திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

தலைவாசல்!

தலைவாசல்
பிரீமியம் ஸ்டோரி
News
தலைவாசல்

ஈசான்யம் என்று சிறப்புப்பெற்ற திசை இது.

வீட்டுக்குத் தலைவாசல் மிகவும் முக்கியமானது. அது எந்த திசையில் இருந்தால், அந்த வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்பது குறித்து வாஸ்து நூல்கள் வழிகாட்டுகின்றன.

கிழக்கு: இந்தத் திசையின் அதிபதி இந்திரன். நவகிரக தத்துவத்தில் இந்தத் திசையின் ஆட்சி நாயகன் சுக்கிரன். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு திசையில் தலைவாசல் வைத்து வீடு கட்டினால், மிகவும் அதிர்ஷ்டம் உண்டாகும். அப்படி அமைக்க முடியாதவர்கள், இந்தத் திசையில் பூஜை அறை, படுக்கை அறை, தானிய அறை, வரவேற்பு அறையை அமைக்கலாம்.

தென்கிழக்கு: இதை அக்னி ஆட்சி செய்கிறார். நவகிரகத்தில் சந்திரன் ஆட்சி நாயகன். ரிஷபம், கன்னி, மகர ராசி அன்பர்கள் இந்தத் திசையில் தலைவாசல் அமைக்கலாம். இல்லையெனில் சமையலறை அமைக்கலாம்.

வடகிழக்கு: ஈசான்யம் என்று சிறப்புப்பெற்ற திசை இது. ஈஸ்வரனே இதன் அதிபதி. கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தோர் இங்கு வாசல் அமைப்பதால், அதிர்ஷ்டம் பெறுவர். மற்றவர்கள் வரவேற்பு அறை, பூஜை அறை அமைக்கலாம்.

தலைவாசல்!

மேற்கு: இதன் அதிபதி வருணன். நவகிரக நாயகன் செவ்வாய். மிதுனம், துலாம், கும்ப ராசிக்காரர்கள் இங்கே வாசல் அமைக்கலாம் . அதனால் அந்த வீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திருக்கும்.

தென்மேற்கு: இதன் அதிபதி நிருதிதேவன். நவகிரக நாயகன் ராகு. இந்த இடம் உயர்ந்து இருக்க வேண்டும்; இங்கே பள்ளமோ, திறப்புகளோ இருக்கக் கூடாது. ஆகவே, இங்கு தலைவாசல் அமைக்கக் கூடாது.

வடமேற்கு: இதன் அதிபதி வாயு. நவகிரக நாயகன் கேது. துலாம், கும்பம் ராசிக்காரர்கள் இந்தப் பகுதியில் வாசல் அமைக்கலாம். மற்றவர்கள் விருந்தினர் அறை அமைக்கலாம். சிலர், தானிய அறைகள் அமைப்பது உண்டு.

வடக்கு: இதன் அதிபதி குபேரர். நவகிரக ஆட்சி நாயகர் குரு. மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் இங்கு தலைவாசல் அமைத்தால் யோகம் வரும். மற்றவர்கள் இங்கே பணப்பெட்டி அறை, படுக்கை அறை அமைக்கலாம்.

தெற்கு: அதிபதி எமதருமன். நவகிரக ஆட்சி நாயகர் செவ்வாய். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் இந்தத் திசையில் தலைவாசல் அமைப்பது விசேஷம்.

- தி.ஹரிஹரன், சென்னை-44

ஜோதிடக் கேள்வி-பதில்கள் அடுத்த இதழில் இடம்பெறும்