Published:Updated:

தசரதர் அருளிய சனைச்சர அஷ்டகம்!

சனி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சனி பகவான்

மணிகண்டன்

தசரதர் அருளிய சனைச்சர அஷ்டகம்!

மணிகண்டன்

Published:Updated:
சனி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சனி பகவான்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 24.1.2020 வெள்ளிக்கிழமை அன்று சனி பகவான் தனுசு ராசியிலிருந்து தனது வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த நகர்வின் அடிப்படையில் மகரம் (ஜன்மச் சனி), மிதுனம் (அஷ்டமத்துச் சனி), துலாம் (அர்த்தாஷ்டமச் சனி), கும்பம் (ஏழரைச் சனி தொடங்குகிறது) ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும். இந்த ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு நீல நிற மலர்களைச் சமர்ப்பித்து, எள் அன்னம் நைவேத்தியம் செய்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும். அதேபோல், விநாயகர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும் இவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். சனிபகவானின் அருளைப் பெறும் விதமாக, தசரதர் அருளிய சனைச்சர அஷ்டகத்தின் கருத்தாக்கம் எளிய வடிவில் இங்கே உங்களுக்காக...

தினமும் காலையில் எழுந்ததும் கீழ்க்காணும் அஷ்டகத்தைச் சொல்லி வழிபடுவதால், சனிப் பெயர்ச்சி யால் ஏற்படும் தோஷங்கள் குறையும்; நற்பலன்கள் கிடைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • கோணன், முடிவைச் செய்பவன், ரௌத்ரன், இந்திரியங்களை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக்கொண்டவர் சனைச்சரர். அவர், தினமும் நம்மால் நினைக்கப்படுபவரும், நம்முடைய சகல பீடைகளைப் போக்குபவரும் ஆவார். சூரியனின் மைந்தனான அவரை வணங்குகிறேன்.

  • கெட்ட ஸ்தானத்தில் இருக்கும்போது தேவ-அசுரர்கள், கிம்புருடர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர், பன்னகர் முதலியோரையும் பீடிக்கும் சனைச்சரரின் பொருட்டு நமஸ்காரம்.

சனி பகவான்
சனி பகவான்
  • மனிதர், அரசர், பசுக்கள், சிங்கங்கள், காட்டில் உள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் ஆகிய அனைத்தும் சனைச்சரரின் பாதிப்புக்கு ஆளாபவையே. அத்தகைய சனைச்சரனை - சூரியனின் மைந்தனுக்கு வணக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • சனைச்சரன் கெட்ட ஸ்தானத்திலிருக்க... அதன் பொருட்டு தேசங்களும், நெருக்கமான காடுகளும், சேனையின் கூடாரங்களும், நகரங்களும் பீடிக்கப்படுகின்றன. அந்த சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.

  • சனிக்கிழமையில் எள்ளு, உளுந்து, சர்க்கரை அன்னம், இரும்பு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றைத் தானம் செய்வதாலும், தனக்கு உரிய மந்திரங்களைச் சொல்வதாலும் ப்ரீதி அடைகிறார் சனைச்சரன். அவருக்கு நமஸ்காரம்.

  • சூட்சும ரூபியாக இருந்தும், பிரயாகை க்ஷேத்திரத்திலும் யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளின் கரைகளிலும், குகைகளிலும் இருக்கும் யோகிகள் பலரின் தியானத்துக்கு நோக்க மாகத் திகழும் சனைச்சரனுக்கு வணக்கங்கள்.

  • சனிக்கிழமையில் வெளியிடத்திலிருந்து தன் வீட்டை அடைபவன் சுகம் அடைவான். அன்றைய தினம் வீட்டை விட்டுக் கிளம்புபவன் மீண்டும் அந்தக் காரியத்துக்காக வெளியே போக வேண்டியது இருக்காது. அப்படியான அருளை வழங்கும் சனைச்சரனுக்கு வணக்கங்கள்.

  • மூவுலகின் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனாகவும், ரக்ஷகரான விஷ்ணுவாகவும், ஸம்ஹர்த்தாவான சிவனாகவும், ருக், யஜூர், ஸாம ரூபியாகவும் விளங்கும் சனைச்சரனுக்கு வணக்கங்கள்.

  • மிக அற்புதமான இந்தச் சனைச்சர அஷ்டகத்தை தினமும் காலை வேளையில் ஆசாரத்துடன் படிப்பவர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள்; பசுக்கள் முதலான செல்வங்கள் சேரும்; பந்துக்கள் சூழ செளபாக்கியத்துடன் வாழும் பாக்கியமும் நிறைவில் மோட்சப்பேறும் வாய்க்கும்.

சனைச்சர அஷ்டகத்துடன், கீழ்க்காணும் அற்புதத் திருப்பெயர்களைச் சொல்லிப் போற்றியும் வழிபடலாம்.

த்ரிகோணத்திலிருப்பவன், பிங்களரூபி, பிரகாசிப்பவன், கறுப்பு நிறமுள்ளவன், பயங்கரன், அழிவைச் செய்பவன், அடக்குபவன், சூரிய புத்திரன், ராசிகளில் தாமதமாகச் சஞ்சரிப்பவன், மந்தகதி உள்ளவன் என்று பிப்பலாதரால் துதிக்கப்பட்டவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism