Published:Updated:

பிறந்த கிழமையும் பரிகார வழிபாடுகளும்!

பரிகார வழிபாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
பரிகார வழிபாடுகள்

பலன் தரும் பரிகாரங்கள் - ஜோதிடர் டி.எஸ்.என்

பிறந்த கிழமையும் பரிகார வழிபாடுகளும்!

பலன் தரும் பரிகாரங்கள் - ஜோதிடர் டி.எஸ்.என்

Published:Updated:
பரிகார வழிபாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
பரிகார வழிபாடுகள்

எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களின் குணநலன்கள், பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம்.

பிறந்த கிழமையும் 
பரிகார வழிபாடுகளும்!

ஞாயிறு

நீங்கள் பிறந்தது ஞாயிறு எனில், நீங்கள் தலைமைப் பண்பு மிக்கவர். கடின வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பீர்கள். சொன்னதைச் செய்வீர்கள்; இயலாது எனில் மெளனம் சாதிப்பீர்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர் நீங்கள்.

நல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு, எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளிலேயே தொடங்கலாம்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 19, 28, 37, 45, 55, 64, 73

வழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக் கடன் களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.

அம்மன்
அம்மன்

திங்கள்

நீங்கள் பிறந்தது திங்கள் எனில், சாந்தமான மனம் படைத்தவராக இருப்பீர்கள். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் கொண்டவர் நீங்கள். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பீர்கள். தர்ம- நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி உள்ளவர். உங்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும்.

நல்லன அருளும் தேதிகள்: 2, 7, 11, 16, 20, 25, 29 ஆகிய தேதிகளில் புதிய தொழில் தொடங்குதல், பொருள்களை வாங்கி சேகரித்தல், சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 20, 29, 38, 47, 56, 65, 74.

பரிகார வழிபாடு: திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

செவ்வாய்க்கிழமை:

இந்தக் கிழமையில் பிறந்தவர் எனில், பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பீர்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வீர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வீர்கள். மற்றவர்கள் தவறாக நினைப்பார்களே என்று எண்ணாமல், வெளிப்படையாக செயல்படுவீர்கள். நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.

நல்லன அருளும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 18, 27, 36, 45, 54, 63, 72.

பரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் பைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.

பெருமாள்
பெருமாள்

புதன்

ந்தக் கிழமையில் பிறந்தவர்கள், நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், துப்பறியும் கலை, ஓவியம் ஆகிய வற்றில் திறமைசாலிகளாக விளங்குவர். ரகசியம் காப்பதில் வல்லவர். மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.

நல்லன அருளும் தேதிகள்: 5, 14, 23 ஆகியவை வெற்றி தரும்.

ஏற்றமிகு வயது காலங்கள்: 23, 32, 41, 50, 59, 68.

பரிகார வழிபாடு: புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் மகாவிஷ்ணுவை வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறப்பு. பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.செவ்வாய்

ஶ்ரீதட்சிணாமூர்த்தி
ஶ்ரீதட்சிணாமூர்த்தி

வியாழன்

ந்த நாளில் பிறந்தவர்கள் நீதி தர்மத்துக்கு பக்கபலமாக விளங்குவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார்-உறவுகளுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவர்.

நல்லன அருளும் தேதிகள்: 3, 12, 21, 30.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகார வழிபாடு: வியாழக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடுவதால் வளம் பெருகும். மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் செய்வது மிக நன்று.

ஶ்ரீராஜராஜேஸ்வரி
ஶ்ரீராஜராஜேஸ்வரி

வெள்ளி

ந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே ‘சமர்த்துப் பிள்ளை’ என்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர்களைத் தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களைப் புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர்.

நல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71.

பரிகார வழிபாடு: வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் அம்பாளை அர்ச்சித்து வழிபடலாம். ராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஶ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

சிவபெருமான்
சிவபெருமான்

சனிக்கிழமை

ந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் தொடங்குவர். சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என இருப்பவர்.

நல்லன அருளும் தேதிகள்: 8, 17, 26

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 41, 50, 53, 58, 62, 67 ஆகிய வயதுகளில் வாழ்வில் இன்பம் சேரும்.

பரிகார வழிபாடு: சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம்பயக்கும்.

19.8.2014 இதழிலிருந்து....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism