Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பிப்ரவரி 16 முதல் மார்ச் 1 வரை

ராசி பலன்கள்

பிப்ரவரி 16 முதல் மார்ச் 1 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்:

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். மாமியார், நாத்தனார் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் புதுச் சலுகைகள் மூலம் விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். எதிலும் வெற்றி பெறும் நேரமிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்

ரிஷபம்:

எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்பட்ட கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பெற்றோரின் உடல்நலம் சீராகும். புது வேலை கிடைக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். மாமியார் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவர் நீங்கள் சொல்வதை மறுக்காமல் செய்வார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கைகால் வலி வந்து நீங்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த தோழியைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். அதற்கேற்ற பலனை அடைவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்:

மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். கடன் பிரச்னைகள் ஒருபக்கம் விரட்டினாலும், இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சூட்சுமங்களை அறிந்துகொள்ள வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்:

சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்திகள் வரும். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். புது வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். மாமியார், நாத்தனார் கனிவாக நடந்துகொள்வார்கள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தூக்கமின்மை, வேலைச்சுமை வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி:

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. உறவினர்களால் உதவிகள் உண்டு. கடனாகக் கேட்ட பணம் கிடைக்கும். இனம்தெரியாத கவலை, தாழ்வுமனப்பான்மை, சகோதர வகையில் சங்கடங்கள் வந்து விலகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். மன அமைதி தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். நிலம், வீடு வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவர் ஒத்தாசையாகச் சில பணிகளைச் செய்வார். குழந்தை பாக்கியம் கிட்டும். மகளின் கூடாப்பழக்கம் விலகும். பழைய தோழிகள், வீடு தேடி வருவார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு:

தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். மூத்த சகோதர வகையில் உதவி உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் ஏற்றுமதி வகைகளால் லாபம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பிரபலங்களால் பாராட்டப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்:

சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவருக்கு அலைச்சலும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவரின் மன இறுக்கத்தை கனிவான பேச்சால் மாற்றுங்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். நட்பு வட்டம் விரியும். டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத் தில் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும். தைரியமான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்:

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. கணவர் உங்களுக்காகச் சில பணிகளைச் செய்வார். நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளை ஏற்று, பிள்ளைகள் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். விலையுயர்ந்த சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து பிரச்னை தீரும். அவ்வப்போது முன்கோபம் வந்து நீங்கும். மாமியார், நாத்தனாரின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

வி.ஐ.பிக்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சொத்து வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கட்டுக்கடங்காத செலவுகள், டென்ஷன் வந்து போகும். கணவர் கோபப்படுவார். கொஞ்சம் அனுசரித்துப்போங்கள். மாமனார், மாமியாருடன் விவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் வேண்டாம். சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.