என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மார்ச் 16 முதல் 29 வரை

மேஷம்: முடிக்க வேண்டுமென நினைத்த விஷயங்களை விரைவில் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவர் சில நேரத்தில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்.
ராசி பலன்கள்

பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு முக்கியத் துவம் தர வேண்டாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தடைகள் உடைபடும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: எதையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. கணவருடன் உரிமையாகப் பேசி கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மாற்று வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அயல்நாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாமியார் மதிப்பார். நாத்தனார் பாசமழை பொழிவார். அவ்வப்போது சுபச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியமான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: சவால்களில் வெற்றி அடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணவர் பாசம் காட்டுவார். வருமானம் உயரும். இருவரும் கலந்துபேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். கொழுந்த னாருக்குத் திருமணம் நிச்சயமாகும். அவ்வப்போது சோம்பல், கைகால் அசதி வந்து போகும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: உங்களின் ரசனை மாறும். புது வீடு வாங்குவது, கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். திட்டமிட்டவை தாமதமாக முடியும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப்பேசினாலும் பதற்றப் படாதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். கணவர் உங்களின் முயற்சிக்கு ஆதரவு தருவார். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நாத்தனார், மச்சினர் உங்களின் தியாக உணர்வைப் புரிந்துகொள்வார்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: பிரச்னைகளைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவ்வப்போது அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம், முன்கோபம் வந்து செல்லும். கணவருடன் அவ்வப்போது கருத்து மோதல் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மாமனார், மாமியார் அதிருப்தி அடைவார்கள். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம், தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சூழல் அறிந்து செயல்படும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசால் அனுகூலம் உண்டு. கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். பழைய இடத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சொத்துப் பிரச்னை வந்து விலகும். வியாபாரத்தில் புதிய வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உதவுவார். சம்பள உயர்வுக்கு வாய்ப்பிருக்கிறது. திட்டமிட்ட வேலைகளை முடித்துக்காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: சவால்களை எளிதாக எதிர் கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சில நேரத் தில் உதாசீனப்படுத்தினாலும் முக்கியமான கட்டத்தில் உதவுவார்கள். கணவரை சந்தேகப்பட வேண்டாம். சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை வேண்டாம். நாத்தனார், மாமியார் வகையில் மனஸ்தாபம் வந்துபோகும். திடீர்ப் பயணங்களால் பணப் பற்றாக்குறையும் சோர்வும் வந்து நீங்கும். எனினும், சமயோஜித புத்தியாலும் சகிப்புத்தன்மையாலும் சாதித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: முடிவு எடுப்பதிலிருந்த தடுமாற்றம் நீங்கும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். கணவர் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். யோகா, தியானம் செய்து உடல் எடையையும் மனச்சுமையையும் குறைப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் புகழாரம் பாடுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கணவர் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். அரசு விவகாரங்களில் வெற்றியுண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். நெடுந்தூரப் பயணங்கள் கொஞ்சம் அலைச்சல் தரும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள் வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நேர்மறை எண்ணங்களால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். நட்பு வட்டம் விரியும். மாமியார் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பர். முன்கோபம், டென்ஷன் வந்து நீங்கும். நாத்தனார் தவறாகப் புரிந்துகொள்வார். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி தங்கும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். மாமனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட நாள்களாக சந்திக்க நினைத்த உறவினர், தோழியைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய தொழிலில் லாபம் வரும். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் பழைய வழக்குகளால் மன அமைதி குறையும். சிந்தனைத்திறனால் சாதிக்கும் நேரமிது.