Published:Updated:

சொந்த வீடு அமையுமா?

சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
சொந்த வீடு

நவகிரகங்களும் நான்காம் இடமும்

சொந்த வீடு அமையுமா?

நவகிரகங்களும் நான்காம் இடமும்

Published:Updated:
சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
சொந்த வீடு

னிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் மிக அவசியமானவை. குறிப்பாக `சொந்த வீடு வாங்க வேண்டும்’ எனும் லட்சியம் பலருக்கும் உண்டு. ஜோதிட சாஸ்திரம், ஜாதக ரீதியாக ஒருவருக்குச் சொந்தவீடு அமைவதற்கான கிரக நிலைகள் குறித்து விளக்குகிறது.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்திலிருந்து) சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்குப் பிறகே வீடு வாசல் அமைய வாய்ப்பு உண்டு. பெற்றோர்மீது வாஞ்சை இருக்கும். அதேநேரம், குடும்ப அங்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு எத்தகைய வீடு அமையப் பெற்றாலும் உடல் ஆரோக்கியம் அவ்வப்போது லேசான பாதிப்புக்கு உள்ளாகும்.

ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4-ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும்.

ஜன்ம லக்னத்து 4-ம் வீட்டில் புதன் அமையப்பெற்றிருந்தால், கலைநயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும். சொந்தபந்தங்களால் நன்மைகள் உண்டு. எத்தகைய வீடுகளில் வசித்தாலும் தங்களுடைய புத்திசாலித்தனத்தால் சிரமங்களைச் சமாளித்துவிடுவார்கள்.

ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் சிறப்பான வீடும் மனை யோகமும் கிடைக்கும். இவர்களுக்கு முதுமை பருவம் சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும். எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் தோஷம் ஏற்படாமல், குலம் தழைத்தோங்கும்.

ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடு, வாகன யோகங்கள் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோன்று எத்தகைய அமைப்புள்ள வீடும் இவர்களுக்குத் துன்பம் தராது. அதேநேரம்... தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும், 4-ல் சுக்கிரன் இருந்து நல்ல வீடுவாசல் அமையப் பெற்றாலும் வீட்டில் அமைதி ஏற்படுவது கஷ்டம். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. வேறு பரிகாரங்கள் அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் சனி இருப்பின், கல்விகேள்விகளில் முழுமை அடையாமல் போவதாலோ, தகுதியற்றவர்களின் நட்புறவாலோ குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். அதேநேரம், சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபகிரகப் பார்வையோ, சேர்க்கையோ பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும்.

சொந்த வீடு
சொந்த வீடு

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அபிப்பிராய பேதங்கள் வரக் கூடும். அதேபோன்று அடிக்கடி வீடுவாசலையும் மாற்ற வேண்டியது வரலாம். இல்லற சுகம் பாதிப்பு அடையாது. ஆனாலும் வீட்டில் திருப்தியின்மை நிலவும். இவர்களுக்கு இறை வழிபாடு நன்மை அளிக்கும். விநாயகரையும் துர்காதேவியையும் வழிபட்டு குறைகள் நீங்கப்பெறலாம்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வீடு வாசல் இழப்புகள் ஏற்படும். பூர்வீகச் சொத்து இருந்தாலும் பயன் இருக்காது. இவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்து சுகங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் மாந்தி இருப்பின், செல்வச் செழிப்பு ஏற்படும். ஆனால், மாந்தி அமைந்துள்ள ராசியாதிபதி லக்ன கேந்திரம் பெற வேண்டும். அப்போதுதான் நல்ல வீடுவாசல் அமையும்.

ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மாந்தியுடன் சம்பந்தப்பட்டால், கிரக தோஷப் பரிகாரங்களால் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஜாதகப்படி நான்காம் வீட்டில் அமைந்திருக்கும் கிரகங்களால் வீடு-மனை அமைவதில் தடை உண்டாகும் நிலை ஏற்பட்டால், உரிய தெய்வ வழிபாடுகள் மூலம் நிவர்த்தி பெறலாம்.

திருச்சிக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூரில் அருளும் பூமிநாதர், சென்னை பாண்டிச்சேரி மார்க்கத்திலுள்ள மரக்காணம் பூமீஸ்வரர் ஆலயம், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் ஆலயம், சிறுவாபுரி முருகன் கோயில் ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், மனை மற்றும் வீடு யோகம் கைகூடப் பெறலாம்.

மனை வாங்க உகந்த காலம்...

வீடு கட்டுவதற்கான மனை வாங்கும் காலம் கடக லக்னமாக அமைவதும் அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு. நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன், கேது இணைந்திருந்தாலும் சிறப்புதான். வசிக்கும் இடத்துக்குக் குறிப்பிட்ட திசைகளில் நிலம் மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாள்கள் விசேஷமானவை.

மனை
மனை

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்.

மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்.

வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்.

கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்.

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம், மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அசுவினி, சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை. சித்தயோகம் மற்றும் அமிர்தயோக வேளையானது கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லைப் பதிக்கவும் ஏற்றது.

கட்டுமானம் தொடங்குமுன்...

முதலில் கட்டடம் கட்டப்போகும் மனையில் முட்புதர்கள், கற்கள், இதர விரும்பத் தகாதப் பொருள்களை அகற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நிருதி மூலையான தென்மேற்கு பகுதி 90 டிகிரியில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். அப்படி இல்லையெனில் 90 டிகிரியில் இருக்கும்படி நிலத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

மனை
மனை

மனையில் போர்வெல் அல்லது கிணறு அமைக்க விரும்பினால், கட்டடத்துக்கும் மதிலுக்கும் இடையில் அமைந்த காலியிடத் தில், கீழ்க்காணும் திசைகளில் அமைக்க வேண்டும்.

1. ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு.

2. வடக்கில் சரிபாதிக்கு மேல் கிழக்கு பாகத்தில்.

3. கிழக்கில் சரிபாதிக்கும் மேல் வடக்கு பாகத்தில்

அதேபோல், கட்டடம் கட்டுவதற்கு நமது மனையில் அமைத்த போர்வெல் அல்லது கிணற்றிலிருந்து எடுத்த நீரை முதலில் பயன்படுத்துவது மிக விசேஷம்.

* தெற்கிலும் மேற்கிலும் வெட்ட வெளியாக அமைந்திருக்கும் மனையில் வீடு கட்டும்போது, நிருதி மூலையைச் சரிப்படுத்தி, முதன்முதலில் மதிலைக் கட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism