Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மார்ச் 2 முதல் 15 வரை

ராசி பலன்கள்

மேஷம்: எதிலும் வெற்றிபெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அரசியலில் செல்வாக்கு கூடும். புது வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். மாமனார், மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரி யின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். சகோதர வகையில் நன்மை உண்டு. உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். நாத்தனார், கொழுந்தனார் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த பணம் வரும். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: சோர்வு, களைப்பு நீங்கும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் முடிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். வீட்டு வேலைகளைக் கணவர் பகிர்ந்துகொள்வார். உடல்நலம் சீராகும். தோழியிடம் கடனாகக் கேட்ட பணம் கிடைக்கும். புது வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வீண் அலைச்சல், சகோதரருடன் சிறு மோதல் வந்து நீங்கும். மாமனார் அதிருப்தி அடைவார். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திடமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவர் அவ்வப்போது எரிந்து விழுவார். வாகன விபத்துகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் நல்ல தீர்வு கிடைக்கும். மாமனார், மாமியாரை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் உதயமாகும். கௌரவப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பாசமழை பொழிவார். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். ஃப்ரிட்ஜ், ஏசி போன்ற சாதனங்கள் பழுதாகி சரியாகும். சகோதரர் ஓடிவந்து உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: தைரியம் கூடும். சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகள் அதிகம் கோபப்படுவார்கள். கணவர் கொஞ்சம் புலம்புவார். நீங்களும் அலுத்துக்கொள்ளாதீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்து விஷயத்திலும் வழக்கிலும் அலட்சியம் வேண்டாம். சகோதரர் பகைத்துக்கொள்வார். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களை முழுமையாக நம்பிச் சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரிக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள், தோழிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் இருமடங்கு லாபம் உண்டு. பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் வேலைகளை விறுவிறுப்பாக முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: இழுபறி நிலை மாறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவரின் கோபம் குறையும். தன் தவறுகளை உணர்வார். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். அடகிலிருந்த நகையை மீட்கும் அளவுக்குப் பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். கோபத்தில் வார்த்தை களைக் கொட்டிவிடாதீர்கள். நாத்தனாருடன் மனக்கசப்பு வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பழைய பிரச்னைகள் தீரும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவரின் கூடாப் பழக்கம் விலகும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடிவரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்க கட்ட லோன் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் நிதானம் அவசியம். நாத்தனார், மாமியார் வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்: நிர்வாகத் திறன் கூடும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந் ததை வாங்கித் தருவீர்கள். அநாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். முன்கோபம், எதிர்பாராத பயணம், வீண் அலைச்சல் வந்து செல்லும். கணவர் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்களால் விரயம் வரும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்கள் உதவுவார்கள். வீண் சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.