Published:Updated:

மருத்துவப் படிப்பு அமையுமா?

மருத்துவப் படிப்பு
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவப் படிப்பு

மேற்படிப்பு குறித்த தங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்

மருத்துவப் படிப்பு அமையுமா?

மேற்படிப்பு குறித்த தங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்

Published:Updated:
மருத்துவப் படிப்பு
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவப் படிப்பு

? சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனினும் அங்கு நிம்மதியாக வாழ முடியாதபடி, அடிக்கடி ஏதேனும் மனக்குறை வாட்டிக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- எம்.நாகராஜன், திருச்சி

! சொந்த வீடு, வாசல் ஆகியவற்றைக் குறிப்பிடுவது சுகஸ்தானம் எனப்படும் 4-ம் பாவமாகும். அந்த பாவத்தில் இருக்கும் கிரகத்தைப் பொறுத்தே சொந்த வீடு அமைவதும், அந்த வீட்டில் மகிழ்ச்சியான வாழ்வதும் சாத்தியமாகும்.

பொதுவாக சுக ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல வீடு வாசல் அமையும்; அது வாடகை வீடாகவே இருந்தாலும், அனைத்து வசதிகளுடன் அமைந்திருக்கும். இந்த ஜாதகக்காரர்களின் வீடு எப்படிப்பட்ட அமைப்பில் இருந்தாலும் அதனால் இவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

நீங்கள் குருவின் வீடான மீன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். அந்த வீட்டுக்கு 4-ம் பாவமான மிதுனத்தில் சுக்கிரன் உள்ளார். உங்கள் லக்னத்துக்கு 4-ம் வீட்டுக்கு உரிய புதன் 7-ல் அமைந்துள்ளார். எனவே, சொந்த வீடு யோகம் ஏற்படும். ஆனால் தனுசு, மீனம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும், 4-ல் சுக்கிரன் இருந்து, நல்ல வீடுவாசல் அமைந் தாலும், வீட்டில் அமைதிக் குறைவு காணப்படும். இதற்கு வாஸ்து சாஸ்திரம் பயன்படாது.

நீங்கள் மீன லக்னத்தில் பிறந்திருப்பதால், சுக்ர ப்ரீத்திக்குரிய பரிகாரம் செய்யலாம். வெள்ளிக் கிழமைகளில், மகாலட்சுமி தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்; மனநிம்மதி வாய்க்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

? நான் தற்போது ப்ளஸ் டூ தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறேன். அதற்கான யோகம் எனக்கு உண்டா?

- எஸ்.ராமச்சந்திரன், பாலக்கோடு

! நீங்கள் மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் லக்னம் தனுசு. வாக்கு ஸ்தானத்தின் அதிபதி சனி மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானமான மீனத்துக்கு 10-ல் இருக்கும் குருவின் பார்வை ஏற்படுகிறது. அந்த இடத்தில் சுக்கிரனும் உச்சம் பெற்று காணப்படுகிறார். எனவே, மருத்துவ மேற் படிப்புக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், தற்போது சூரிய தசையில், கேது புக்தி 2020 மே மாதம் வரை உள்ளது. அதற்குப் பிறகு மேற்படிப்பு குறித்த தங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? எனக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா, திருமண யோகம் எப்படி?

- எம்.கிருஷ்ணமூர்த்தி, மணப்பாறை

! தங்களின் ஜாதகத்தில் 10-ம் இடத்தில் குருவும் ராகுவும் அமைந்திருப்பது அனுகூலமான நிலையே. ராகுவின் யோகத்தால் வெளிநாட்டில் அல்லது வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

களத்திரஸ்தானத்துக்குரிய கிரகமான சந்திரன் கேதுவுடன் சேர்ந்து 4-ல் இருப்பதாலும், களத்திரக்காரகர் சுக்கிரன் 8-ல் மறைவு ஸ்தானம் பெற்றிருப்பதாலும் திருமணம் நடைபெறுவதில் தடை உள்ளது. சுயம்வர பார்வதி ஹோமம் போன்ற வழிபாடுகளில் பங்கேற்பதன் மூலம் திருமணத் தடை விலகும்.

? என் எதிர்காலம் எப்படி?

- எஸ்.சுப்பிரமணி, அரக்கோணம்

! உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன. இது சந்நியாச யோகத்தைக் குறிக்கும். மேலும் 2-ம் வீட்டுக்குரிய சனி 12-ல் மறைந்திருப்பதாலும் 2-ல் கேது இருப்பதாலும், சில குறைபாடுகள் உள்ளன. எனினும் ஜாதகத்தில் சந்திர மங்கல யோக அமைப்பு உள்ளதாலும் 9-ம் இடத்தில் இருக்கும் குருவின் பார்வை லக்னத்துக்குப் படுவதாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும். சுக்கிரன் நீசம் பெற்றிருப்பதால், சுக்கிர ப்ரீதி செய்துகொள்வது நல்லது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism