Published:Updated:

கல்யாண ரேகை

கல்யாண ரேகை
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண ரேகை

செய்யனூர் R. சுப்பிரமணியன்

கல்யாண ரேகை

செய்யனூர் R. சுப்பிரமணியன்

Published:Updated:
கல்யாண ரேகை
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண ரேகை

ருவரது திருமண பந்தத்தை, வாழ்வைச் சுட்டிக்காட்டவல்ல முக்கியமான ரேகை, கல்யாண ரேகை. இந்த ரேகையின் பலன்கள் பொதுவாக ஆயுள் ரேகை மற்றும் விதி ரேகையுடன் நெருங்கிய தொடர்புகொண்டது.

இந்தக் கல்யாண ரேகையானது புதன் மேட்டிலோ அல்லது கையின் பின்புறத்திலிருந்து வந்து புதன் மேட்டில் அமையும் நேர்க்கோடாகவோ அமையும். தெளிவான நீண்ட திருமண ரேகையே திருமணத்தை உறுதி செய்யும். அந்த ரேகை சிறியதாக அமைந்தால், அதற்கேற்ப பலன் அமையும் என்று அறியலாம்.

கல்யாண ரேகை
கல்யாண ரேகை

கல்யாண ரேகைக்கும் இதய ரேகைக்கு உள்ள அளவை வைத்து திருமணக் காலத்தை யூகித்து கணிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெளிவான கல்யாண ரேகையும் சந்திரமேட்டிலிருந்து கிளம்பி விதி ரேகையைத் தொடும் கிளை ரேகையும் அமையப் பெற்றிருந்தால், திருப்திகரமான திருமண வாழ்க்கை அமையும் என்று சொல்லலாம். விதி ரேகைக்கு இணையான ஒரு நேர்க்கோட்டு ரேகை இருந்தாலும் சுகவாழ்வு கிடைக்கும்.

கல்யாண ரேகை
கல்யாண ரேகை

இதய ரேகையிலிருந்து மேல் நோக்கி செல்லும் சிறிய ரேகைகளும் நல்ல திருமண வாழ்வின் அறிகுறிகள். கல்யாண ரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை புறப்பட்டு சூரிய மேட்டையோ, சூரிய ரேகையையோ சென்றடைந்தால் புகழும் பெயரும் பெற்ற ஒருவரை துணைவராகப் பெறும் பாக்கியம் உண்டு. கல்யாண ரேகைக்கு இணையாக வேறு ஒரு ரேகையும் அமையப் பெற்றிருந்தால், திருமண உறவுக்குப் பின்னரும் வேறு ஒரு தொடர்பு இருப்பதை உணர்த்தும்.

கல்யாண ரேகையானது நேராகவும் தொடர்ச்சியாகவும் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அமைவதே சிறப்பு. கல்யாண ரேகையில் ரோமக் கால்கள் போன்ற சிறிய ரேகைகள் தோன்றி இதய ரேகை பக்கம் செல்லும் அமைப்பு, துணைவருக்கு நோய் நொடிகள் இருப்பதை சுட்டிக்காட்டும்.

கல்யாண ரேகை
கல்யாண ரேகை

கல்யாண ரேகையில் தோன்றும் தீவுக்குறி, கசப்பான மண வாழ்க்கை அல்லது மணமுறிவு ஏற்படும் நிலையைக் குறிக்கும்.

கல்யாண ரேகையிலிருந்து பலவித சிறு ரேகைகள் கீழ் நோக்கி சென்றாலும் தீவுக் குறிகள் தென்பட்டாலும் திருமண பந்தம் கசப்பாகவே முடியும்.

கல்யாண ரேகை இரண்டாக பிளவுபட்டுக் காணப்பட்டால் திருமண முறிவு ஏற்படலாம். புதன் மேட்டிலிருந்து ஒரு ரேகை புறப்பட்டு, கல்யாண ரேகையை வெட்டினால் திருமணத்துக்கு பலத்த எதிர்ப்பு உண்டாகும்.

கிரகமேடுகளும் குணங்களும்...

ள்ளங்கையில் எந்த கிரக மேடு தெளிவாக உள்ளதோ அந்த கிரகத்துக்குரிய விசேஷ குணங்கள் அமையும்...

சுக்கிர மேடு - சுகம், சந்தோசம்

குரு மேடு - எதையும் சாதிக்கும் திறன்

சனி மேடு - கடின உழைப்பு, உயர் பதவி, பொறுமை

சூரிய மேடு - அதிகாரம், அந்தஸ்து

புதன் மேடு - அறிவுத் திறன், வியாபாரத் திறன்

சந்திரன் மேடு - பரிவு, பாசம், கற்பனை வளம்

செவ்வாய் மேடு - வீரியம், தைரியம்