லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

மேஷம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய சொத்தை விற்று உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவருக்கு வருமானம் கூடும். அவரின் புது முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். மாமனார், மாமியார் உங்களுடன் மனம்விட்டுப் பேசுவார்கள். ஏமாற்றம், அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நேரமிது.

ரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் முன்னேற வேண்டுமெனத் துடிப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார். அவ்வப்போது எதிலும் நம்பிக்கையின்மை, தயக்கம், ஏமாற்றம் வீண்செலவு வந்து போகும். வியாபாரத்தில் லாபம் குறையாது. உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வரக்கூடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

மிதுனம்: புகழ், கௌரவம் உயரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவர் முழுமையாக நேசிப்பார். அவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். உறவினர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரமிது.

கடகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டுப் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ரகசியங்கள் கசியக்கூடும். உத்தியோகத்தில் அநாவசியப் பேச்சைக் குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

சிம்மம்: பெரிய திட்டங்கள் நிறைவேறும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பணபலம் உயரும். கணவர், உங்களின் திறமையைப் பாராட்டுவார். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். பிள்ளைகள், உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வழக்கு சாதகமாக முடியும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பழைய கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். மாமியார், நாத்தனார் கனிவாக நடந்துகொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடையும் நேரமிது.

கன்னி: எதிலும் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் கூடாப்பழக்கம் விலகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தடை, தாமதங்கள் விலகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் கூடுதலாகச் செலவு செய்து அதைச் சீர்திருத்தம் செய்வீர்கள். மாமியார், நாத்தனாரை அனுசரித்துப் போங்கள். ஆனாலும், வழக்கால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். பழைய நண்பர்களால் பலன் பெறும் நேரமிது.

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். கணவர் பாசமழை பொழிவார். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். மாமனார் உங்களைப் புரிந்துகொள்வார். உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். திடீர் பயணங்கள், வாகனச் செலவு, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். நீண்ட கால ஆசை நிறைவேறும் நேரமிது.

விருச்சிகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். நாத்தனார், மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. சந்தேகத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

தனுசு: நினைத்தது நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், காது குத்து என வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிறந்த வீட்டின் பெருமைகளைப் பற்றிப் பேசி மகிழ்வீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்திகள் வரும். அரசாங்க காரியங்களை அலைந்து முடிப்பீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இங்கிதமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

மகரம்: சவாலான விஷயங்களையும் மாறுபட்ட அணுகுமுறையால் விரைந்து முடிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். உறவினர், தோழிகளின் ஆதரவு பெருகும். எதற்கும் கோபப்பட வேண்டாம். வழக்கில் நிதானம் அவசியம். வீடு வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். மாமியார், நாத்தனாரின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் நேரமிது.

கும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். கணவருடன் உரிமையாகப் பேசிக் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தூரத்து சொந்தம் தேடி வரும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். நாத்தனார், மாமியாருடன் மோதல்கள் வேண்டாம். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நேரமிது.

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். கோயில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். மாமனார், மாமியார் புகழும்படி சிலவற்றைச் செய்வீர்கள். வியாபாரத்தை புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசால் ஆதாயமடையும் நேரமிது.