Published:Updated:

சொந்தத் தொழில் உங்களுக்குச் சாதகமா?

சுயதொழில்
பிரீமியம் ஸ்டோரி
சுயதொழில்

ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

சொந்தத் தொழில் உங்களுக்குச் சாதகமா?

ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
சுயதொழில்
பிரீமியம் ஸ்டோரி
சுயதொழில்

தொழில் வெற்றிக்கான பலாபலன்களைச் சொல்வது 10-ம் இடம் ஆகும். இதை கர்ம ஸ்தானம் என்பார்கள். 10-ல் ஒரு பாவியேனும் இருந்தால் ஜாதகன் கடல் கடந்து வியாபாரம் செய்து உலகம் புகழ வாழ்வாங்கு வாழ்வான் என்பது பொதுவிதி.

சொந்தத் தொழில் 
உங்களுக்குச் சாதகமா?

ஜாதகத்தில் லக்னத்துக்குப் பத்தாமிடத்தில் சனி இருந்தாலே, ஜாதகர் சொந்தத் தொழில் செய்து மேலான நிலைக்கு வருவார். குறிப்பாக அந்த பத்தாம் இடம் மகரம், கும்பம் மற்றும் துலாமாக அமைந்துவிட்டால், ஜாதகர் சொந்தத் தொழில் செய்பவராக - அதில் புகழ்பெற்று விளங்குவார்.

ஜாதகத்தில் சந்திரன், வளர்பிறைச் சந்திரனாக பத்தாம் வீட்டில் இருந்தால், ஜாதகர் சுயதொழில் செய்பவராக இருப்பார். அதிலும், குறிப்பாக ஆட்சி வீடான கடகத்திலோ, உச்ச வீடான ரிஷபத்திலோ இருந்தால் அதில் நல்ல லாபம் பெறுவார்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பத்தாம் வீட்டிலோ, பத்தாம் வீட்டுக்கு அதிபதியாகவோ இருந்தால் ஜாதகர் சொந்தத் தொழில் செய்பவராக இருப்பார். குறிப்பாக, சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபமாகவோ துலாமாகவோ அமைந்தாலும், சுக்கிரன் உச்சம் பெறும் வீடான மீனத்தில் அமைந்தாலும் ஜாதகருக்குச் சொந்தத் தொழில்தான் அமையும். அதேபோல் சுக்கிரன் லக்னம், 4, 10 ஆகிய மூன்று வீடுகளில் எங்கிருந்தாலும் ஜாதகர் சுயதொழில் செய்பவராக இருப்பார்.

ஜாதகத்தில் பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்தால் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்பவராகவோ, மருத்துவராகவோ இருப்பார். குறிப்பாக, பத்தாம் இடமானது மேஷம், விருச்சிகம், மகரம் என அமைந்து அதில் செவ்வாய் இருந்தால் தொழிலில் புகழ்மிக்கவராகத் திகழ்வார்.

ஜாதகத்தில் பத்தாமிடத்தில் ராகு, கேது போன்ற கிரகங்கள் அமர்ந்தாலும் ஜாதகருக்குச் சொந்தத் தொழில்தான். ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் விருச்சிகம் உச்ச வீடாகும். ஆக, விருச்சிகம் பத்தாம் இடமாக அமைந்து, அதில் சர்ப்ப கிரகங்கள் இடம்பெற்றால் சொந்தத் தொழில் யோகம் அமையும்.

குரு பகவான் ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது பத்தாம் இடத்து அதிபதியைப் பார்த்தாலோ சொந்தத்தொழிலில் நல்ல வருமானமும் புகழும் பெறுவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism