Published:Updated:

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

சுக்ரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுக்ரன்

ஹோமம் செய்ய இயலாதுபோனால், அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று, நவகிரக சந்நிதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம்.

? கொரொனா பாதிப்புகளிலிருந்து மெள்ள விடுபட்டு, தொழில் மற்றும் இல்லத்தில் சற்று முன்னேற்றம் நிலவுகிறது. என்றாலும், மனம் அமைதி இல்லாமல் தவிக்கிறது. மனச் சஞ்சலத் துக்குக் கிரக நிலைகள் காரணம் ஆகுமா? என் ஜாதகப்படி மன நிம்மதி வாய்க்குமா?

-சி.திருவேங்கட பெருமாள், தூத்துக்குடி-2

பொதுவாக சந்திரனை மனோகாரகன் என்பார்கள். ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து காணப்பட்டால் மனச் சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது பொதுவிதி.
அதேபோல், காலபுருஷனின் 1 மற்றும் 8-வது வீடுகளுக்கு உரியவர் செவ்வாய் பகவான். அவர் ரத்த வலிமை பெற்ற கிரகம். செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருந்தால், செவ்வாய் தசை, புக்தி வரும் காலங்களிலும், மற்ற தசைகளில் செவ்வாய் புக்தி வரும் காலங்களிலும், மன அமைதி பாதிக்கப்படும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் தசை மற்றும் புக்தி நடைபெறும் காலங்களில் மன அமைதி பாதிக்கப்படும்.

உங்களின் ஜாதக அமைப்பை எடுத்துக்கொண்டால், தற்போது புதன் தசையில் செவ்வாய் புக்தி தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. இன்னும் சில மாதங்களில் செவ்வாய் புக்தி முடியும். அதுவரையிலும் மனச் சஞ்சலங்கள் இருக்கவே செய்யும். எனினும் கவலை வேண்டாம்.

செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். அதேபோல், ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் பெளர்ணமி தினங்களில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அம்பாளை வழிபடுங்கள்; தெய்வத்தின் திருவருளால் மனமது செம்மையாகும்.!

சுக்ர பகவான்
சுக்ர பகவான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

? எனக்குக் கிரக நிலை சரியில்லை. ஆதலால் நவகிரக ஹோமம் செய்யவேண்டும் என்று பரிகாரம் சொல்லப்பட்டது. ஹோமம் நடத்த இயலாத நிலையில், குறிப்பிட்ட ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து பரிகாரம் தேடலாம் என்கிறார் பெரியவர் ஒருவர். எனது ஜாதகப்படி சுக்ர பரிகாரம் செய்யவேண்டும். சுக்ரனுக்கு உரிய பரிகார வழிபாட்டு மந்திரங்கள் என்ன?

-எஸ்.வேணுகோபாலன், சென்னை-66

ஹோமம் செய்ய இயலாதுபோனால், அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று, நவகிரக சந்நிதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம்.

அதேபோல், நவகிரக ஹோமத்தின்போது, நிறைவில் ஒவ்வொருருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றபடி கிரக சாந்தி செய்யும்போது சில பாராயணங்களைச் செய்யவேண்டும் என்பர். அவற்றையே வாரம் ஒருமுறையேனும் நீங்கள் பாராயணம் செய்து பலன் அடையலாம்.

ஒருவரின் கிரக நிலையில் சூரியன் சரியில் லாத இடத்தில் இருந்தால், அவர்கள் ஹோமம் செய்யும்போது ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஆறு தடவை பாராயணம் செய்வது நல்லது. அதே போல சந்திரனால் பாதிப்பு என்றால், துர்கா சப்த ஸ்லோகி (துர்க்கையைப் பற்றிய ஏழு ஸ்லோகங்கள் அடங்கியது) பத்து தடவை சொல்லலாம்.

செவ்வாய் கிரகத்தால் பாதிப்பு என்றால், ருண விமோசன மங்கள ஸ்தோத்திரத்தை ஏழு தடவை பாராயணம் செய்யலாம். புதன் கிரகம் சரியில்லாத இடத்தில் இருந்தால், பாகவதத்தில் வரும் கிருஷ்ணாவதாரக் கதையை பதினேழு தடவை பாராயணம் செய்யலாம். குருவால் பாதிப்பு ஏற்பட்டால், வேத மந்திரங்கள் சொல்ல வேண்டும்.

சனி சரியில்லாமல் இருந்தால், சனைச்சர ஸ்தோத்திரம், ஐயப்ப சகஸ்ரநாமம், ஆஞ்சநேய சகஸ்ரநாமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 19 தடவை சொல்ல வேண்டும். ராகுவால் பாதிப்புகள் இருந்தால், விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆஞ்சநேய சகஸ்ர நாமத்தைப் 18 தடவை பாராயணம் செய்யவேண்டும். கேது சரியில் லாமல் இருந்தால், புருஷ ஸூக்தம், விநாயகர் சகஸ்ரநாமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 7 தடவை பாராயணம் செய்ய வேண்டும்.

உங்களுக்கு சுக்ர ப்ரீத்தி தேவைப்படுகிறது. ஆகவே, நீங்கள் லட்சுமி சகஸ்ரநாமம் அல்லது கனக தாரா ஸ்தோத்திரத்தை 20 தடவை பாராயணம் செய்து வழிபட்டு பலன் அடையலாம்.

? மகன் ஜாதகப்படி அவனுக்கு மருத்துவப் படிப்பு சாத்தியம் ஆகுமா?

-வீ.பத்மா, நாகர்கோவில்

உங்கள் மகன் மகம் நட்சத்திரக் காரர்; தனுசு லக்னத்தில் பிறந்துள் ளார். லக்னத்திலிருந்து 3-ம் இடத்தில் சனி அமர்ந்துள்ளார். அவரின் லக்னத்துக்கு தனம், குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியானவர் சனிபகவான். மேலும் குருபகவானும் சாதகமாகவே அமைந்துள்ளார். எனவே, மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு உண்டு.

எனினும் தற்போது நடைபெறும் தசை மற்றும் புக்தி காலங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. ஆகவே சிற்சில தடைகள் ஏற்படலாம். அதன்பொருட்டு மனச் சோர்வு அடையாமல் முயற்சி செய்யுங்கள்; நிச்சயம் பலன் கிடைக்கும்.

? வெகுகாலம் குலதெய்வம் எதுவென்று தெரியாத நிலையில், என் சகோதரர் ஒருவர் பிரச்னம் மூலம் சொந்த ஊர் அருகிலுள்ள பெண் தெய்வமே எங்களின் குலதெய்வம் என்று அறிந்த தாகச் சொன்னார். அவர் சொல்வது சரியாக இருக்குமா?

-எம்.கணேசன், சென்னை-77

குலதெய்வத்தைப் பற்றி அறிய வேண்டும் எனில், குடும்பத்திலுள்ள அனை வரின் ஜாதகங்களையும் வைத்துக் கொண்டு, அஷ்டமங்கல பிரச்னம் பார்த்தே துல்லியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

தங்களின் ஜாதகப்படி, செவ்வாயும் சுக்கிரனும் மிதுனத்தில் உள்ளனர். செவ்வாயைவிட சுக்கிரன் வலிமையுடன் காணப்படுகிறார்.

சுக்ரன் பெண் கிரகம் என்ற அடிப் படையில் உங்களின் குலதெய்வம் பெண் தெய்வம் என்று கூறலாம். எனினும் முறைப்படி உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இணைந்து, நல்லதொரு நாளில் அஷ்டமங்கல பிரச்னம் மூலம் உங்களின் குலதெய்வத்தை அறிவது சிறப்பு.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன், 757,

அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

ஜனவரி 26 முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கால் வலி, கழுத்து வலி குறையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் முன்மொழியப்படும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும். புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். உயர்கல்வியில் நாட்டம் கூடும். உங்கள் பூர்வபுண்யாதிபதி சூரியன் 10-ம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு உண்டு. உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

ராகுவும், கேதுவும் சரியில்லாததால் குடும்பத்தில் பிரச்னைகள் வந்து போகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டுவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால் தந்தையாருடன் விவாதம் வரும். சேமிப்புகள் கரையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குருவும் சாதமாக இருப்பதால் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும்.

ராகுவும், கேதுவும் சரியில்லாததால் உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வீடு வாங்க, கட்ட கடன் உதவி கிடைக்கும். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பூர்விகச் சொத்தின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

8-ல் சனியும், குருவும் நிற்பதால் எதையும் முன்யோசனையுடன் செய்யப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும்.

புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

புதன் 7-ல் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்த அதிருப்தி விலகும். சூரியன் 7-ம் வீட்டில் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து போகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. 29-ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்திலிருந்து வந்த பிரச்னைகள் விலகிப் போகும். ராகுவும் லாப வீட்டில் நிற்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கேது 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் செலவுகளும் அலைச்சல்களும் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

ராசிநாதன் சூரியனும், சனியும் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கழுத்து வலி, வேலைச்சுமை வந்து போகும். 29-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்து வந்து செல்லும்.

வியாபாரத்தில் கடையை உங்கள் ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கலைத்துறையினரை உதாசினப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

எதிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்துவீர்கள் .

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

புதன், சுக்கிரன் சாதகமாக நிற்பதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளுக்கு சுமுகமாகத் தீர்வு காண்பது நல்லது. கேது 3-ல் நிற்பதால் குடும்பத்தில் தைரியமான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

ராகு 9-ல் நிற்பதால் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

உணர்ச்சி வசப்படாமல் சாதிப்பீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு. சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். சனி, குரு சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அடுத்தடுத்து செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாள்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சமயோஜித புத்தியால் வெற்றி அடைவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

சூரியனும், சனியும் 3-ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க வேலைகள் முடியும். சுக்கிரன் வலுவாக நிற்பதால் கடனை பைசல் செய்வீர்கள். வீட்டைக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள்.

வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வேலையாள்களால் ரகசியங்கள் கசியக் கூடும். உத்தியோகத்தில் கடுமையாக உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளை வெளியிட்டு புகழ் பெறுவார்கள்.

காத்திருந்து காய் நகர்த்தி வெல்வீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணம் வரும். கடன் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் கறாராகப் பேசினால் நீங்கள் மாறி விட்டதாகச் சிலர் குறை கூறுவார்கள். ராகு 6-ல் நிற்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சாதுர்யமான நடத்தையால் மதிக்கப்படுவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் வரும். பூர்விகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்து செல்லும். அரசுக் காரியங்கள் இழுபறியாகி முடியும்.

கேது 11-ல் நிற்பதால் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சுமாராக இருக்கும். பங்குதாரர்கள், வேலையாள்களால் கவலைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி வெறுப்பாகப் பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினருக்கு சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

வளைந்து கொடுத்து சாதனையை எட்டுவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிதாக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நெடுநாள்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். 12-ல் சூரியன் மறைந்திருப்பதால் வீண் விரையம், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் நிற்பதால் வேலைச்சுமை இருந்துகொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.

குருவும் 12-ல் நிற்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அலைச்சலில் முடியும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சம்பளம் உயரும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

`சுக்ரனுக்கான பரிகாரம் என்ன?'

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதமான வீடுகளில் பயணம் செய்வதால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை தேடி வரும். புதிதாகத் தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.