Published:Updated:

`பிள்ளை வரம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம்?’

பிள்ளை வரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பிள்ளை வரம்

ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும்போது பல அம்சங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

?பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எவ்வளவு பணம் வந்தாலும் மேலும் கடன் வாங்கவேண்டிய நிலைமையே உள்ளது. என்ன பரிகாரம் செய்யலாம்?

- எம்.சங்கரலிங்கம், காஞ்சிபுரம்

! ஒருவருடைய பொருளாதார நிலைமையைத் தீர்மானிப்பது 2-ம் இடமான தனஸ்தானம் மற்றும் 4-ம் இடமான சுகஸ்தானம் ஆகியவையே. இந்த ஸ்தானங்களில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால், காலம் முழுவதும் வறுமையை அனுபவிக்க நேரிடும்.

ஆனால், அந்த இடத்துக்குக் குருவின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், உரிய பரிகாரங்கள் மூலம் பணக்கஷ்டத்திலிருந்து விடுபட்டுவிட முடியும். நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். சுக ஸ்தானத்தில் கேது இருக்கிறார். ஆனால் அவருக்குக் குரு பார்வை இல்லை என்பதால், தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகரையும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஓரளவுக்குக் கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும்.

`பிள்ளை வரம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம்?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

?எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. ஏதேனும் தோஷமுள்ளதா என்று தெரிவிக்கவும்.

- எஸ்.சுந்தர்குமார், திருநெல்வேலி-3

! ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும்போது பல அம்சங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். பன்னிரண்டு பாவங்கள், அந்த பாவங்களின் அதிபதி, அந்த பாவங்களுக்குரிய காரகர் என்று அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தே பலன் சொல்ல வேண்டும்.

நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். 5-ம் இடமான விருச்சிகத்தில் புத்திரகாரகர் குரு அமைந்துள்ளார். புத்திர ஸ்தானத்தில் புத்திரகாரகர் அமைந்திருப்பது புத்திர தோஷத்தைக் குறிப்பிடும். ஆனால், தங்கள் ஜாதகத்தில் குருவுடன் செவ்வாய் அமைந்திருப்பதன் மூலம் தங்களுக்கு குருமங்கல யோகம் உள்ளது. எனவே, உங்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. ஒருமுறை பெங்களூரு - மைசூரு சாலையில் அமைந்திருக்கும் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணனை தரிசித்துவிட்டு வாருங்கள்.

குழந்தை பிறந்ததும் குருவாயூரப்பனுக்கு குழந்தையின் எடைக்கு வெல்லம் துலாபாரம் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். வேறு பரிகாரம் தேவையில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

?எனக்கு இப்போது 30 வயது நிறைவடைந்துவிட்டது. இன்னும் திருமணம் தடைப்பட்டு வருகிறது. நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- சிவகுமார், திருச்சி-2

! ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ம் பாவத்தில் சனி, ராகு, கேது ஆகியோர் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்த இடத்துக்கு சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், தோஷம் நிவர்த்தியாகி திருமணம் கூடி வரும்.

மேலும், திருமணம் வம்ச விருத்திக்கானது என்பதால், புத்திரகாரகரான குரு கோசாரப்படி நல்ல இடங்களுக்கு வரும் போதும், அந்த இடங்களுக்குக் கோசார குருவின் பார்வை ஏற்படும்போதும் திருமணம் நடைபெறும். நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 7-ல் சனி இருக்கிறார். ஆனால், சனியின் சொந்த வீடு என்பதாலும், அந்த வீட்டுக்குக் குருவின் பார்வை ஏற்பட்டிருப்பதாலும் அடுத்து வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடி வரும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? எனக்குப் பல இடங்களில் பெண் பார்த்து ஜாதகப் பொருத்தம் இருந்தும் திருமணம் தடைப்பட்டு வருகிறது. தோஷம் எதுவும் இருக்கிறதா? பரிகாரம் செய்ய வேண்டுமா?

- எஸ்.உலகநாதன், வேலூர்

! ஒருவருடைய பூர்வஜன்ம ஆசைகள், கர்மவினைகளின்படியே அவருக்கு இந்தப் பிறவி அமைகிறது. எனவே, ஒருவருடைய திருமணத்தைப் பற்றி ஆராயும்போது, அவருடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தைத் துல்லியமாக ஆராய வேண்டும். அதன்பிறகு திருமணத்தை நிர்ணயிக்கும் மற்ற பாவங்களைப் பற்றியும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.

நீங்கள் மகர லக்னம். 8-ல் செவ்வாயும் 12-ல் சுக்கிரனும் உள்ளனர். தற்போது தங்களுக்கு குருதசை, குருபுக்தி நடைபெறுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது தோஷம் எதுவும் இல்லாததுபோல் தோன்றும். ஆனால், 8-ம் வீட்டில் குரு பார்வை இல்லாத செவ்வாய் இருப்பது, செவ்வாய் தோஷமாகும்.

எனவே, செவ்வாய்க்குரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு, திருமணம் கூடி வரும். தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்துடன் குரு பகை வீட்டில் இருப்பதாலும், சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதாலும் மகாலட்சுமியை வழிபடுவதுடன், வசதி இருந்தால் வீட்டில் ஸ்ரீசூக்த ஜபம் மற்றும் ஹோமம் செய்தால் திருமணம் நடைபெறும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே...

ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com