திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள். தீர்ப்பதற்கு மருந்தில்லா பெருந்தொற்று நோயின் தீவிரத் தாக்குதலால், திக்கற்று தவிக்கும் உலகுக்குத் தெய்வ அனுக்கிரகமே துணையாக வேண்டும்.

தெய்வத்தின் திருவருளைப் பெற வழிபாடுகள் உதவி செய்யும். அத்தகைய வழிபாடுகளில் சிறப்பானது பிரதோஷ வழிபாடு.

ஆம்... சகலவிதமான பிரச்னைகளுக்கும் பிணிகளுக்கும் தோஷங்களுக்கும் நல்ல தீர்வை அருளவல்ல வழிபாடு, பிரதோஷ வழிபாடு. நாம் இப்போது பிணியின் தாக்கத்தால் அல்லல்படுவதுபோல், ஒருமுறை கடும் விஷத்தின் தாக்கத்தால் அல்லலுக்கு ஆளானார்கள் தேவர்களும் அசுரர்களும். அந்த விஷத்தைப் பருகி, அனைவருக்கும் அருமருந்தென தண்ணருளைப் பொழிந்தார் சிவபெருமான்.

அவரின் இந்த அறக்கருணையை விவரிக்கும் பிரதோஷ வழிபாட்டின் திருக்கதை யைப் படித்தாலே போதும்; பிணி குறித்த பயம் நீங்கும். அதுமட்டுமா? ஜோதிட நூல்கள் விவரிக்கும் - கிரக பாதிப்புகளால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும்.

முதலில் நாம் பிரதோஷம் வந்த விதத்தை அறிவோம்.

வானவர் தலைவனாம் இந்திரன் தனது வாகனமான ஐராவதம் எனும் வெள்ளை யானையின் மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார். தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். மன மலர்ச்சியுடன் தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.

படம் : பிரேம் டாவின்ஸி

தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின. யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது. அவ்வளவுதான் கடும் கோபம் கொண்டார் துர்வாசர். இந்திரனின் ஆணவத்துக்குக் காரணமான செல்வ போகங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும் என்று சபித்தார். உத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.

திருப்பாற்கடலில் எல்லாவிதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலை பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக்கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.

சோதனைபோல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகா விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள். ‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும்’’ என்று வேண்டினார்கள்.

படம் : கே.எம்.பிரசன்னா

சிவபெருமான், அருகிலிருந்த சுந்தரரைப் பார்த்தார்... ‘‘கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!’’ என்று ஆணையிட்டார்.

விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர்.ஆல(கா)ல விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், ‘ஆலா(கா)ல சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு ‘(திரு)நீலகண்டர்’, ‘ஶ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.

சிவபெருமான் விஷத்தை உண்டபோது, ‘அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்துவிட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது!’ என்ற கருணை உள்ளத் துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.

விஷம் குறித்த பயம் நீங்கியதால் அனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் தேவர்களும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள்புரிந்த காலமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.

பிரதோஷத்துக்கு ‘ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் ‘ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். ‘ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும். வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படுகிறது. இந்தக் காலத்தில் சிவதரிசனம் செய்வதும், உரிய வழிபாடுகளைச் செய்வதும் அதீத பலன்களைப் பெற்றுத் தரும்.

பிரதோஷ மகத்துவங்களைக் காண்போம்.

நித்திய பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்திலிருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து) நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்திய பிரதோஷம் எனப்படும்.

எல்லா நாள்களிலும் இந்த (நித்திய பிரதோஷ) வேளையில் சிவவழிபாடு செய்வது சிறப்பு. அனைத்து ராசியினரும் இந்த வழிபாட்டைச் செய்வதால், காரியத் தடைகள் நீங்கும்; தீவினைகள் நீங்கி வீட்டில் எப்போதும் மங்கலம் நிறைந்திருக்கும். கடன் பிரச்னைகள் விலகி செல்வ கடாட்சம் வளரும்.

பக்ஷ பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷ பிரதோஷம்’ எனப்படும். இந்நாளில் நாம் செய்யும் வழிபாடு, சகல கிரக தோஷங்களால் ஏற்படும் அல்லல்களைக் குறைக்கும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் வல்லமையைத் தரும். சுப காரியங்களுக்கு முட்டுக்கட்டையாகத் திகழும் தடைகளை நீக்கும்.

மாத பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாத பிரதோஷம்’ எனப்படும். இந்த நாளில் செய்யும் வழிபாடு, மனத்தில் தன்னம்பிக்கையை அருளும்; சங்கடங்களை நீக்கி சந்தோஷம் அருளும்.

மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.