Published:Updated:

உங்கள் வீட்டில் இறைசக்தி நிறைந்திருக்க...

வாஸ்து வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வாஸ்து வழிகாட்டல்

வாஸ்து வழிகாட்டல் ஜோதிடர் திண்டுக்கல் முருகேசன்

உங்கள் வீட்டில் இறைசக்தி நிறைந்திருக்க...

வாஸ்து வழிகாட்டல் ஜோதிடர் திண்டுக்கல் முருகேசன்

Published:Updated:
வாஸ்து வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வாஸ்து வழிகாட்டல்

சொந்த வீடு கட்டி வாழும் யோகம் எல்லோருக்கும் கிடைத்துவிடுவது இல்லை. ஜாதகத்தில் லக்னத்துக்கு 4-ம் இடம் நன்றாக இருந்தால், அழகிய சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும். மண்ணுக்கும் மனைக்கும் உரியது 4-ம் இடம். மட்டுமன்றி ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலையும் நல்லபடியாக அமைந்திருக்க வேண்டும்.

இப்படியான அமைப்புகளுடன் சொந்த வீடு கட்டும் யோகம் பெற்ற அன்பர்கள் வாஸ்து முறைப்படி புதிய வீட்டைக் கட்டி, அங்கு குடிபெயர்ந்தால், அமைதியான ஆனந்த வாழ்வைப் பெறலாம் என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள்.

உங்கள் வீட்டில் 
இறைசக்தி நிறைந்திருக்க...
Kwangmoozaa

வாஸ்து குறித்து விரிவான விவரம் தெரியாத அன்பர்கள், அதுபற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்கான விளக்கம் இதுதான்... நம் முன்னோர்கள் `இந்த இடத்தில் இப்படியான முறையில் ஒரு கட்டடத்தை அமைக்க வேண்டும்' என்று அனுபவ அறிதலுடனும் சாஸ்திர முறைப்படியும் உரிய வழிமுறைகளைச் சொல்லி வைத்துள்ளார்கள். அவற்றைக் காலம் காலமாகக் கடைப்பிடித்து ஆனந்தமாய் வாழ்ந்திருக்கிறார்கள்.

காற்று, வெளிச்சம் ஆகியவை நன்கு வீட்டுக்குள் வரும்படியும் தண்ணீர் புழக்கம் வசதியாக இருக்கும்படியும் கோடை காலத்திலும் வீட்டுக்குள் குளிர்ச்சி தங்கும் படியும் மிக அற்புதமான கட்டுமான முறைகளைச் சொல்லிச் சென்றுள்ளார்கள். புராணங்களிலும் வாஸ்து குறித்த காரணக் கதைகள் பல உண்டு.

மாமதுரையை நிர்மாணித்த பாண்டிய மன்னன், ஒருவேளை தன் மக்கள் வாஸ்து சாஸ்திர விதிகள் தெரியாமல் வீடு கட்டி, அதனால் அமைதியை இழந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்தான்; நகரையே மிக அற்புதமான சாஸ்திர விதிகளுடன் நிர்மாணித்தான் என்றொரு தகவல் உண்டு. ஆக, வாஸ்து சாஸ்திரம் என்பது நமக்கான வரம். நமக்குப் பிறகும் நம் சந்ததியினரும் அந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ, நம் வீட்டின் கட்டுமானம் உரிய வாஸ்து நியதிகளுடன் அமையவேண்டும். அதற்கான சில எளிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

வீட்டுக்கான மனையை எவ்வித கோணலும் இல்லாமல் பார்த்து வாங்கவேண்டும். புதிய இடம் வாங்கவில்லை; பழைய பூர்வீக மனையில்தான் வீடு கட்டப் போகிறோம் என்ற நிலையா? அந்தப் பூர்வீக இடமானது ஒழுங்கற்று இருந்தாலும் வீடு மற்றும் சுற்றுப்புற எல்லையை (காம்பவுண்ட்) கோணல் இல்லாத ஒழுங்குடன் கட்டமைத்துக் கொள்ளலாம்.வாஸ்து சாஸ்திரப்படி கோண திசைகள் மிக முக்கியமானவை. (வரை படத்தில் உள்ளபடி)

உங்கள் வீட்டில் 
இறைசக்தி நிறைந்திருக்க...

ஈசான்யம் - வடகிழக்கு
அக்னி - தென்கிழக்கு
கன்னிமுலை - தென்மேற்கு
வாயு - வடமேற்கு


இந்த கோண பாகங்கள் நீண்டும் குறுகியும் ஒழுங்கற்று இல்லாமல், சரியாக 90 பாகையில் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமைந் தாலே, வீடு ஐம்பது சதவிகிதம் சரியாக அமைந்துவிட்டது என்று அர்த்தம்.

இனி, வீட்டில் எந்தெந்த பாகம் எப்படி அமையவேண்டும் என்பதை அறிவோம்.

உங்கள் வீட்டில் 
இறைசக்தி நிறைந்திருக்க...

ஈசான்ய பாகத்தில்...

பூமியை நோக்கி வரும் பிரபஞ்ச சக்தியானது வடகிழக்கு அதாவது ஈசான்ய மூலை வழியேதான் வீட்டுக்குள்ளும் பரவும். இந்தப் பிரபஞ்ச சக்தியையே தெய்வ சக்தி என்கிறோம். ஆகவே, இந்தப் பகுதியில் திசை கோணம் மிகச் சரியாக அமையும் விதம் மற்ற திசை கோணங்களை நேர்த்தியாக அமைக்க வேண்டும்.

ஈசான்ய மூலையில் ஜன்னல் மற்றும் வாயில் ஆகியவற்றை வைத்து பிரபஞ்ச சக்தி வீட்டுக்குள் நன்கு வரும்படி அமைக்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ளோருக்கு ஆன்ம பலம் அதிகம் கிடைக்கும். வீட்டில் உள்ள குலதெய்வத்துக்குச் சக்தி பெருகும். குடும்பத்துக்கு வளர்ச்சியும் செழிப்பும் உண் டாகும். சிலர் ஈசான்ய பகுதியிலேயே பூஜை அறையையும் அமைத்திருப்பார்கள். இது கூடுதல் சிறப்பம்சம்.

வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகின்றனவோ, அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும் என்பர். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.

உங்கள் வீட்டில் 
இறைசக்தி நிறைந்திருக்க...

நிருதி மூலையில்...

தென்மேற்கில் உள்ள பகுதி கன்னி மூலை. இதையே நிருதி மூலை என்றும் சொல்வார்கள்.

சிலரை நாம் கேலியாகச் சொல்வோம்... `விஷயத்தை இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியே விட்டுவிடுவார்’ என்று. அப்படித்தான்... ஈசான்ய மூலை நல்லபடி அமைந்து, அதன் மூலம் வீட்டுக்குள் நிறையும் பிரபஞ்ச சக்தியானது, கன்னி மூலை சரியாக இல்லையெனில் வந்த வேகத்தில் வெளியேறி விடும்!

ஆகவே, அந்த பாகத்தைச் சற்று உயரமாகத் திகழும்படியும் ஜன்னல் இல்லாமலும் செவ்வனே அமைக்கவேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். அவர்களின் மனநிறைவுதான் இல்லத்தின் மேன்மைக்கு ஆதாரமாகும்.

வீட்டின் ஈசான்ய மூலையில் கனம் குறைந்த பொருள்களையும் கன்னி மூலையில் வலுவான பொருள்களையும் வைத்துப் புழங்கலாம்.

உங்கள் வீட்டில் 
இறைசக்தி நிறைந்திருக்க...

அக்னி மூலையில்...

க்னி மூலையில் சமையல் அறை அமைய வேண்டும். சமையலுக்கும் அக்னியே பிரதானம். அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. எனவே, தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். சூரியனின் ஆற்றலும் பிரபஞ்ச சக்தியும் இணைந்து திகழும் இடம் அது. அங்கே உருவாகும் உணவு ஆரோக்கியம் அளிக்கவல்ல ஒளஷதமாகத் திகழும். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகமான அக்னி மூலையில் சமையலறையை அமைத்துக்கொள்வது சிறப்பு.

இன்னும் சில தகவல்கள்...

ஜோதிட விதிப்படி புதன் கிரகத்தை வித்யாகாரகன் என்று சொல்வார்கள். ஆக, படிக்கும் அறையானது புதனுக்கு உரிய திசையில் அமைவது விசேஷம். அல்லது, ஞானகாரகனாகிய குருவுக்கு உரிய திசையில் அமைக்கலாம். புதனுக்கு உரிய திசை வடக்கு; குருவுக்கு உரியது வடகிழக்கு. இந்த திசைகளை நோக்கியபடி படிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென் மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது.

ல்ல நிம்மதியான தூக்கம் கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.உங்கள் ராசிப்படி தலைவாயில்!

உங்கள் ராசிப்படி தலைவாயில்!

வ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு.

வடக்கு நோக்கிய வாயில்: மேஷம், சிம்மம் மற்றும் தனுசு

தெற்கு நோக்கிய வாயில்: ரிஷபம், கன்னி மற்றும் மகரம்

மேற்கு நோக்கிய தலைவாயில்: மிதுனம், துலாம் மற்றும் கும்பம்

கிழக்கு நோக்கிய தலைவாயில்: கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்

இந்த முறைப்படி உங்கள் ராசிக்கு ஏற்ற திசைகளை நோக்கிய தலைவாயிலுடன் அமைந்த வீடுகளில் வசிப்பதால் விசேஷ பலன்கள் உண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism