Published:Updated:

லக்னப்படி நீங்கள் எப்படி?

லக்னம்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்னம்

ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

ஜாதகத்தில் ராசி மற்றும் லக்னம் முக்கியத்துவம் பெறும். ஜாதகக் கட்டத்தில் லக்னத்தை முதல் இடமாகக் கொண்டே கிரக நிலைகளும் அவை தொடர்பான பலன்களும் கணிக்கப்படும். பொதுவாக, சூரியன் ஒருநாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 ராசிகளுக்கு மாறுவார். ஒரு ராசியில் 2 மணி நேரம் இருப்பார். நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அதுவே, உங்களின் ஜன்ம லக்னம். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் ‘ல’ என்ற குறிப்பை வைத்து அவரவர், தங்களின் லக்னத்தை அறியலாம்.

லக்னப்படி நீங்கள் எப்படி, உங்களின் குணாதிசயங்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் இங்கே உங்களுக்காக..

மேஷம்: செவ்வாயின் திருவருளால் தீர்க்காயுள் யோகம் உண்டு. தனவந்தர் ஆகும் நிலையும், திடீர் யோகமும் வந்து சேரும். புத்தி சாதுரியத்துடன் பேசும் வல்லமை பெற்றிருப்பீர்கள். மகாலட்சுமி யின் அருட்கடாட்சம் உங்களிடம் நிறைந்திருக்கும். தைரியசாலிகளான நீங்கள் எதிரிகளை எளிதில் வெல்லும் சூட்சுமத்தை அறிந்து வைத்திருப்பீர்கள். வாழ்வின் நெளிவு சுளிவுகளைத் துல்லியமாக அறிந்தவர் நீங்கள். உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உறவுகளால் பெரிதும் விரும்பப்படுகிற வர்களாக இருப்பீர்கள். புராண- இதிகாசங்கள், சாஸ்திரக் கோட்பாடுகளிலும் பாரம்பரிய விஷயங்களிலும் நாட்டம் கொண்டிருப்பீர்கள். மேடைப்பேச்சு, விவாதங்களில் வெற்றி உங்களுக்கே! போஜனப் பிரியர்கள். அவ்வப்போது முன்கோபமும் வந்துபோகும். உண்மை, நேர்மை, நீதியுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றியைச் சுவைப்பீர்கள்.

வழிபாடு: தினமும் வீட்டில் மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து, கந்த சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள்; நடப்பதெல்லாம் நன்மையாகவே முடியும். அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27. மேலும் 6, 15, 24 ஆகிய எண்களும் நலம் பயக்கும்.

லக்னப்படி நீங்கள் எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரிஷபம்: தெய்வ சிந்தனை அதிகம் உண்டு. பிறரின் மனத்தைப் புரிந்து செயல்படுவீர்கள். ஸ்தூல தேகம் அமையப்பெற்றவர். குணதோஷம் அறிபவர். முக வசீகரம், கம்பீரத் தோற்றம், வேடிக்கையாகப் பேசும் திறமை கொண்டவர். கலை, இலக்கியம், சினிமாத் துறையில் பிரகாசிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அம்பாளின் அருள்பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். ஆடை-ஆபரணம், செல்வம், சொத்து-சுகம் தேடி வரும். விஷயஞானிகள். நீண்ட ஆயுள் அமையும்.

அயல்நாடு செல்லும் பாக்கியமும், அழகான வீடும் கிட்டும். பிற்காலத்தில் ராஜயோகம் உண்டு. புத்திரர்களால் நன்மை அடை வீர்கள். உங்களுக்கு சூரியனும் சனியும் சுபர்கள். சனி பகவான் ராஜ யோகம் தருவார். சந்திரன், குரு, சுக்ரன் பாபர்கள். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். பெரிய பதவிகள் கிட்டும்.

