Published:Updated:

உங்களுக்கு வாகன யோகம் எப்படி?

புது வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
புது வாகனம்

புது வாகனம் அமைந்த பிறகு, குலதெய்வச் சந்நிதிக்குச் சென்று குலதெய்வத்தின் அருளைப் பெறுவது மிகவும் சிறப்பு

உங்களுக்கு வாகன யோகம் எப்படி?

புது வாகனம் அமைந்த பிறகு, குலதெய்வச் சந்நிதிக்குச் சென்று குலதெய்வத்தின் அருளைப் பெறுவது மிகவும் சிறப்பு

Published:Updated:
புது வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
புது வாகனம்

சொல்லிய வித்தை வாகனம் சுபங்கள்

சூழ்வியா பாரமும் மனையும்

வெல்லுமேம் பாடும் சவுக்கியம்

அன்னை விரும்பநல் உறவினர் ஆகும்.

ருவரின் ஜாதகத்தில் 4-ம் இடம் மிக முக்கியமான ஸ்தானங்களில் ஒன்று. அது, கேந்திர ஸ்தானங்களில் ஒன்றாக வருவதுடன், பூரண சுப ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் இருக்கும் கிரகமே அவரின் வாகன யோகத்துக்குக் காரணமாகிறது. அந்த நான்காம் இடத்து அதிபதி யோடு எந்த கிரகம் சம்பந்தப்பட்டு நிற்கிறதோ, அதைப் பொறுத்தே ஒரு மனிதனுடைய வாகன யோகம் அமையும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானமான வானூர்தி, குபேரனுடையது. ஆனால், அதை அனுபவிக்கும் முழு பிராப்தம் ராவணனுக்கே கிடைத்தது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, ஜோதிட விளக்கங்களும் பலன்களும் பல மாற்றங்களைக் கண்டுள்ளன.

அந்தக் காலத்தில் குதிரை, காளை மாடுகள் போன்றவை தேர் முதலான வாகனங்களில் பூட்டப் பட்டு, பயணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன ஆனால் இந்தக் காலத்திலோ பைக், ஆட்டோ, கார், பேருந்து என்று பல வகை வாகனங்கள் உள்ளன.

ஒன்பது கிரகங்களுமே பயணத்துக்கான வாகன யோகத்தை அளிப்பதற்கு முழுஅதிகாரம் உடையவை; அனைத்து கிரகங்களுமே பயணத்தில்தானே உள்ளன. ஒரு கிரகம் 4-ம் இடத்திலோ அல்லது 4-ம் இடத்து அதிபதியுடனோ தொடர்பில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அது தொடர்பான வாகன யோகம் அந்த ஜாதகத்தில் வேலை செய்யும். இதில், சுக்கிரனே முதன்மையானவராகவும் பிரதானமானவராகவும் இருந்து வாகன யோகத்தைத் தருகிறார்.

அரசு சார்ந்த வாகன யோகத்தைச் சூரிய பகவான் அருள்வார். சூரியன் 4-ம் இடத்தில் இருந்தாலோ அல்லது 4-ம் இடத்து அதிபதியுடன் தொடர்பில் இருந்தாலோ, அரசு சார்ந்த வாகனங்களை அனுபவிக்கும் யோகத்தைத் தருவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுக்கிரன் 4-ம் இடத்திலும் 4-ம்இடத்து அதிபதி யுடன் தொடர்பில் இருந்தாலும், சுக்கிரன் ரிஷப ராசியிலோ துலாம் ராசியிலோ இருந்தாலும் சிறுவயதிலிருந்தே வாகன யோகத்தைச் அனுபவிக் கக்கூடிய அமைப்பைத் தருவார்.

சனி, சரக்கேற்றும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண வழிவகுப்பார்.

செவ்வாய் பகவான் நான்காம் அதிபதியோடு தொடர்பிலிருந்தால் டிராக்டர், நெல் அறுவடை செயும் இயந்திரங்கள் முதலானவை, அந்த ஜாதகரின் ஆளுமையில் இருக்கும்.

சந்திரன், மிக உல்லாசமான பணமதிப்பு அதிகமுள்ள வாகனங்களை வாங்கக் காரணமாவார்.ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று அவரின் தசையும் நடந்தால், சொகுசு வாகனங்களை வாங்குவதற்கும் விமான பிரயாணங்கள் செய்வதற்கும் வாய்ப்பு உண்டாகும்.

உங்களுக்கு வாகன யோகம் எப்படி?

புதன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்று அமையும் போது அல்லது கன்னி, மிதுன ராசியில் புதன் இருக்கும்போது, ஜாதகர் கடன் பெற்றாவது வாகனம் வாங்கி விடுவார்.

ராகு, வாகன யோகம் தொழிலாக அமையக் காரணமாகிறார். பிரமாண்டமான பெரிய வாகனங் களைக் கையாளும் நிலைக்கும் இவரே காரணம்.மிகக்குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களான ரோடு ரோலர், பேட்டரியில் இயங்கும் கார் மற்றும் டூவீலர் ஆகியவை கேதுவின் அருளால் அமையும்.

குரு பகவான், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் எளிய விலைமதிப்புடன் கூடிய வாகனங்கள் அமைய காரணமாவார்.

வாகனம் அமைந்தாலும் அந்த வாகனத்தின் நிறமானது, தனிமனிதனுடைய ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகளின் அமைப்புக்கு ஏற்றவாறே அமையும்.

சுக்கிரன் வெண்மை, சிவப்பு நிறங்களுக்குக் காரணமா கிறார்.

சூரியன் - சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெளிர் மஞ்சள்.

சனி - கறுப்பு, கருநீலம், வெளிர் நீலநிறம்.

செவ்வாய் - சிவப்பு.

ராகு - நீல நிறம்.

புதன் - இவர் ஆளுமையால் பெரும்பாலும் பச்சை நிற வாகனமே அமையும்.

கேது - சகல வண்ணங்களிலும் வாகனத்தை அருள்வார்.

குரு - மஞ்சள் வண்ணமே பிரதானம்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால், அவர்கள் அதிகம் பிரயாணம் செய்யாமல், எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் வாழ்வார்கள். தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், அதிகமான பயணங்கள் செல்லும் நிலையும் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நிலையும் உண்டு.

வாகனம்... பரிகாரம்!

  • இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அமையவேண்டும் என்று விரும்புவோர், அவரவருடைய தசாபுத்தி மற்றும் கிரக அமைப்புகளின் அடிப்படையில், தெய்வங்களை வழிபாடு செய்யவேண்டும்.

  • வாகன யோகம் அமைவதற்குக் காரணமாக இருக்கும் ஜீவராசிகளான குதிரை, மாடு, யானை போன்றவற்றுக்கு உணவு தானம் வழங்குவதும் வாகன யோகத்துக்கு மேலும் பலம் சேர்க்கும். கருடாழ்வாரை வழிபாடு செய்து வந்தால், விமானப் பிரயாணம் மிக எளிதாகவும் சாதகமாகவும் அமையும்

  • சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் விஸ்வரூப வழிபாடு வாகன யோகத்துக்குப் பாதுகாப்பையும், பலத்தையும் தரும்.

  • புது வாகனம் அமைந்த பிறகு, குலதெய்வச் சந்நிதிக்குச் சென்று குலதெய்வத்தின் அருளைப் பெறுவது மிகவும் சிறப்பு.

உங்களுக்கு வாகன யோகம் எப்படி?

வாகன யோகம் குறித்து ஜோதிடரின் விளக்கங்களை வீடியோ வடிவில் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism