Published:Updated:

கனவுகள் பலிக்குமா?

கனவுகளின் வகைகளைப் பட்டியலிடுகின்றன சில ஞானநூல்கள்.

பிரீமியம் ஸ்டோரி

னத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவு களாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ் மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு.

பொதுவாக கனவுகள் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறு பாட்டால் ஏற்படுகின்றன என்பது ஆயுர்வேதத்தின் தீர்ப்பு. ப்ரச்ன மார்க்கமும் (31-வது அத்தியாயம்) கனவுகள் குறித்து விளக்குகிறது.

கனவுகளின் வகைகள்...

கனவுகளின் வகைகளைப் பட்டியலிடுகின்றன சில ஞானநூல்கள். அவை: திரிஷ்டம் - சந்தித்த நிகழ்வுகளைக் கனவுகளில் காணுதல், ஷ்ருதம்

- கேள்விப்பட்டவற்றை கனவில் காணுதல், அனுபூதம் - தொடவும், முகரவும், ருசிக்கவும்கூடிய தன்மை கொண்ட வற்றைக் காணுதல், பிராதிதம்- ஆசைப் பட்டவற்றைக் காணுதல், கல்பிதம் - கற்பனைப் பொருள்கள், நிகழ்வுகளைக் காணுதல், பாவிஜம் - எவ்வகையிலும் சாராதவை, தோஷஜம் - திரிதோஷங்களின் பாதிப்பில் ஏற்படும் கனவுகள்.

கனவுகள் பலிக்குமா?

இந்தக் கனவுகள் பலிக்காது!

1. பகல் நேரத்தில் காணும் கனவுகள்

2. காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள்.

3. நீண்டநேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள்.

4. நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள்.

இப்படியான கனவுகள் பலிக்காது. அதேநேரம், அதிகாலைப் பொழுதில் காணும் கனவுகள் அடுத்து வரும் நாள்களில் பலிக்கும்.

கெட்ட கனவுகளின் தொல்லை நீங்க...

அச்சம் தரக்கூடிய தீய கனவுகள் இல்லாமல், நிம்மதியாக உறங்கவேண்டும் என்றால், தினமும் படுக்கச் செல்லும்போது, இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஸ்லோகத்தை 3 முறை சொல்லி சிவபெருமானை தியானித்துவிட்டு உறங்கினால், எந்த கெட்ட கனவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம்.

துஸ்ஸ்வப்ன துஸ்ஸகுன துர்கதிதெளர்மனஸ்ய

துர்பிக்ஷதுர்வ்யஸன துஸ்ஸஹதுர்யஸாம்ஸி:

உத்பாததா பவிஷபீதிமஸத் க்ரஹார்த்திம்

வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ:

கருத்து: கெட்ட கனவுகள், கெட்ட சகுனங்கள்,

வறுமை, மனக் கவலை, துக்கம், சகித்துக்கொள்ள முடியாத அவமானம், பூகம்பம் முதலான இயற்கை உற்பாதங்கள், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல வகையான கஷ்டங்கள், விஷ ஜந்துக்களால் ஆபத்துக்கள், கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள், தீராத வியாதிகள் போன்றவை என்னை வருத்தாதவாறு, உலக நாயகனான பரமேஸ்வரன் என்னைக் காப்பாற்றட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு