Published:Updated:

வாடகை வீட்டில் வாஸ்து!

குடியேறும் வீட்டில் வெளிச்சம் நன்றாக வர வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி

சொந்தமாக வீடு கட்டுபவர்கள் நல்ல வாஸ்து அமைப்புடன் வீட்டைக் கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் என்ன செய்வது... அவர்கள், குறைந்தபட்சம் சில அமைப்புகளைக் கவனிப்பது அவசியம்.

குடியேறும் வீட்டில் வெளிச்சம் நன்றாக வர வேண்டும். அந்த வீடு தெருக்குத்து வீடாக இருந்தால் தவிர்த்துவிடலாம். வேறு வழியே இல்லை; அப்படியான ஒரு வீடுதான் கிடைத்திருக்கிறது என்னும் நிலையில், வீட்டுக்காரரிடம் சொல்லி, வீட்டு முகப்பில் சிறு விநாயகர் சிலை அல்லது திரு உருவப்படம் அமைப்பது நல்லது.

உள்ளே நுழையும்போது வாசற்படிக்கு இடப்புறம் அதிகம் இடம் அமைந்துள்ள வீடு விசேஷம். இல்லையெனில் இடது வலது இருபுறமும் சம அளவு இடம் அமைந்துள்ள வீடாகப் பார்க்கலாம்.

வாடகை வீட்டில் வாஸ்து!

பிரதான கேட் அல்லது கதவுகள் நிலைப் படிகளில் விரிசல் இருந்தால் உடனடியாக சரிசெய்வது அவசியம். பெரும்பாலும் தரையில் விரிசல் இருப்பதையும் சரிசெய்ய வேண்டும். மற்றபடி எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்... வீட்டை மிகச் சுத்தமாக வைத்துக்கொள்வது. சுத்தமான இல்லத்தில் கிரகலட்சுமியின் கடாட்சம் பொங்கிப் பெருகும்.

- நமசிவாயம், தூத்துக்குடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோதிடப் பழமொழிகள்!

கேட்டையில் பிறந்தால் சேட்டனுக்கு ஆகாது, மூலத்து மாமியார் மூலையிலே, பூராடத்தின் கழுத்தில் நூலாடாது...இப்படியான பல பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன. இவற்றை நம்பி, சில நட்சத்திரங்களை ஒதுக்கும் நிலையும் உள்ளது. இது தவறு.

இந்தப் பழமொழிகளின் கருத்துக்கு பிருஹத் ஜாதகத்திலோ, வராஹமிஹிரர் சாஸ்திரத்திலோ எந்த ஆதாரமும் இல்லை. தனிப்பட்ட ஒரு சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்துப் புனையப்பட்ட அடுக்குமொழிச் சொற்கள் இவை. பழமொழியை ஆதாரமாகவைத்து, அந்த நட்சத்திரக்காரருக்குப் பலன் சொல்வது சாஸ்திர விரோதமானது.

உதாரணமாக, மூல நட்சத்திரத்தைச் சொல்லலாம். மூல நட்சத்திரப் பெண் அல்லது பையனுடன் திருமணம் செய்தால், மாமனாருக்கு ஆகாது என்ற தவறான நம்பிக்கை பலரை பாதித்திருக்கிறது. ஒருவன் வாழ்க்கை முடியும் சம்பவம், ஜோதிட ரீதியாக மூன்று அம்சங்களைப் பொருத்தது. அவன் ஆயுள் பலம், அவன் மனைவியின் மாங்கல்ய பலம், அவனது மகனின் பித்ரு கர்ம பலம் ஆகியவையே அவை. இவற்றை அனுசரித்தே ஒருவனின் மரணம் பற்றிக் குறிப்பிட முடியும். அப்படியிருக்க, மூல நட்சத்திரத்தில் மருமகள் வந்தால் மாமனார் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உண்மை இருக்க முடியுமா?

ஆகவே, பழமொழிகளின் அடிப்படையில் நட்சத்திரங் களை ஒதுக்கக் கூடாது.

- கே.சதாசிவம், நெல்லை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு