Published:Updated:

சனியின் பாதிப்பு கனவில் தெரியுமா? - கனவுகளும் பலன்களும்

சனி பாதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சனி பாதிப்பு

ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

ஜோதிடர்களிடம் சில நேரங்களில் நமக்கு வந்த கனவுகளைக் கூறி பலன் கேட்பதுண்டு.

கனவுகளுக்கும் ஜோதிடத்துக்கும் என்ன தொடர்பு? கனவுகளை நாம் நம்பிவிட முடியுமா? தூக்கத்தில் கண்ட கனவு பலித்து விட்டால், அதைவிட சுவாரஸ்யமான நிகழ்ச்சி நம் வாழ்வில் இருந்துவிடுமா!

ராமாயணத்தில் ராவணன் ஒரு கனவு கண்டான். அதில் ஒரு சிறிய வானரம் ராமனிடம் இருந்து வந்து, சீதையுடன் ராமனைப் பற்றி உரையாடுவதுபோல ஒரு நிகழ்ச்சியைக் கண்டு பதைத்து எழுகிறான்.

சரி, இந்தக் கனவுச் சம்பவம் என் வாழ்க்கையில் நடக்கும் என்றால், நான் சீதையைச் சென்று துன்புறுத்துவேன். அதைப் பார்த்துவிட்டு, அந்த சிறிய வானரம் அப்படியே போய் ராமனிடம் சொல்லட்டும் என்று தீர்மானித்தானாம்.

அதுபோலவே ‘திரிஜடை’ என்ற ராட்சசி தன் கனவில் ராவணன் முண்ட மாலை அணிந்தபடி, சாணிக் குழியில் சொந்தபந்தங்களுடன் இறங்குவது போல ஒரு கனவு கண்டாள். இது அவனுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவள், அதை சீதையிடம் விவரித்து தைரியமாக இருக்கும்படி சொல்கிறாள்.

ஆதிசங்கரரின் தகப்பனாரான சிவகுரு தனக்குச் சிவபெருமான் காட்சி தந்ததாகவும், ஓர் ஆண் குழந்தையைப் பெறும் பாக்கியத்தை தரப்போவதாக அருளியதாகவும் தன் மனைவி ஆர்யாம்பாளிடம் சொல்கிறார். இதற்கு ஆர்யாம்பாள் `சொப்பனம் கண்டீர்களா’ என்று சிவகுருவைப் பார்த்து கேட்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீண்ட காலம் குழந்தை இல்லாத தம்பதியரின் வேதனையைத் தீர்த்துவைக்கும் சுப நிகழ்வாகவே இந்தக் கனவு அமைந்தது. இதைப் போலவே நமது வாழ்விலும் கனவுகள் அங்கம் வகிக்கின்றன. இது ஒரு தனிமனித அனுபவமே தவிர, ஆராய்ச்சியோ, அறிவியலோ அல்ல.

சனியின் பாதிப்பு கனவில் தெரியுமா? - கனவுகளும் பலன்களும்

நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு நடக்க இருக்கும் இன்பங்களையும் துன்பங்களையும் தெய்வ சக்திகள், நமக்கு ஏதோ ஒரு மார்க்கத்தின் வழியாக உணர்த்த முயற்சி செய்கின்றன. இதையே நம் முன்னோர்கள் சகுன சாஸ்திரம், (அறிகுறிகள் - வலக்கண், இடக்கண் துடிப்பது), சொப்பன சாஸ்திரம் போன்றவை மூலம் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். இவற்றில் கனவுகளைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

கனவுகள் பிரம்ம முகூர்த்தநேரத்தில் வந்தால் நிச்சயம் அது நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அது இன்பமா, துன்பமா என்று உணர்ந்துகொள்ளும்படியாக இருக்க வேண்டும். சில கனவுகள் நேரடி பொருள் கொண்டும் சில கனவுகள் மறைமுக பொருள்கொண்டும் இருக்கும். அதை அப்படியே அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சபூதங்கள் சாத்விகமான முறையில் கனவில் தோன்றினால், சுப நிகழ்ச்சிகளும் சுப காரியங்களும் உடனடியாக நடக்கும். அவை விகாரமான முறையில் தோன்றினால் நிச்சயம் ஏதோ ஒரு விரயம், மனப்பதற்றம், வாக்கு வாதம், சண்டைச் சச்சரவு போன்ற விஷயங்கள் நமக்கு வரும் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

கனவில் தோன்றும் ஜீவராசிகள் நம்மை விரட்டாமல் இருந்தால், அந்தக் கனவை நல்ல கனவாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலும் அந்த ஜீவராசிகள் உணவுகேட்டு வந்தால், நிச்சயமாக அது நல்ல சகுனம் என்று அர்த்தம். அதே ஜீவராசிகள் ஆக்ரோஷமான முறையில் நம்மை விரட்டுவது போல அல்லது நம்மை பாதிப்பது போல கனவுகள் வந்தால், நிச்சயம் ஏதோ ஒரு விரயம் வரப்போகிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

பாம்புகள் கனவில் தோன்றி நம்மை விரட்டுவது போலவும் கடிப்பது போலவும் கனவு வந்தால் நிச்சயம் சனியினுடைய பாதிப்பு ஜாதகத்தில் உண்டு. அதுவும் அந்த நாகம் கறுத்த நிறம் கொண்டிருந்தால், நிச்சயம் சனிக்கான ப்ரீதி செய்வது மிக நல்லது.

காகம், கறுத்த உருவம், கறுத்த நிறப்பொருள், கறுத்த நிற உடை... இவை போன்ற விஷயங்கள் கனவில் வந்தால், அதுவும் சனியின் பாதிப்பே. அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் கனவில் வந்து அழுவதுபோல் காட்சி வந்தால், சனி உங்களுக்கு யோகத்தை தரப்போகிறார் என்று அர்த்தம்.

சனியின் பாதிப்பு கனவில் தெரியுமா? - கனவுகளும் பலன்களும்

அவர்கள் கனவில் தோன்றி விகாரமாக சிரித்தாலோ அல்லது மெதுவாகப் புன்னகைத் தாலோ நிச்சயம் மிகப்பெரிய விரயம் அல்லது மனக்கஷ்டம் நமக்காகக் காத்திருக்கும்.

யானை, பசு, அந்தணர்கள் கனவில் தோன்றி, நம்மிடம் விருப்பமானதைக் கேட்டால் அது நமக்கு நல்ல தன வரவையும் சுப காரியங்களையும் தரும். ஆனால், அவர்கள் கோபமாக இருந்துவிட்டால் நிச்சயம் வீட்டில் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

நீர்நிலைகள், கடல் அலைகள், மழை, பறவைகள் தோன்றினால்... அதுவும் அவை வெண்மை நிறமாக இருந்தால் - அது சந்திரனை குறிக்கின்ற அமைப்பாகவே பார்க்கப்படும். புதிய உறவுகளையும் உடைமைகளையும் வாங்கப் போகிறோமென கொள்ள வேண்டும். பறவைகள் இறந்துபோவது போலவும் அல்லது விகாரமாகவும் தோன்றினால், அது உறவின் பிரிவையோ அல்லது சொத்தின் முறிவையோ குறிக்கும்.

நம் கனவில் முன்னோர்கள் வருவது அல்லது குலதெய்வம் தோன்றுவது ராகு - கேதுவின் அமைப்பைக் குறிக்கும். அவர்கள் மஞ்சள், பால், தேன், பட்டு, நெய், வெண்ணெய், இனிப்பு, பழங்கள், காய்கறிகள், அரிசி போன்ற பொருள்களைக் கேட்டால், அது நமக்கு வாழ்வில் ஏற்றத்தை தரக்கூடிய கனவாகும். அவர்கள் விகாரமாக சிரிப்பது அல்லது புன்னகை தருவது நல்லதல்ல. அவர்கள் அழுதால், அந்தக் கனவு நமக்கு ஒரு சுப விரயத்தைக் குறிக்கும், எனவே, சில கனவின் அர்த்தங்களை எதிர்மறையாகப் பார்த்து பலன்களை அறிய வேண்டும்.

நம் கனவில் அரசாங்க முத்திரைகளும், தலைவர்களும், அதிகாரிகளும் தோன்றினால், அரசு வழியில் ஆதாயம் உண்டு என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் கோபாவேசத்துடன் தோன்றினால், அரசு வகையில் ஏதோ வில்லங்கம் வரப்போகிறதென்று பொருள். இது சூரிய பகவானுக்கு உரிய ப்ரீத்தியைக் குறிக்கும்

சித்தர், ஞானிகள், சந்நியாசிகள், மயில், சிவப்பு நிற பழங்கள், சிவப்பு நிற வஸ்திரங்கள் நம் கனவில் தோன்றுவது செவ்வாயைக் குறிக்கின்ற அமைப்பு. இது ஒரு மனிதனுக்கு நிலம், வீடு, கன ரக இயந்திரம் மற்றும் அது சார்ந்த சுப காரியங்களைக் குறிக்கும்.

நல்ல மகிழ்ச்சி தரும்படியான கனவு வந்தால் அல்லது சுப காரியம் நடக்கப்போகும்படியான கனவு ஏற்பட்டு, அதற்கான ஆயத்த வேலைகள் தயாராக இருந்தால், இப்படியான நிலை சுக்கிரனால் ஏற்படுவது.

கீரிப்பிள்ளை அல்லது தேவாங்கு கனவில் வந்தால், எதிர்பாராத தனவரவு நிச்சயம் உண்டு.

துளசி, வெண்தாமரை, பச்சைக்கிளிகள் கனவில் தோன்றினால் புத பகவானின் அமைப்பைக் குறிக்கும். இவை ஏதோ ஒரு தகவலைச் சொல்ல நமக்காக வந்திருக்கின்றன என்று அர்த்தம் கொள்ளலாம்.

மொத்தத்தில் நாம் கனவு காணும் நேரம், கனவில் வரும் பொருள்கள், ஜீவராசிகள், தோன்றும் நபர்கள், அவர்களின் ஆடை அணிகலன், அவர்களின் தன்மை ஆகியவற்றைப் பொருத்தே அந்தக் கனவுக்கான பலனைத் தெரிந்துகொள்ளவேண்டும்.