ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சுவாதியில் மருத்துவ சிகிச்சை தொடங்கலாமா? - சிகிச்சைக்கு ஏற்ற நட்சத்திரங்கள்

சுவாதி
பிரீமியம் ஸ்டோரி
News
சுவாதி

முனைவர் வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

சுவாதி தேவ கணத்தைச் சேர்ந்தது. ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்கிறது ரஸகுளிகை சாஸ்திரம். மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்ற நட்சத்திரம் இது.

சுவாதி தேவ கணத்தைச் சேர்ந்தது. ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்கிறது ரஸகுளிகை சாஸ்திரம். மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்ற நட்சத்திரம் இது. சுவாதி மட்டுமல்ல அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவையும் சிகிச்சை தொடங்க ஏற்றவையே. இதுபோன்று மருத்துவம், நட்சத்திரங்கள் தொடர்புடைய ஜோதிடத் தகவல்கள் நிறைய உண்டு. அவை பற்றி நாமும் அறிவோம்!

பிணிகளும் நட்சத்திரங்களும்

பிணிகள் எந்தெந்த நட்சத்திர நாள்களில் உண்டாகின்றன என்பதைக் கொண்டு, அந்தப் பிணிகள் குணமாகும் விவரம் சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம், பிணிகள் தொடங்கிய சரியான நட்சத்திர நாளை அறிந்தால்தான் உரிய பலன்களை கணிக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மருத்துவம்
மருத்துவம்
NanoStockk

அசுவினி நட்சத்திர நாளில் ஒருவருக்குப் பிணி உண்டானால், அது 25 நாள்களில் குணமாகும்.

கார்த்திகை: 5 அல்லது 7 நாள்களில் குணமாகும். இல்லை யெனில் 21 அல்லது 27 நாள்களுக்குள் குணமாகிவிடும்.

ரோகிணி: 8 அல்லது 11 நாள்களில் குணமாகும்.

மிருகசீரிடம்: 6 அல்லது 9 நாள்களில் குணமாகும்.

புனர்பூசம்: 13, 15 அல்லது 27 நாள்களில் குணமாகும்.

பூசம்: 3 அல்லது 7 நாள்களில் குணமாகும்.

பூரம்: 7 நாள்களில் குணமாகும்.

உத்திரம்: 8, 9 அல்லது 21 நாள்களில் குணமாகும்.

அஸ்தம்: 7 அல்லது 20-ம் நாளில் குணம்.

சித்திரை: 8 அல்லது 27-ம் நாளில் குணம்.

சுவாதி: 10 அல்லது 45 நாளில் குணமாகும்.

மூலம்: 10 அல்லது 27 நாள்களில் குணமாகும்.

பூராடம்: 6 அல்லது 9 நாள்களில் குணமாகும். ஒருவேளை குணமாகவில்லை எனில், 8 அல்லது 9 மாதங்களில் குணமாகும்.

திருவோணம்: 8 நாள்களில் குணமாக வாய்ப்பு உண்டு. எனினும் முழுமையாக பிணியிலிருந்து விடுபட ஒருவருட காலம் பிடிக்கும்.

தேதிகள்
தேதிகள்
towfiqu ahamed

சதயம்: 13 நாள்களில் குணமாகும்.

உத்திரட்டாதி: 14 நாள்களில் குணம் ஆகும். அல்லது பல வருடங்கள் அந்தப் பிணியால் துன்பம் அடைய நேரிடும்.

ரேவதி: 8, 14 அல்லது 27 நாள்கள் ஆகும்.

ஆயில்யம், பரணி, கேட்டை, பூரட்டாதி, விசாகம், மகம், திருவாதிரை, அனுஷம் ஆகிய நட்சத்திர காலத்தில் தோன்றும் பிணியானது உடலை மிகவும் வருத்தும். உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிணித்துயருக்கு ஆளானால், பிணி தீர்ந்தாலும் உடல் நலன் பூரணமாக மேம்பட சற்று தாமதமாகும் எனும் தகவல் உண்டு.

நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள்.

பஞ்சாங்க நுணுக்கமும் சிகிச்சையும்

ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி ஆகியவற் றுடன் திருவாதிரையோ, ஆயில்யமோ, மக நட்சத்திரமோ சேர்ந்துள்ள நாளில் உடல் நலம் குன்றினால், தொடர் சிகிச்சை அவசியம் தேவை. அதேபோன்று, கீழ்க்காணும் அமைப்புள்ள நாலள்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், மருத்துவ சிகிச்சை அவசியப்படும்.

செவ்வாய் - நவமி - கேட்டை, சுவாதி, பரணி

சனிக்கிழமை - சதுர்த்தசி - பூரம், பூராடம், பூரட்டாதி.

சுவாதி
சுவாதி

மேலும், ஒருவரது ஜன்ம நட்சத்திரம் அல்லது அந்த நட்சத்திரத்துக்கு 3, 5, 7 -வது நட்சத்திரங்கள் இருக்கும் நாள்களில் நோய் ஏற்பட்டாலும் துன்பம் மிகும்.

சிகிச்சைக்கு ஏற்ற நாளும் நட்சத்திரமும்

திங்கள் - அஸ்தம்

புதன் - அஸ்வினி

வியாழன் - சித்திரை

வெள்ளி - புனர்பூசம்

இந்தக் கிழமைகள் அல்லது நட்சத்திர நாள்கள் சிகிச்சை செய்ய உகந்தவை.

மேலும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் தங்களது சுயவர்க்கங்களில் இருப்பதும், சர ராசி, உதய லக்னம் அல்லது நவாம்சமாக இருப்பதும் சிறப்பு.

உக்ரயோகமும் மருத்துவ சிகிச்சையும்!

உக்ர யோகம் உள்ள நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் நோய் நிச்சயம் குணமா கும். கீழ்க்காணும் நட்சத்திரங்கள்- திதிகள் இணையும் நாள் உக்ரயோக தினமாகும்.

நட்சத்திரம் - திதி

1. ரோகிணி - திருதியை, நவமி

2. உத்திரம் - சதுர்த்தி

3. திருவோணம் - பஞ்சமி

4. மிருகசீரிடம் - சஷ்டி

5. ரேவதி - சப்தமி

6. கிருத்திகை - நவமி

7. பூசம் - தசமி

8. அனுஷம் - துவாதசி,திருதியை

9. கிருத்திகை, மகம் - திரயோதசி.