திருக்கதைகள்
Published:Updated:

பிறவி ரகசியம் ஜோதிட விளக்கங்கள்!

பிறவி ரகசியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பிறவி ரகசியங்கள்

ஜோதிடர் ஆர். சுப்ரமணியன்

வினைகளின் பயனாக விளைவதுதான் பிறப்பு என்கின்றன ஞான நூல்கள். விஞ்ஞானமும் `ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்கிறது. அவ்வகையில் முற்பிற வியின் வினைப்பயனுக்கு ஏற்பவே நிகழும் பிறவி அமைகிறது. பிறப்பின் ரகசியங்கள் குறித்து புராணங்களும் ஞான நூல்களும் பல விளக்கங்களைத் தருகின்றன.

பிறவி ரகசியம் 
ஜோதிட விளக்கங்கள்!
bestdesigns

சூரிய சித்தாந்தப்படி 60 நாழிகைகள் கொண்ட ஒருநாளில் 21,600 பிறப்புகள் பூமியில் நிகழ்கின்றன. அவற்றில் மானுடப் பிறப்பு மட்டும் 7200 என்பது ஒரு கணிப்பு. அதாவது ஒரு லக்னத்தில் ( 2 மணி அல்லது 5 நாழிகைப் பொழுதில்) 600 மனிதப் பிறப்புகள் எனும்படி, 12 லக்னங்களில் 7200 மானுடப் பிறப்புகள் நிகழ்வதாகச் சொல்கின்றன, புராணம் சார்ந்த சில ஞானநூல்கள்.

இனி, பிறவி பற்றிய ஜோதிட சாஸ்திர விளக்கங்களைத் தெரிந்து கொள்வோம். ஒரு நபர் முற்பிறவியில் எந்த அளவுக்கு நற்காரியங்களை அல்லது தீய வினைகளைச் செய்து வந்தார் என்பதை, இப்பிறப்பில் அவரின் ஜாதக அமைப்பு சுட்டிக்காட்டிவிடும்.

ஜாதகர் ஆண்-பகல் வேளையில் பிறந்தவர். அவரின் ஜன்ம லக்னம், ஜன்ம ராசி, சூரியன் ஆகியவை ஒற்றைப்படை ராசி வீடு களில் அமைந்தால், அவர் சகலவிதமான சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனலாம் (ஒற்றைப்படை ராசி வீடுகள்: மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்).

அதேபோல் ஜாதகர் பெண் - இரவு வேளையில் பிறந்தவர். அவரின் ஜன்ம லக்னம், ஜன்ம ராசி, சூரியன் ஆகியவை இரட்டைப் படை ராசி வீடுகளில் அமைந்தால், அவர் மகா பாக்கியம் பெற்ற புண்ணியவதியாக திகழ்வார். இந்த யோக அமைப்புகள் சிலரிடம் மட்டுமே காணப்படும் என்பதும் உண்மை (இரட்டைப்படை ராசி வீடுகள்: ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்).

ஜாதகத்தில் மொத்தம் 12 வீடுகள் உள்ளன. அவற்றில் ஜன்ம லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 5 மற்றும் 9-ம் வீடுகள் முக்கிய சுப வீடுகளாகும். இவற்றில் 5-ம் வீடு பூர்வ புண்ணியத்தையும் 9- பாக்கியத்தையும் குறிக்கும். இந்த வீடுகளுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பை வைத்துப் பூர்வபுண்ணிய பலனை அளவிடலாம். (சுப கிரகங்கள்: குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன். அசுப கிரகங்கள்: சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன்.)

ஜாதகத்தில் 5 மற்றும் 9 ஆகிய சுப வீடுகளுக்கு எவ்வித கிரகங்களின் தொடர்பு இல்லாமல் அசுப கிரகங்களின் தொடர்பு மட்டுமே (பார்வை, சேர்க்கை) உள்ளது எனில், இப்படியான ஜாதகருக்குப் பூர்வ புண்ணியம் இல்லை எனலாம்.

இப்படியான ஜாதக அமைப்பு கொண்ட நபர்கள், வினைப் பயனைப் புரிந்துகொண்டு, நம் முன்னோர்களும் மகரிஷிகளும் வழிகாட்டியபடி வாழ்ந்து, தெய்வ வழிபாடுகளுடன் வாழ்வைத் தொடர்ந்தால், வரும் பிரச்னைகளை, பாதிப்பு களை எளிதில் சமாளித்துவிடலாம்.

பிறவி ரகசியம் 
ஜோதிட விளக்கங்கள்!
imagedepotpro

இதேபோல், தற்போது நிகழும் பிறவியின் நோக்கம் குறித்தும் அறிந்துகொள்வதற்கு, நம் மகரிஷிகள், ஞானிகள் பலரும் தொகுத்து அளித்த ஜோதிட நூல்கள் பெரிதும் துணைபுரிகின்றன. இதுபற்றி அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள், வீடுகள் மூலம் அறியலாம்.

ஒருவரின் பிறந்த வேளை - லக்னம் மற்றும் ஜன்ம நட்சத்திரமானது, தரும திரிகோண வீடுகளான மேஷம், சிம்மம், தனுசு என்று அமையப் பெற்றால், அந்த ஜாதகர் பெரும்பாலும் தரும, தயாள சிந்தனை கொண்ட நபராக அமைவார். ஒருவரின் ஜன்ம லக்னம், ஜன்ம ராசி அர்த்த திரிகோண வீடுகளான ரிஷபம், கன்னி, மகரம் என்று அமைந்தால், அந்த ஜாதகர் பெரும்பாலும் பொன் - பொருள் ஈட்டுவதில் குறியாக இருப்பார்.

ஜன்ம லக்னம், ஜன்ம ராசியானது காம திரிகோண வீடுகளான மிதுனம், துலாம், கும்பம் என்று அமைந்தால், அந்த ஜாதகர் விருப்பங்கள் - அதீத ஆசைகள் மிகுந்தவராக இருப்பார்.

ஒருவரின் ஜன்ம லக்னம், ஜன்ம ராசியானது மோட்ச திரிகோண வீடுகளான கடகம், விருச்சிகம், மீனம் என்று அமைந்தால் எதிலும் பற்று இல்லாமல் வாழவே விரும்புவார்.

இவை பொதுவான விதிகளே. இவற்றுடன் மிக நுட்பமாக ஜாதகத்தை ஆராய்ந்து பலனறிய வேண்டும். ஜோதிட நூல்களில் நற்கதி எனும் மோட்சநிலை அடைவதற்கான கிரக அமைப்பு கள், பிற வினைகளை விளக்கும் அமைப்புகள் ஆகிய அனைத்தையும் நுட்பமாக அறிந்து உரிய பலனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விரல்களும் பலன்களும்!

ம்முடைய கைவிரல்களும் நம் இயல்புகளை - குணாதிசயங்களைத் துல்லியமாக எடுத்துச்சொல்லிவிடும் என்கிறது பஞ்சாங்குலி சாஸ்திரம். விரல்களின் மொத்தத் தோற்றத்தை வைத்து, அவற்றைக் கூர்மையான விரல்கள் என்றும், தட்டையான விரல்கள் என்றும் பிரிக்கலாம்.

விரலின் அடிப்பாகத்தில் இருந்து மேல்பாகம் கூர்மையாக அமைந்தால், அவர்கள் உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த செயல்கள், கலைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த அன்பர்களிடம் மனிதநேயம் மிகுந்திருக்கும். தத்துவ மேதைகள், ஆன்மிக ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரின் விரல்கள், இந்த அமைப்பைப் பெற்றிருக்கும்.

விரல் நுனிகள் தட்டையாக இருந்தால், அவர்கள் திறமையாக வேலை செய்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும், பிறரோடு சேர்ந்து வேலை செய்வதில், திறமை மிக்கவர்களாகவும், எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பவர்களாகவும் இருப்பார்கள். தொழில் அதிபர்கள், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைமிக்க தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் விரல்கள், இந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.

ஒரு சில விரல்கள் முதல் வகை அமைப்பிலும், மற்ற விரல்கள் இரண்டாவது வடிவமைப்பிலும் இருந்தால், அவர்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு குணங்களும் கலந்தவர்களாக இருப்பார்கள்.

-டி.எஸ்.என், சென்னை-17