Published:Updated:

தொழில் தொடங்க ஏற்ற காலம் எது?

தொழில் ஸ்தானம்
பிரீமியம் ஸ்டோரி
தொழில் ஸ்தானம்

ராம் திலக்

தொழில் தொடங்க ஏற்ற காலம் எது?

ராம் திலக்

Published:Updated:
தொழில் ஸ்தானம்
பிரீமியம் ஸ்டோரி
தொழில் ஸ்தானம்

தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் 10-ம் இடம் ஆகும். 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். இவற்றில் 10 என்பது உயர் கேந்திரமாகும். 10-ம் இடமும் 10-ம் வீட்டோனும் வலுப்பெற்றிருக்கும் ஜாதகக்காரர்களே சொந்தத்தொழிலில் வெற்றி பெற முடியும்.

கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு உலவும்போது தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத்துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமிர்தயோக நன்னாளில்...

அமிர்தயோகம் உள்ள நாள் விசேஷம். அடுத்தபடியாக சித்தயோகம். மரணயோகமும், பிரபாலாரிஷ்டயோகமும் நிச்சயம் விலக்கப்பட வேண்டும். அதேபோல், தொழில் தொடங்கும் நாள் சுபமுகூர்த்த நாளாக அமைவது சிறப்பு.

தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் பலமாக உள்ள லக்னத்தைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட லக்னம் அமையும் பஞ்சக சுத்தம் உள்ள (திதி, வார, நட்சத்திரம், லக்னம், துருவம்) நேரத்தில் தொழில் ஆரம்பிப்பது நல்லது.

மேலும், உலகில் பலவிதமான தொழில்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கிரகம் வலுப் பெற்றிருக்க வேண்டும். தொழிலில் ஈடுபடும் முன் அந்தத் தொழிலுக்குரிய கிரகம் ஜாதகத்தில் பலமாக உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆபரண வியாபாரம் தொடங்க...

ஜன்ம லக்னப்படி தொழில் ஸ்தானாதிபதி எங்கிருக்கிறார், அவருடன் கூடிய கிரகம் எது, அந்த கிரகத்தின் தன்மை, தொழில் ஸ்தானாதிபதி இருக்கும் வீடு, தொழில் ஸ்தானாதிபதியைப் பார்க்கும் கிரகம், தொழில் ஸ்தானாதிபதி இருக்கும் வீட்டின் அதிபதியின் பலம் ஆகியவற்றைப் பொறுத்தே தொழில் அமையும்.

குறிப்பாக ஒருவர் தங்கம், வெள்ளி, ரத்தின வியாபாரம் செய்ய நல்ல நேரம் கேட்டால்... துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி ஆகிய திதிகள் வரும் நாள் சிறப்பானவை. அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் சிறப்பானவை.

மேற்குறிப்பிட்ட திதிகளில் எந்தத் திதி வந்தாலும் சிறப்பானதாகும். நட்சத்திரம் மட்டும் அவரது ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9-ம் நட்சத்திரமாக வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொழில் ஸ்தானம்
தொழில் ஸ்தானம்

குறிப்பிட்ட நாளில் வரும் ராசி, ஜாதகரின் ராசிக்கு 6, 8, 12-வது ராசியாக இல்லாமல் இருப்பது அவசியம்.குறிப்பிட்ட நாளில், லக்னத்துக்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, சுக்கிரன், பாபிகளுடன் சேராமலும் புதன், வளர்பிறை சந்திரன் இருப்பதும் விசேஷம். பொதுவாக சுப நாள்களான திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தொழில் தொடங்குவது விசேஷம்.

இதில் புதன்கிழமை மிகச் சிறந்தது. பிசினஸுக்குக் காரகன் புதன் என்பதால், புதன் கிழமையில் தொழில் ஆரம்பிப்பது சிறப்பு!

ஹோட்டல் தொழில் கைகொடுக்குமா?

ஜாதகத்தில் 2-ம் இடம் உணவுப் பொருள்களைக் குறிக்கும். இந்த வீட்டுக்கு அதிபதி வலுத்து தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டுடன் தொடர்புகொண்டு இருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் உணவுப் பொருள்கள் மூலம் ஆதாயம் பெறுவார்.

2-ம் இடத்தில் சுப கிரகங்களான குரு, சுக்ரன், தனித்து வலுப்பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியோர் அமர்ந்து 10-ம் வீட்டோனுடன் தொடர்புகொண்டிருந்தால் ஹோட்டல் தொழில் மூலமாக நிறைய சம்பாதிக்கலாம்.

இரண்டாம் வீட்டுக்கு அதிபதி சுப கிரகமாகி, 1,4,7,10 ஆகிய இடங்களிலோ, 5 மற்றும் 9-ம் இடங்களிலோ இருப்பது விசேஷம் ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட ஜாதகருக்கு உணவுப் பொருள்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

இரண்டாம் வீட்டோன் 11-லும், 11-ம் வீட்டோன் இரண்டிலும் வலுப்பெற்று இருந்தால் உணவுப் பொருள்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். இரண்டாம் வீட்டு அதிபதியை குரு பார்க்க, உணவு விடுதிகளால் லாபம் கிடைக்கும். இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு ஹோட்டல் தொழில் என்றில்லாமல், உணவு தொடர்பான துறைகளில் வேலையில் அமரும் வாய்ப்பும் உண்டாகும்.

இரண்டாம் வீட்டில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது பலவீனமாக இருக்கக் கூடாது.

செய்யும் தொழில் உணவு சம்பந்தமானது எனில், ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தையும் அதற்கு உரிய அதிதேவதையையும் வழிபடுவதன் மூலம் அதிக ஆதாயம் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism