Published:Updated:

வீட்டின் முகப்பும் பலன்களும்!

வீட்டின் முகப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டின் முகப்பு

நான்கு திசையிலும் வாயில்கள் உள்ள அமைப்பை `சதுர் சாலை’ என்பார்கள்.

`அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். வீட்டின் முகப்பு அழகுக்கும் இது பொருந்தும். மனிதனுக்கு முகத் தோற்றம் எவ்வளவு முக்கியமோ, அப்படி வீட்டுக்கு அதன் முகப்புத் தோற்றம் முக்கியம்.

வாஸ்து இலக்கணங்களை விளக்கும் மயன் சாஸ்திரக் கூற்றுப்படி வீட்டின் முகப்பு வாயில் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு; அதற்கேற்ற பலன்களும் உண்டு. அவற்றின் விவரம்:

தெற்கு - மேற்கு: வீட்டின் வாயில்கள் தெற்கு மற்றும் மேற்கில் அமைந்திருந்தால் அந்த அமைப்புக்கு கமலாகரம் என்று பெயர். இதனால் அந்த வீட்டில் லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

மேற்கு - வடக்கு: இந்த திசைகளில் வீட்டு வாயில்கள் அமையப் பெற்றிருந்தால் அதற்கு சுவர்ணபலம் என்று பெயர். சோரம், பீடை ஆகியவை பலனாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

வடக்கு - கிழக்கு: இந்த திசைகளில் வாயில்கள் அமையப்பெற்றுள்ள அமைப்புக்கு புஷ்கல முஷ்டிகம் என்று பெயர்; சோரமும், பயமும் ஏற்படும்.

வீட்டின் முகப்பும் பலன்களும்!

வடக்கு, கிழக்கு, தெற்கு திசைகளில் உபவாசல்கள் இருந்து, பிரதான வாயில் மேற்கில் இருந்தால், இந்த அமைப்பை `அதிசயம்’ என்பார்கள். சிரமங்கள் மிகுந்திருக்கும்.

கிழக்கில் தலை வாயில் அமைந்து மேற்கு, தெற்கு, வடக்கு பார்த்தும் அல்லது வடக்கில் வாசல் அமைந்தும் இருந்தால், `கலியாண பதம்’ என்று பெயர். இப்படியான வீடுகளில் சம்பத்துகள் உண்டாகும்.

நான்கு திசையிலும் வாயில்கள் உள்ள அமைப்பை `சதுர் சாலை’ என்பார்கள். இது மிகவும் உத்தமம் ஆகும்.

- கா. உஷா, தூத்துக்குடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz