Published:Updated:

ஆடி அமாவாசை: அவசியம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஓர் எளிய வழிகாட்டல் - ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

ஆடி அமாவாசை தீர்த்தமாடல் ( உ.பாண்டி )

ஆடி அமாவாசை... அவசியம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஓர் எளிய வழிகாட்டல் - ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

ஆடி அமாவாசை: அவசியம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஓர் எளிய வழிகாட்டல் - ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

ஆடி அமாவாசை... அவசியம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஓர் எளிய வழிகாட்டல் - ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

Published:Updated:
ஆடி அமாவாசை தீர்த்தமாடல் ( உ.பாண்டி )

இன்று (28.7.22) ஆடி அமாவாசை. இந்நாளின் மகத்துவம் என்ன, இந்நாளில் முன்னோரை எப்படி வழிபடவேண்டும், வீட்டி லேயே தர்ப்பணம் கொடுக்கலாமா, யார்யாருக்குத் தர்ப்பணம் கொடுப்பது, எள் தர்ப்பணம் எதற்காக, அவசியம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ... இதுபோன்று நாம் அவசியம் அறியவேண்டிய அபூர்வ விஷயங்களை விவரிக்கிறார் ஜோதிடர் பாரதிஶ்ரீதர்.

ஆடி அமாவாசைக்கு அப்படியென்ன சிறப்பு?

ஒரு வருடத்தில், பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக 6 நாள்கள் உண்டு. அவை உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க மான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமா வாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை. இந்த ஆறு நாள்களில் ஒன்று ஆடி அமாவாசை.

நவகிரகங்கள்
நவகிரகங்கள்

ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று போற்றுவார்கள். நவகிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்கிறார். அதாவது பித்ரு காரகனான சூரிய பகவான், மாத்ரு காரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற காலம். ஆக, இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகும்.

தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராயனமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணாயனம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆடி அமாவாசையில் என்னென்ன செய்ய வேண்டும்? எப்போது தர்ப்பணம் கொடுக்கலாம்?

இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுதல் சிறப்பு. அன்று ராகுகாலம், யம கண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களுக்கு அவரவர் வழக்கப் படி படையல் இட்டு வழிபடலாம். அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்கவேண்டும்.

அமாவாசை
அமாவாசை

ராமேஸ்வரம், கங்கை, காவிரி, பவானி கூடுதுறை முதலான நீர் நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடி, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபடலாம். இங்ஙனம் இந்த நாளில் நம் முன்னோர்களுக்கான கடனைச் செய்து அவர்களைத் திருப்திப்படுத்தினால், நமக்கு மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் மிகப் பெரிய நன்மைகளும் பலமும் கிடைக்கும்.

வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாமா?

‘நதிகள், தீர்த்தக்கட்டங்கள், திருக்குளங்கள் எதுவும் உங்கள் ஊரிலோ ஊருக்கு அருகிலோ இல்லையா? அல்லது அங்கெல்லாம் செல்ல இயலாத சூழலா... வருந்தவெண்டாம். வீட்டில் இருந்தபடியே, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யலாம்; தவறே இல்லை.

எள்ளும் நீரும் எதற்காக?

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். இதைத் தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்கின்றன புராணங்கள். ஆக, இந்த எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்களை - மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்
ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

யார் யாருக்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

மறைந்த தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேருக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேபோல், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

தர்ப்பணம் செய்து வைப்பவருக்கு என்னென்ன வழங்கவேண்டும்?

பித்ருக்களுக்குக் கடன் அளிப்பது போலான காரியங்களில், தர்ப்பணம் செய்து வைக்கிற புரோகிதருக்குத் தாம்பாளம் ஒன்றில் அரிசி, பயத்தம்பருப்பு, வெல்லம், வாழைக்காய், வெற்றிலை- பாக்கு, தட்சணை என நம்மால் இயன்றதை வழங்கி, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாக நம் வீட்டுக்கு வந்திருக்கும் அவர்களைத் திருப்திப்படுத்தினால், நம் பித்ருக்கள் மகிழ்வர் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

ஆடிஅமாவாசையில் அவசியம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக் கூடாது. திதி, சிராத்த, தர்ப்பணக் காலங்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.

நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதே போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

பாகற்காய் 100 வகை காய்களுக்கும், பிரண்டை 300 வகை காய்களுக் கும், பலாக்காய் 600 வகை காய்களுக்கும் சமம் என்பார்கள். ஆக, இந்த மூன்று காய்களையும் அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயையும் சேர்ப்பது அவசியம்.