Published:Updated:

சுக்கிர தசை உங்களுக்கு எப்படி?

சுக்கிர தசை
பிரீமியம் ஸ்டோரி
News
சுக்கிர தசை

`ஜோதிடமணி’ வசந்தா சுரேஷ்குமார்

சுக்கிர தசை உங்களுக்கு எப்படி?
ம்முடைய பூர்வ புண்ணியத்தை ஒட்டி அமையும் சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கை அமையும் என்பது ஜோதிட விதி.

வாழ்க்கை வளம்பெற நம்முடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நமக்குக் குறைவின்றி கிடைக்க வேண்டும். அதற்கு ஜாதகத்தில், அதிர்ஷ்ட எண்ணான 6-ன் அதிபதியான சுக்கிரன் வலுப் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.

மிக அழகான நவீன வசதிகள்கொண்ட வீடும், வாகன யோகமும், புகழும், செல்வமும், இசை, நாட்டியம், கவிதை, கற்பனைத்திறன், சினிமாத்துறை போன்றவற்றில் சிறந்து விளங்கவும் சுக்கிர பலம் தேவை.

பிருகு மகரிஷியின் குமாரரான இவர், தன் ஐம்புலன்களை ஒடுக்கி கடுந்தவம் புரிந்து சர்வேஸ்வரர் அனுக்கிரகத்தால் அற்புதமான மந்திர உபதேசங்களைப் பெற்றவர். மிருதசஞ்சீவினி மந்திரத்தினால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் அற்புத ஆற்றல் கொண்டவர். இதனால் பார்கவன், வெள்ளி, வேதாங்க பாரகன், கவி, பிரபு எனப் பல பெயர்களைத் தாங்கி நிற்பவர்.

பனித்துளி, முல்லை, வெண்தாமரை போன்ற வெண்ணிறம் உடைய இவர், அசுரர்களின் குரு. சகல கலைகளுக்கும் காரகர் இவரே. நம் உடலில் கண்களைப் பிரதிபலிப்பவர். ஜனன உறுப்புகளை ஆட்சி செய்பவர். ஆண் பெண் உறவைப் பேணிக் காப்பவர். உடலின் வீரியம் இவர். பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ்டம், கலைகளின் பொக்கிஷம் என அனைத்துக்கும் சொந்தக்காரர் இவரே.

எப்போதும் நீர்நிலைகளில் சஞ்சரிப்பவர். நவரத்தினங்களில் வைரம் இவருடையது. வெள்ளி உலோகத்துக்கு அதிபதி ஆவார். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களின் அதிபதி. லட்சுமி, வருணன் போன்றவர்கள் அதிதேவதைகள் ஆவர். தன்னை பூஜிப்பவர்களுக்கு நன்மைகளைச் செய்வதில் வல்லவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் பலன்களும்!

ஆய கலைகள் 64-க்கும் காரகத்துவம் வகிக்கும் சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் நிற்பது நல்ல அமைப்பாகும்.

கும்ப லக்கினத்தில் பிறந்து லக்னத்துக்கு 4-ம் வீடான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சியாக அமையப் பெற்ற ஜாதகர் அழகான வீட்டில் வாசம் செய்வார்.

இன்னொரு ஜாதகர் மிதுன லக்னம் எனக்கொள்வோம். பத்தாம் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம் என அமையும் ஜாதகர் கலை உலகில் கொடிகட்டிப் பறப்பார்.

சுக்கிர தசை உங்களுக்கு எப்படி?

இப்படிப்பட்ட புகழும் பெருமையும் தேடிவர சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திரம், திரிகோணத்தில் பலமாய் இருக்க வேண்டும். இது மாளவ்ய யோகம் எனப்படும். நல்ல தோற்றத்துடன் செல்வந்தராக, உறவுகள் போற்றும்படியாக வாழ்வில் எல்லாவிதமான சுக சௌகர்யங்களுடனும், லட்சுமிகடாட்சத்துடன் நிறைவான வாழ்வை இந்த யோகம் அள்ளித்தரும்.

இப்படிப்பட்ட மாபெரும் யோகங்களை அள்ளித் தரும் மாளவ்ய யோகம் தங்களின் ஜாதகத்தில் அமையவில்லை என்றாலும் சுக்கிரன் பகை, நீசம் என்று தங்களின் ஜாதகத்தில் பாதகமாக அமைந்து இருப்பினும் வருந்தவேண்டாம்.

பரிகாரங்கள் மூலம் சுக்கிரனின் அருட்பார்வை பட்டுவிட்டால், பட்டமரமும் துளிர்க்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். உள்ளம் மகிழும்படியான சம்பவங்கள் நிகழும்.

இனி, சுக்கிர தசையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சகலமும் அருளும் சுக்கிர தசை!

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை என்பது இருபது ஆண்டுகளுக்கு நடக்கும். மற்ற நேரத்தில் வாழ்க்கை எப்படி இருந்தாலும், இந்த இருபது ஆண்டுகளில் ஆசைப்படும் அனைத்தையும் கொடுத்து சந்தோஷப்படுத்துவார் சுக்கிரன்.

சந்தோஷமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, குழந்தைகளால் கிடைக்கும் மன நிம்மதி, நல்ல பெயர், புகழ், வாகனங்கள் வாங்கும் பாக்கியம், தொழில் மேம்பாடு என அனைத்தையும் கொடுப்பார் சுக்கிரன். ஆனால், சுக்கிரன் இருக்கும் இடம், உடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சிலருக்கு மோசமான பலன்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்க்கை முழுக்கவே சுக்கிர தசை நடக்கும் பாக்கியம் இல்லாமலும் போய்விடும்.

சுக்கிர தசை நடக்கும்போது சுக்கிரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்த நேரத்தில் கிடைக்கும் பலன்கள் மாறுபடும். லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் எந்தச் செயலை எடுத்தாலும் அதில் வெற்றி கிட்டும். நல்ல அரசாங்க வேலை கிடைக்கும். படிப்பு, சுகமான வாழ்வு என நிறைவாக அமையும்.

இரண்டாவது இடத்தில் இருந்தால் அந்த ராசிக்காரர் இலக்கியப் படைப்பாளியாக இருப்பார். பேச்சுத் திறன், அடுத்தவர்களுக்கு உதவும் தயாள குணம் என எல்லாமும் இருக்கும். நிறைய வழிகளில் பணவரவு இருக்கும். ருசியாகச் சாப்பிடுவதில் ஆசைகொண்டவராக இருப்பார்.

சுக்கிரன் மூன்றாம் இடத்தில் இருந்தால் அவர் தைரியசாலியாகவும் எப்போதும் உற்சாகத்துடனும் இருப்பார். விதவிதமான வாகனங்கள் வாங்கும் யோகம் இருக்கும்.

நான்காம் இடத்தில் இருந்தால் ராஜபோக வாழ்க்கைதான். அரசியல் செல்வாக்குப் படைத்தவராக இருப்பார். உலகம் முழுக்கப் பெயர் தெரிகிற அளவு பிரபலமாவார். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வெற்றி கிட்டும்.

ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் கல்வி மற்றும் கலைகளில் திறமைசாலியாக இருப்பார். நிறைய குழந்தைகள் பிறக்கும். பெரிய பதவி கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பார். இவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அவருக்கு சுக்கிர தசைகூட நல்லதாக அமையாது. பண விஷயமாக பயமும் பொருள் நாசமும் ஏற்படும். எப்போதும் ஏதாவது உபத்திரவம் இருக்கும். பிறப்பு தொடர்பான உடல் பாகங்களில் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

ஏழாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். சந்தோஷமான விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால்கூட அவற்றை அனுபவிக்க முடியாதபடி உடல்நலம் மோசமாக இருக்கும்.

அஷ்டமம் எனப்படும் எட்டாம் இடத்தில் இருக்கும்போது, இஷ்டமில்லாத காரியங்கள் நடக்கும். ஆனால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது.

ஒன்பதாம் இடத்தில் இருந்தால் பெயரும் புகழும் கிடைக்கும். நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பணம் வரும்.

பத்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அவர்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். உயர்ந்த அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.

பதினோராவது இடத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் அதிகமான சுகத்தை அனுபவிப்பார்கள். கலைகளில் ஆர்வம்காட்டும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

பன்னிரண்டாவது இடத்தில் எந்தக் கிரகம் இருந்தாலும் பொதுவாக மோசமான பலன்களையே தரும். இங்கு இருந்து நல்லது செய்யும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். உடல்நலம் மேம்படும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். பண வரவு நிறைய இருக்கும்.

இந்த இடங்களில் சுக்கிரனுடன் இருக்கும் கிரகங்களின் கூட்டணி, பலன்களில் சில மாற்றங்களைச் செய்யக்கூடும். அவற்றையும் ஆராய்ந்து பார்த்து பலன் அறிய வேண்டும்.

பொதுவாக, சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும். இதைப் போக்குவதற்கு நவகிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்ய வேண்டும்.

இதற்குப் பெயர் ‘சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும் நிஜத்தில் சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை. எந்த பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.

சுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்துவரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.

சுக்கிர சாந்தி செய்யும்போது மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகாலட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக்கிழமைகள் படித்து, மகாலட்சுமியை வணங்கி வந்தால் சுக்கிர சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.

சுக்கிர பகவானின் அருள்பெற...

சுக்கிரனின் பார்வை பட்டால் பாலைவனம் சோலைவனம் ஆகும். இல்லறம் இனிக்கும். எளிய பரிகாரங்களால் சுக்கிரனின் கருணையைப் பெற, இவரை பூஜிக்கலாம். ஆண் பெண் இருபாலரும் இவரை வணங்குதல் நன்று.

சுக்கிரனுக்குச் சிவ வழிபாடும், சிவனடியார்களைப் போற்றுவதும் மிகவும் பிடிக்கும்.

சுக்கிர தசை உங்களுக்கு எப்படி?

வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் விசேஷம். பூஜையின்போது மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம், ஸ்ரீலட்சுமி துதி, கனகதாரா ஸ்தோத்ரம் போன்றவற்றைக் கூறிய பின்பு தீப ஒளியில் அம்பாளை நமஸ்கரிக்க நற்பலன்கள் கூடும். வெண்பொங்கல், மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து, தாமரை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படி இருந்தாலும், சுக்கிரனுக்கு மிகவும் ப்ரீதியான பூஜைகளான சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பௌர்ணமி பூஜை, பஞ்சமி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜை போன்ற பூஜைகளில் தங்களால் இயன்ற பூஜையைச் செய்து சுக்கிர பகவானின் அருளால் சகல செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்.