Published:Updated:

ஜாதகம் சாதகமாக தானம் செய்யுங்கள்!

கடன் தீர்க்கு தானங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கடன் தீர்க்கு தானங்கள் ( Aleksey Gavrikov )

கடன்கள் அடைபடும் கஷ்டங்கள் நீங்கும் - ஜோதிடர் ஶ்ரீமுருகப்ரியன்

ஜாதகம் சாதகமாக தானம் செய்யுங்கள்!

கடன்கள் அடைபடும் கஷ்டங்கள் நீங்கும் - ஜோதிடர் ஶ்ரீமுருகப்ரியன்

Published:Updated:
கடன் தீர்க்கு தானங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கடன் தீர்க்கு தானங்கள் ( Aleksey Gavrikov )

வாழ்வின் நிம்மதியைத் தொலைக்கச் செய்து பெரும் துன்பத்தைத் தரும் பிரச்னைகளில் ஒன்று கடன். தனிநபர் மட்டுமன்றி பல நாடுகளே கடன் சுமையால் தத்தளிப்பதைக் காண்கிறோம். `சொத்து சுகமெல்லாம் வேண்டாம்; கடன் இல்லாத வாழ்க்கை அமைந்தாலே போதும்’ என்பார்கள் பெரியவர்கள்.

ஜாதகம் சாதகமாக 
தானம் செய்யுங்கள்!
Aleksey Gavrikov

ண்மைதான்! சுக போகங்களுக்கு ஆசைப் பட்டு கடன் வாழ்க்கையில் சிக்கிக்கொண்டால், மீள்வது மிகக் கடினம். ஆகவேதான் நம்மில் பெரும்பாலானோரும் கடன் இல்லாத வாழ்வுக்கு ஆசைப்படுகிறோம். ஆனால், அனைவருக்கும் அப்படியொரு நிம்மதியான வாழ்க்கை சாத்தியப் படுவதில்லை என்பதே உண்மை.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். கடன் பிரச்னையும் அப்படித்தான். முன்யோசனை இல்லாத திட்டமிடல், ஆசையின் உந்துதல், தகுதிக்கு மீறிய செலவுகள் முதலானவை ஒருவரைக் கடனாளியாக்கிவிடுகின்றன. இன்னும் சிலர் உண்டு... முன்னோர் விட்டுச் சென்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி அவதிப் படுவார்கள்.

இவை அனைத்துக்கும் காரணம் முன் வினைகளே என்கின்றன ஞானநூல்கள். முன் வினைகளின் பலாபலன்களை அனுபவிக்கவே மறுபிறவி வாய்க்கிறது; அந்த பலன்களைத் தரும் விதமான நிலைகளில் கிரகங்கள் அமைய, அந்தத் தருணத்தில் குறிப்பிட்ட ஜாதகன் பிறப்பெடுத்து பலன்களை அனுபவிக்கிறான் என்கின்றன ஜோதிட நூல்கள்.

ஜாதகம் சாதகமாக 
தானம் செய்யுங்கள்!
bjdlzx

கடனும் 6-ம் இடமும்

ஒருவரது ஜாதகத்தில் 6-ஆம் இடம் கடன், சத்ரு, நோய், விபத்து, வழக்கு ஸ்தானத்தைக் குறிக்கும். ஒருவர் கடனாளியாகத்தான் இருப்பாரா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள, இதைத் தெளிவாக அறிய வேண்டும்.

ஜாதக நிலையில் குரு மகரத்தில் நீசமாகி விரயம் அடைந்தாலும், 6-ஆம் இடத்தில் அமர்ந் திருக்கும் குருவை சனி பார்த்தாலும் அடைக்க முடியாதவாறு கடன் அழுத்தும்.

தசா காலம் கணக்கீடு அடிப்படையில் பார்த்தோமானால், செவ்வாய் தசையில் சுய புக்தி, சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கும் போது, பெரும்பாலும் பெண்கள் மூலம் கடன் வர வாய்ப்பு ஏற்படும். குரு தசை நடக்கும்போது கேது, செவ்வாய் மற்றும் ராகு புக்தியில் கடன் சுமை வரக்கூடும்.

புதன் தசை நடக்கும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். நாம் யாருக்காக ஜாமீன் கொடுத்தோமோ, அவர் மூலம் பிரச்னை ஏற்படும். சனி தசை- கேது புக்தியில், மகன் மூலமாகக் கடன் தொல்லை ஏற்படும். ராகு தசை நடக்கும்போது சனி, சூரியன் மற்றும் செவ்வாய் புக்தி காலத்தில் சுற்றியுள்ளவர்களால் கடன் பிரச்னை ஏற்படும். கேது தசை- சந்திர புக்தியில் நகை மூலம் கடன் வரும்.

சுக்கிர தசை- சூரிய புக்தியில் வங்கிக் கடனை அடைக்க இயலாத நிலை ஏற்படும்; சனி புக்தியில் மனைவி, மகனுக்கான வைத்தியச் செலவுகளால் கடன் ஏற்படலாம்.

நஷ்ட ஜாதகமா... எப்படி அறிவது?

அன்பர்கள் சிலர் ஆயுள் முழுக்கக் கடனாளி யாக இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். சொத்து விரயம், தொழில் முடக்கம்-நஷ்டம் ஆகியவற்றால் பெரிதும் துன்புறுவார்கள். ஜோதிட வல்லுநர்கள் மூலம் ஜாதகத்தை நன்கு ஆய்ந்து, நஷ்ட ஜாதக அமைப்பு இருக்கிறதா என்பதை அறிந்து, உரிய பரிகாரங்கள் செய்து வந்தால், தொடர் நஷ்டங்கள் மற்றும் பிரச்னை களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4-ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ, அது நஷ்ட ஜாதகம்தான்.

அதேபோல் 6-க்குரியவன் வலுவாக இருக்க, லக்னாதிபதியும் ராசி நாதனும் வலுவிழந்து காணப்பட்டால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.

இப்படி நஷ்ட ஜாதகம் கொண்டவர் எந்தெந்த வகையில் கடனாளி ஆவார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

6-க்கு உரியவனுடன் சூரியனோ, பிதுர் ஸ்தானாதிபதியோ சேர்ந்திருந்தால், தந்தையால் கடன் உண்டாகும். 6-க்கு உரியவனுடன் சந்திரனோ, 4-ஆம் வீட்டுக்கு உரியவனோ சேர்ந்திருந்தால், தாய் - தாய்வழி உறவினர்களால் கடன் ஏற்படும்.

6-க்கு உரியவனுடன் செவ்வாயோ சகோதர ஸ்தானாதிபதியோ சேர்ந்திருந்தால்- உடன் பிறந்தவர்களாலும், சுக்கிரனோ 7-க்கு உரிய கிரகமோ சேர்ந்திருந்தால்- மனைவியாலும் கடன் ஏற்படும்.

இதேபோல், 6-க்கு உரியவனுடன் சனி சேர்ந் திருந்தால் வேற்று மொழி, மதத்தினராலும், ராகு சேர்ந்திருந்தால், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் நண்பர்களாலும், கேது சேர்ந்திருந்தால் அரசியல் கட்சி, இயக்கங்கள், அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் ஒருவருக்குக் கடன் பிரச்னைகள் ஏற்படும்.

ஜாதகம் சாதகமாக 
தானம் செய்யுங்கள்!
reddees

கடன் பிரச்னை தீர தானம் செய்யுங்கள்!

கடன் பிரச்னைகளுக்குத் தானம் அளிப்பது மிகச் சிறந்த பரிகாரம் ஆகும். அது, உணவா கவோ, ஆடையாகவோ அல்லது எது வேண்டு மானாலும் இருக்கலாம். ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக கல்வி புகட்டலாம்; அவர்களின் படிப்புக்கு உதவலாம். இயன்றபோதெல்லாம் பசுவுக்கு உணவு அளிக்கலாம்.

