Published:Updated:

யோகம் தரும் வண்ணங்கள்!

யோகம்
பிரீமியம் ஸ்டோரி
யோகம்

ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

யோகம் தரும் வண்ணங்கள்!

ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
யோகம்
பிரீமியம் ஸ்டோரி
யோகம்

வ்வொரு தெய்வமும் ஒவ்வொரு நிறத்துடன் தொடர்பில் உள்ளது என்பார்கள். அதேபோல், நிறங்களுக்கும் கிரகங்களுக்கும் தொடர்புண்டு.

கிரகங்களின் நிறத்தை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தொலைநோக்குக் கருவிகள் இல்லாமலே, நம் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒரு மனிதனின் எண்ணம், சொல், செயல், சிந்தனை, திறன், ஆகியவை அவன் பயன்படுத்தும் நிறத்தைக்கொண்டே வெளிப்படுகின்றன. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும், பொருளும், மலர்களும், பழங்களும், காய்கறிகளும் ஏதோ ஒரு நிறத்தின் அமைப்பைக்கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் இந்த அண்டவெளியைக் கடந்து நிற்கும் கிரகங்களின் படைப்பே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவற்றில் சனி கறுப்பு, நீலம் மற்றும் கருநீலம் ஆகியவற்றுக்குக் காரகத்துவம் பெற்றது. செவ்வாயோ சிவப்பு நிறம் கொண்டது. சந்திரன் வெண்மை நிறம் கொண்டவராவார்.

சூரியன் வெளிர் மஞ்சள், வெளிர் சிவப்பு நிறம் கொண்டு பிரகாசிக்கிறார். புதன் பகவான் பச்சை நிறத்துக்கு உரியவர் ஆகிறார். குரு பகவான் மங்கலகரமான மஞ்சள் நிறத்தைக் கொண்டவர்.

யோகம் தரும் வண்ணங்கள்
யோகம் தரும் வண்ணங்கள்

மகாவிஷ்ணுவின் பாதத்தில் உள்ள சுக்கிரன் வெள்ளை, வெள்ளி மற்றும் தாமரைப்பூ இதழின் நிறத்தைக் குறிக்கிறார்.

ராகு பகவான் கருமை நிற நாகம் என்பதால், சாம்பல் மற்றும் கறுப்பு நிறத்தைக் கொண்டவர். கேது பகவான் பழுப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்டவர்.இனி, ராசிகளுக்கேற்ற வண்ணங்களைப் பற்றி அறிவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷம் மற்றும் விருச்சிகம்: இந்த ராசிக் காரர்களுக்கு சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறம் ஆகியவை ஏற்றவை. இந்த நிறங் களைத் தங்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாகக் கொள்ளலாம்.

செவ்வாய்க்குச் சொந்தமான வீடாகவே இவை (மேஷம், விருச்சிகம்) பார்க்கப்பட்டாலும் சூரியன் இவற்றில் உச்சம் அடைகிறார்.

சாம்பல் நிறத்தின் மீதும் பழுப்பு நிறத்தின் மீதும் ஓர் ஈடுபாடு விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கும். ஏனெனில், ராகுவும் கேதுவும் விருச்சிக ராசியில் உச்சம் அடைகிறார்கள்.

ரிஷபம் மற்றும் துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனுக்கு உரித்தான வெள்ளி, வெண்மை, கறுப்பு மற்றும் கருநீல நிறத்தின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். ஏனெனில் சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைகிறார். சனி, துலாம் ராசியில் உச்சமடைகிறார்.

மிதுனம் மற்றும் கன்னி: இந்த ராசிக்காரர்கள், புதனுக்கு உரித்தான பச்சை நிறத்தின் மீது விருப்பம் உள்ளவர்களாக இருப்பர்.

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தை அதிர்ஷ்டமானதாகக் கொள்ளலாம். கடகம் சந்திரனின் சொந்த வீடாக இருந்தாலும், குரு பகவான் உச்சம் அடைந்து அதிகாரம் பெறுகிறார்.

சிம்மம்: இந்த ராசி சூரிய பகவானின் சொந்த வீடு. இந்த ராசிக்காரர்களுக்கு வெளிர் மஞ்சள் மற்றும் வெளிர் சிவப்பு போன்ற நிறங்கள் அதிர்ஷ்டம் தரும். சூரியன் இருக்கும்போது வேறு எந்த கிரகமும் அந்த இடத்தில் அதிகாரம் பெறுவது இல்லை.

தனுசு மற்றும் மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிறத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தாலும்... சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெறுவதால், வெள்ளி மற்றும் செந்தாமரை இதழின் நிறங்களின் மீது ஒரு விருப்பம் இருப்பதைக் காணமுடியும்.

மகரம் மற்றும் கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்குக் கறுப்பு, கருநீலம் மற்றும் வெளிர் நீல நிறங்கள் வெற்றி தரும்.

கிரகங்கள் நீசமாகும்போது அவற்றின் பலம் குறைந்துபோவதால் அந்நிலையில் நாம் நிறத்தைப் பற்றிக் கவலை அடைய வேண்டியதில்லை.

கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி நிலை களைப் பொறுத்தே அந்தந்த கிரகத்துக்குரிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களா, இல்லையா என்பதைச் சொல்ல முடியும்.

இயற்கையிலேயே ஒருவருக்கு ஒரு நிறம் பிடிக்கும்போது, அந்த நிறத்துக்குரிய கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக ஆழ்மனத்தில் இருக்கும் என்று அர்த்தம். இல்லாவிட்டால், அந்தக் கிரகத்தின் திசை நடக்கும் காலமாக இருக்கும்.

ஜாதகப்படி எந்தக் கிரகத்தின் நிலை நம்மை ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதற்குத் தகுந்த வண்ணங்களைத் தேர்வு செய்து பயன்படுத்துவதால் நம் மனத்தில் திருப்தியை உணரலாம். இந்த நிலையில் நாம் எடுத்துக்கொள்ளும் காரியங்களில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெறலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism