என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஏப்ரல் 13 முதல் 26 வரை

ராசி பலன்கள்

மேஷம்: எதிலும் வெற்றி அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். கணவர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். இங்கிதமான பேச்சால் மாமனார் மாமியாரைக் கவருவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். முன்கோபம், வீண் அலைச்சல், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கும். ஓரளவு பணம் வரும். வீடு, வாகன வசதி பெருகும். மாமனார், மாமியாருக்கு உங்கள்மீது நம்பிக்கை வரும். வீண் செலவு, காரியத் தாமதம், கண் எரிச்சல் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். உறவினர்களிடம் இடைவெளி தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை தூக்கும். மேலதிகாரி உதவுவார். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: பிரச்னைகளைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை வாங்குவீர்கள். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். வீடுகட்டும் பணி முழுமையடையும். மாமியார் நாத்தனாருடன் இருந்த நெருடல்கள் நீங்கும். பதற்றம், தடுமாற்றம், வீண் செலவுகள் வந்து விலகும். வியாபாரத்தில் கடையை இடம் மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிரடி மாற்றங்கள் நிகழும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அவ்வப்போது இனம் தெரியாத கவலைகள், வீண்பழி, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். முன்கோபம் குறையும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். கணவரின் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். மாமனார், மச்சினர் உதவுவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். தொட்டது துலங்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வீடு கட்டிக் குடி புகுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: நிர்வாகத்திறன் கூடும். வராது என்றிருந்த பணம் வரும். பழைய மனையை விற்பீர்கள். கணவர் உங்கள் செயல்களுக்கு ஒத்தாசையாக இருப்பார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல பெண் அமைவார். நாத்தனார் ஒத்துழைப்பார். அரசியல்வாதிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்பார்த்தவையில் சில நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வங்கிக் கடன் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருந்த வர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். மனோபலம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். கணவரின் அன்பை அதிகமாகப் பெறுவீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் வரும். பங்குதாரர்களிடம் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புதிய பாதையில் சென்று வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: பிரச்னைகள் ஓயும். பிற்பகுதியில் குடும்பத்தில் அமைதி பணவரவு, சுபச்செய்தி யாவும் உண்டு. பிள்ளைகள் செலவு வைப்பார்கள். பிரச்னை களின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். தினம்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். காத்திருந்து காய் நகர்த்தும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: எதிர்பார்த்த பணம் வரும். புதிய திட்டங்கள் உதயமாகும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அதிகார பதவிகள் தேடி வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம்கண்டறிந்து வளர்ப்பீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவர் பாசம் காட்டுவார். இருவரும் கலந்து பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் திறனை வளர்க்க அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். சொந்தங்களின் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மகனுக்கு நல்ல வேலை அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: பணப்பற்றாக்குறை நீங்கும். குழம்பிக்கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். மாமியாரின் கோபம் விலகும். காதுவலி, கால்வலி வந்து நீங்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நகைகளை இரவல் தர வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தி யோகத்தில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனங்களால் ஆதாயம் உண்டு. வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்: பிரச்னைகளைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். கோபம் குறையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் வரும். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். தன்னம்பிக்கையால் தலைநிமிரும் நேரமிது.