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாவம், அந்த பாவத்தில் இருக்கும் கிரகம், அந்த பாவத்துக்கு உரிய கிரகம் இருக்கும் பாவம், அந்த கிரகத்தின் வலிமை என்று பல அம்சங்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

உங்கள் குறிப்புகளைக்கொண்டு கணித்துப் பார்த்ததில் நீங்கள் துலா லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 5-ம் வீடான கும்பத்தில் அதாவது புத்திரஸ்தானத்தில் குரு அமர்ந்திருக்கிறார். புத்திரகாரகன் புத்திர ஸ்தானத்தில் இருப்பது புத்திர தோஷத்தைக் குறிப்பிடுவதாகும். மேலும் அவர் மறைவு ஸ்தானத்துக்கும் உரியவராகிறார். அந்த வகையிலும் அது தோஷம்தான்.

அதேநேரம், உங்கள் ஜாதகத்தில் குருவுடன் செவ்வாய் இணைந்திருக்கிறார். இது குருமங்கல யோகம் ஆகும். எனவே, உங்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எனவே, குருவுக்கு வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேறு பரிகாரம் தேவையில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பணக்கஷ்டம்
பணக்கஷ்டம்

? கடந்த பல வருடங்களாகவே பொருளாதார ரீதியாக கஷ்டப் படுகிறேன். பணக் கஷ்டத்திலிருந்து விடுபட நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- எஸ்.சுப்ரமணியம், கடையம்

! ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல வகையான யோகங்களில், குபேர யோகமும் தரித்திர யோகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஒருவருடைய ஜாதகத்தில் தனஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய இடங்களைக் கவனிக்க வேண்டும். 2-க்கு உடையவரும் 9-க்கு உடையவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், 2-க்கு உடையவரும் 11-க்கு உடையவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் குபேர யோகத்தைக் குறிப்பிடும். அவர்களுடைய வாழ்வில் செல்வத்துக்குக் குறைவே இருக்காது.

மேலும், சுக ஸ்தானத்தையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். ஜாதகத்தில் 2 மற்றும் 4 ஆகிய வீடுகளில் ராகு, கேது, சனி, செவ்வாய், தேய்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் அது தரித்திர யோகத்தைக் குறிப்பிடும். உங்கள் ஜாதகத்தில் 4-ல் இருக்கும் தேய்பிறைச் சந்திரனை, 10-ல் இருக்கும் குரு பார்வை செய்கிறார். எனவே, வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்துவந்தால், நாளடைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.

? எனக்கு 35 வயது ஆகிறது. சொந்தத் தொழில், சொந்த வீடு, கார் என்று பல வசதிகள் இருக்கின்றன. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஏதேனும் ஒரு காரணத்தால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- கே.கார்த்திக், சென்னை-4

!திருமணத்துக்குக் குருபலம் வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால், அது மட்டுமே போதாது. களத்திர ஸ்தானம் சுப வலிமை பெற்றிருக்க வேண்டும். லக்னத்துக்கு 7-ம் அதிபதியின் தசா, புக்தி காலங்களில் ஒருவருக்குத் திருமணம் நடைபெறக்கூடும். 7-ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தடை தாமதம் ஏற்படும். அவற்றுக்குச் சுப கிரகத்தின் பார்வை ஏற்பட்டிருந்தால், தடை நீங்கி திருமணம் நடைபெறும். நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்திலேயே குரு உச்சம் பெற்றிருக்கிறார். உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் இருக்கும் கேதுவுக்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால், வரும் ஆவணி மாதத்துக்குள் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

? எனக்கு அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படு கிறது. எந்த ஒரு காரியத்திலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை. மன அமைதிக்கும், பணிகளில் முழு கவனம் செலுத்தவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- சோ.ராமு, கோவை-4

! ஒருவருடைய மனம் தெளிவாகவும் சிந்திக்கும் திறன்கொண்டதாகவும் இருப்பதற்கு அவருடைய ஜாதகத்தில் சந்திரன் சுப வலிமை பெற்றிருக்க வேண்டும். மறைவுஸ்தானங்களில் இருந்தாலோ அல்லது பகை, நீசம் பெற்றிருந்தாலோ சந்திரனின் வலிமை குறைந்துவிடும். மேலும் செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காரணம் செவ்வாய் ரத்தத்துக்குக் காரகத்துவம் வகிக்கிறார். அவர் நல்ல நிலையில் இல்லாவிட்டால், ரத்த அழுத்தம் போன்ற நோய்களாலும் மன அமைதி பாதிக்கக்கூடும். நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். 12-ல் சந்திரன் மறைவு பெற்றிருக்கிறார். மேலும், செவ்வாயும் கடகத்தில் நீசம் பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே உங்களுக்கு மன அமைதி அடிக்கடி பாதிக்கப் படுகிறது. வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் திங்களூர் சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன், தினமும் வீட்டில் கோளறு பதிகம் பாராயணம் செய்து வரவும். நாளடைவில் நல்ல மாற்றம் ஏற்படும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com