வழிபாடு: வெள்ளிக்கிழமைதோறும் காமாட்சி அம்மனைத் துதிப்பதும், தரிசிப்பதும் நலம் சேர்க்கும். அனுதினமும் ஸ்ரீஅபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர, உங்கள் வாழ்வில் வசந்தம் நாடிவந்து மகிழ்விக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24, 33

மிதுனம்: கலையார்வம் அதிகம் உண்டு. எல்லாத் துறைகளிலும் பரிச்சயம் இருக்கும். பல மொழிகளில் பேசும் திறமையும் கைவரப் பெற்றிருப்பீர்கள். எவரையும் பார்த்த மாத்திரத்தில் எடைபோடும் ஆற்றல் உண்டு. நடனம், கலை, எழுத்துத் துறையில் மேன்மை கிட்டும். ஜோதிடம், மருத்துவம், கணினித் துறையில் வல்லுநர்களாகத் திகழ்வீர்கள். சபைகளில் சளைக்காமல் பேசுவீர்கள். நிறைய நண்பர்கள் அமைவர்.

உணவில் கட்டுப்பாடுடன் வாழ்வீர்கள். விருந்து, உபசாரம் செய்வது மிகவும் பிடிக்கும். வாசனைத் திரவியங்களில் அதிக மோகம் கொண்டிருப் பீர்கள். பெற்றோரை போஷிப்பீர்கள். தான, தருமம் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே! சிரித்துப் பேசிக் காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள்.

தந்திரமும் சூட்சுமமும் அறிந்தவர்கள். சுய உழைப்பினால் உயர்ந்து நிற்பவர்கள். 30 வயதுக்குப் பிறகு ராஜயோகம் படிப்படியாய் மலரும்.

வழிபாடு: ஸ்ரீமகாவிஷ்ணுவின் பூரண அனுகிரகத்தைப் பெற, நீங்கள் தினமும் ஸ்ரீவிஷ்ணுவின் ஆலயம் சென்று வழிபடுங்கள்; அனைத்தும் நலமாகும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடகம்: சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரான நீங்கள் வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். பேச்சில் எவரையும் வெல்பவர்கள். தீர்க்காயுள் உண்டு. ஆரம்ப காலம் சுமாராகவும், 40 வயதுக்குப் பிறகு மகாஜனயோகம், கோடீஸ்வரராகும் யோகம் ஸித்திக்கும். எப்போதும் தெய்வ அனுக்கிரகம் உடன் வரும். அன்புக்கு மட்டுமே அடிபணிவீர்கள். அதிகாரம் என்பதே கூடாது என்பீர்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. தெய்வீக வழிபாடுகளில் அதிக ஈடுபாடு இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். கல்வியிலும் திறமைசாலிகள்தான். கற்பனைத் திறன் அதிகம் உண்டு. நீதி, நேர்மை, உண்மையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். பண விஷயங்களில்

வழிபாடு: திங்கட்கிழமைதோறும் சிவாலயம் சென்று தரிசிப்பதும், சிவபுராணத்தை பக்தியுடன் பாராயணம் செய்வதும் நல்லது. அப்படிச் செய்து வந்தால், மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷமான வாழ்வுக்கு வழி பிறக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 11, 20.

சிம்மம்: சூரியனின் ஆதிக்கத்தில் மிகவும் பிரகாசமாக வலம் வரும் யோகம் கொண்டவர் நீங்கள். எப்போதும் ஒரு கொள்கையுடன் செயலாற்றுவீர்கள். தனவரவு சரளமாக வந்துசேரும்.

உடன் பிறந்தோரிடம் பிரியம் அதிகம். சுய உழைப்பால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். தலைமைப் பதவி தேடிவரும். பிறரது வளர்ச்சி கண்டு சந்தோஷப்படும் அன்பர் நீங்கள். ஆலய வழிபாடுகளில் ஆர்வம் உண்டு.

பட்டங்கள், பதவிகள், பரிசுகள் வாங்கிக் குவிப்பீர்கள். போஜனப்பிரியர்கள். அவ்வப்போது முன்கோபம் வரும். மிகவும் கண்டிப்பானவர்களும்கூட. குடும்பத்தாரின் அன்பைப் பெறுவீர்கள். எப்போதும் ஆள், அதிகாரம், தொண்டர்கள் உங்களுக்கு உண்டு. மற்றவர் செய்யும் குற்றங்களை எளிதில் கண்டுபிடிப்பதில் மகா கெட்டிக்காரர்கள் நீங்கள்.

வழிபாடு: பிரதி ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய வழிபாடும் நவக்கிரக துதிகள் பாராயணமும் செய்வது நலம் சேர்க்கும். அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு தானம் அளிப்பதும் சிறப்பு. அதன் பலனாக வாழ்வில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். இயன்றால் ஒருமுறை சென்னை- மயிலாப்பூரில் கோயில் கொண்டருளும் அருள்மிகு கபாலீஸ்வரர்- கற்பகாம்பாளைத் தரிசித்து வாருங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19

லக்னப்படி நீங்கள் எப்படி?

கன்னி: புதனின் ஆதிக்கத்தில் பிறந்த செயல்வீரர்களான நீங்கள், இனிமையாய் சிரித்துப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்எவருக்கும் உதவும் நல்ல மனம் உள்ளவர்கள். சற்றே பிடிவாத குணமும்,சுயநலமும் உண்டு. பிறரின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வீர்கள். சுக்கிரன், புதன் ஆகியோர் யோகக்காரர்கள். சந்திரன், குரு, செவ்வாய் ஆகியோர் பாபக் கிரகங்கள். அலங்காரம், ஆடம்பரப் பொருட்களில் உங்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு. சுக்கிரன், புதன் கூடி நின்றால் பிரபல யோகம் உண்டாகும். நாட்டியம், சினிமா, மருத்துவம், ஜோதிடம், கணினித் துறை மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களால் முடியாதது என்பதே இல்லை; எல்லா விஷயங்களிலும் தடைகளின்றி வெற்றி காண்பீர்கள்.

வழிபாடு: ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஹயக்கிரீவரை தரிசித்து வழிபடுவதாலும், நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வணங்குவதாலும் வாழ்வில் வளம் பெறலாம். அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துலாம்: சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் நல்ல குணம், நல்ல புத்தி, அறிவு, புகழ், சம்பத்து இவைகளுடன் கலையார்வம் அதிகம் பெற்றவராகத் திகழ்வீர்கள். வாழ்க்கையில் போராட்டமும், வெற்றியும், சாதனையும் என உயர்ந்து நிற்பீர்கள். பிறரின் பொறாமைப் பார்வைக்கு ஆளாவீர்கள். எந்நேரமும் வேலை செய்யத் தயங்காதவர் நீங்கள். சனி, புதன், சுபர்கள். சந்திரன், புதன் யோககாரகன். சூரியன், குரு பாபர்கள். வாசனைத் திரவியங்களில் மனத்தைப் பறிகொடுப்பீர்கள். நகைச்சுவையாய் பேசுவதும் சிரிக்க வைப்பதும் உங்களுக்குக் கைவந்த கலை. கற்பனை வளமும், ஓவியத் திறமையும், விளையாட்டுத் துறையில் ஆர்வமும் கொண்ட நீங்கள் பக்தி மார்க்கத்திலும் சிறந்து விளங்குவீர்கள். சொத்துக்கள் சேர்ப்பதில் கெட்டிக்காரரான நீங்கள், பண விஷயத்தில் எப்போதும் கறாராக இருப்பீர்கள்.

வழிபாடு: வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் (10.30 மணி முதல் 12 வரை) ஸ்ரீகருமாரியம்மன் அல்லது துர்கை அம்மனை வழிபாடு செய்துவர, துன்பம் விலகி இன்பம் பெருகும். அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24, 33

விருச்சிகம்: செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் உறவினர்களிடம் அதிகம் அன்பு காட்டுவீர்கள். அதிகாரத்துக்குக் கட்டுப்படாதவர்களாக இருப்பீர்கள். சுய திறமையால் வாழ்வில் உயர்வான நிலையை அடைபவர் நீங்கள். உங்களுக்கு சூரியன், குரு, சந்திரன் ஆகியோர் சுபர்கள். தாராள மனம் கொண்ட உங்களின் பரோபகாரத்தால் பெருமையும் புகழும் உங்களைத் தேடி வரும்.தெய்வ வழிபாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கடவுளை கனவில் தரிசிப்பதும் நடக்கும். கனவுகள் பலிதம் ஆகும் ஜாதகம் உங்களுடையது. சூரியன், சந்திரன் யோகம் தருவார்கள். சொல்வாக்கால் பெரும் செல்வாக்கை இறையருளால் எட்டிப்பிடிப்பீர்கள்.

வழிபாடு: ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் ஸ்ரீஷண்முகர் தரிசனமும், ஸ்ரீகந்தர் சஷ்டிகவசம், ஸ்ரீஷண்முக கவச பாராயணமும் செய்துவர... கவலைகள் நீங்கி, சந்தோஷம் கூடும். பரணி, விசாகம், சஷ்டி, கிருத்திகை நாட்களில் ஸ்ரீசுப்ரமணியரை தரிசனம் செய்துவர, சகல சுபிட்சங்களும் கைகூடப் பெறலாம். அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 2, 20, 11.

தனுசு: தியாக மனப்பான்மை, பொறுமை இவற்றுடன் விவேகமாகவும் செயல்பட்டுப் பாராட்டு பெறுவீர்கள். எவரையும் எளிதில் எடைபோடும் திறனும், பிரச்னைகளைக் கண்டு சிறிதும் மனம் தளராமல் உறுதியாய் நின்று போராடி வெற்றி காணும் துணிச்சலான குணமும் கொண்டவர் நீங்கள். சுய காரியத்தில் எப்போதும் கண்ணாக இருப்பீர்கள். வில்லில் பிறந்த உங்களின் சொல்லாற்றல் எங்கும் வெற்றிபெறும். நண்பர்கள் அதிகம் உண்டு. திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கல்வியில் முதல்நிலையில் தேர்ச்சி பெறும் வாய்ப்பும் சிலருக்கு உண்டு. மனஉறுதியும், சவாலைச் சந்திக்கும் திறனும் பெற்றிருப்பீர்கள். சூரியன், செவ்வாய் சுபர்கள். பொறுப்பான பதவிகள் உங்களைத் தேடி வரும். மதியூகம் நிறைந்தவர் நீங்கள். தெய்வ அனுக்கிரகம் அதிகம் உண்டு. வாழ்வில் உயர்நிலையை அடைவீர்கள்.

வழிபாடு: சிவபுராணம், ஸ்ரீநவகிரக துதிகள் பாராயணம் செய்துவர, மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மேலும், வியாழக்கிழமைதோறும் ஸ்ரீகுருபகவானை வழிபடுவதும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிப்பதும், ஸ்ரீசெந்திலாண்டவரை வழிபடுவதும் நன்று. அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 3, 12, 21, 30

மகரம்: சுயமுயற்சியினால் முன்னேற்றம் காண்பவர்கள் நீங்கள். எதையும் எதிர்கொள்ளும் மனோதிடம் உங்களிடம் உண்டு. சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, பொதுச்சேவை செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். எவருக்கும் அடிபணிய மறுக்கும் நீங்கள் இறைவனிடம் பூரண நம்பிக்கை கொண்டு, இறைப்பணி செய்வீர்கள். சினிமா, நாடகம், ஓவியம் இவற்றில் ஆர்வம் அதிகம் கொண்டிருப்பீர்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் சுபகிரகங்கள்; சந்திரன், வியாழன் பாவ கிரகங்கள். சுக்கிரன் ஒருவனே உங்களுக்கு யோககாரகன். சுக்கிரனும் புதனும் கூடியிருப்பின் உங்களுக்கு ராஜயோகம்தான். பெற்றோர்களின் அன்புக்கு எளிதில் பாத்திரமாவீர்கள். ஜோதிடம், கணிதம் மற்றும் கணினித் துறையில் சிறந்து விளங்குவீர்கள். ‘முடியாது’ என்னும் சொல்லுக்கே உங்களிடம் இடம் இருக்காது.

வழிபாடு: ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். சங்கடங்கள் விலகி, சந்தோஷம் குடும்பத்தை நாடி வரும். அதோடு, பின்வரும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதும் நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26, 35

கும்பம்: இனிமையாகப் பேசும் கலையும், இங்கிதமாகப் பழகும் குணமும் கொண்டவர் நீங்கள் காரியம் சாதிப்பதில் மகா சாமர்த்தியசாலிகள். எப்போதும் சம்பாத்தியம் ஒன்றையே குறியாகக்கொண்டு செயல்படுவீர்கள். ஆடம்பரப் பொருட்கள், சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு, சற்று பிடிவாத குணம் கொண்ட உங்களுக்குப் பிறரின் அறிவுரைகளை ஏற்கும் பொறுமை குறைவு சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவரான உங்களுக்கு தேசப்பற்று அதிகம் உண்டு. சிலநேரம் சோர்ந்து போவீர்கள். ஆனால், வெற்றியை அடைய கடினமாக முயற்சித்து வெற்றிக்கனியை தட்டிச் செல்வீர்கள் கற்பனை வளம். எழுத்துத் திறமை, நடிப்புத் திறன் கொண்டவர் நீங்கள். உயர்கல்வியான மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற துறைகளில் உயர்நிலையில் இருப்பார்கள் உங்களில் சிலருக்கு வெளிநாட்டில் வாசம் செய்யும் வாய்ப்பும் கிட்டும்

வழிபாடு: ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அல்லது உங்கள் ஊரில் பிரசித்திபெற்ற பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்வாமிக்கு துளசி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இந்த வழிபாடு உங்கள் துன்பங்களைப் போக்கும்; இன்ப வாழ்வு தரும். அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26, 35

மீனம்: அனைவரையும் கவரும் பேச்சுத் திறமை பெற்ற நீங்கள், எல்லோரிடமும் பண்போடும் இனிமையோடும் பழகுவீர்கள். சாதுரியமாகக் காரியத்தைச் செய்து முடிப்பதில் வல்லவர்கள் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். அந்த நட்பு வட்டத்துக்குத் தலைவராக வலம் வருவீர்கள் உங்களின் பிற குணங்கள் அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதில் உங்களுக்கு விருப்பம் அதிகம் உதவி என்று யார் வந்தாலும், ஓடிப்போய் உதவுவீர்கள் பண விஷயத்தில் கவனமாக இருப்பார்கள் உயர் சிந்தனை அதிகம் பெற்றிருப்பீர்கள், வங்கி, ரயில்வே துறையில் அதிகம் பணிபுரிவீர்கள் செய்நன்றி மறவாத நீங்கள், கல்வியில் முதலிடம் பெற்றுப் பெருமையாய் நிமிர்ந்து நிற்பவர்கள் சாதனையாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பீர்கள். சாதிக்கும் திறமை மட்டுமின்றி, பொறுப்பாகச் செயல்புரியும் செயல் வீரர்களாகவும் திகழ்வீர்கள். எங்கு சென்றாலும் புகழ்மாலை உங்களைத் தேடிவரும். சந்திரன், செவ்வாய் சுபர்கள். புதன், சுக்கிரன் சனி பாவிகள். செவ்வாயும் குருவும் யோக காரகர்கள்.

வழிபாடு: திங்கட்கிழமைதோறும் சிவாலயம் சென்று சிவதரிசனமும், சிவபுராணம் பாராயணம் செய்து வர வாழ்வில் பல சிறப்புகளைக் காணலாம். அங்கஹீனம் உள்ளவர்கள் அன்னதானம் செய்யலாம். அதிர்ஷ்ட எண்கள்: 3,12,20,30