தெய்வத் துணையும் கடன் சுமை தீர்க்கும். மகா சங்கடஹர சதுர்த்தி திருநாள்களில் பிள்ளையாரை வழிபடுவதால் கடன் முதலான சகல சங்கடங்களும் பொசுங்கும். அவ்வகையில் அவரின் அருளால் நம் கடன் பிரச்னைகளும் நீங்கி நலம் பெறலாம். அன்றைய தினம் அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு அபிஷேகத்துக்குப் பால் வாங்கிக் கொடுக்கலாம். சிதறு தேங்காய் உடைத்து, விநாயகர் அகவல் பாராயணம் செய்வதால், கடன் பிரச்னைகள் மெள்ள மெள்ள கட்டுக்குள் வரும்.

அதேபோல் வீடுகளில் தினமும் காலையும் மாலையும் நெய்தீபங்கள் ஏற்றிவைத்து திருமகள் துதிப்பாடல்களைப் பாராயணம் செய்வதாலும், பெளர்ணமிதோறும் மாலையில் அம்பிகைக்குப் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத் தியம் செய்து, அபிராமி அந்தாதி படித்து வழிபடு வதாலும் செல்வம் பெருகும்; கடன் பிரச்னை நீங்கும். இனி பன்னிரு ராசியினருக்கும் உரிய பரிகார வழிபாடுகளைத் தெரிந்துகொள்வோம்.

எளிய பரிகாரங்கள்

மேஷம்: இதன் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமா னுக்குச் செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

ரிஷபம்: சுக்கிரனை அதிபதியாகக்கொண்ட இந்த ராசிக்காரர்கள், வெள்ளிக் கிழமை களில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வழிபட்டு வர கடன்கள் குறையும்.

மிதுனம்: இதன் அதிபதி புதன். சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்குச் செந்தூரக் காப்பு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

கடகம்: சந்திரனின் ஆதிக்கம் கொண்டது கடகம். வாரம்தோறும் சனி அல்லது திங்கள் கிழமைகளில் வேங்கடவனை வழிபடலாம்.

சிம்மம்: சூரியனின் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், சூரியன் பூஜிக்கும் சிவத் தலங்களைத் தரிசித்து வரலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வதும் விசேஷம்.

கன்னி: புதன் அதிபதி. இந்த ராசிக் காரர்கள், சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, தாயார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடலாம்.

துலாம்: சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட ராசி. துலாம் ராசி நேயர்கள், தொடர்ந்து 6 வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம்.

விருச்சிகம் : இதன் அதிபதி செவ்வாய். விருச்சிக ராசி அன்பர்கள் தினமும் காலையில் தீபம் ஏற்றி வைத்து, கந்த சஷ்டிக் கவசம், குமார ஸ்தவம் முதலானவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 45 நாள்கள் செய்து வர கடன்கள் தீரும்.

தனுசு: குருவின் ஆதிக்கம் கொண்டது தனுசு. வெள்ளிக் கிழமை களில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி, துளசி தளத்தால் அர்ச்சனை செய்ய கடன்கள் தீரும்.

மகரம்: சனியின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்கள், புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து, துளசி தளத்தால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், கடன் நீங்கும்.

கும்பம்: சனி ஆதிக்கம் கொண்டது. தொடர்ந்து ஆறு பிரதோ ஷங்களுக்குச் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

மீனம்: குருவின் ஆதிக்கம்கொண்ட இந்த ராசிக்காரர்கள், ஞாயிற்றுக் கிழமை காலையில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி, செம்பருத்திப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

கடன் வாங்கக் கூடாத காலங்கள்!

ஏழரைச் சனி நடைபெறும்போது உண்டாகும் கடன்கள் அவமானத்தைத் தரலாம். அஷ்டம ராசியில் சனி சஞ்சரிக்கும்போது கடன் வாங்கினால் மன நிம்மதி பறிபோகும்.

6, 8 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் கடன் வாங்கினால், திரும்ப செலுத்தமுடியாமல் தலைமறைவாக வேண்டிய சூழல் உருவாகும்.

சந்திராஷ்டம நேரத்தில் உண்டாகும் கடன்களால் புதிய பிரச்னைகள் தோன்றும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism