ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

நகங்கள் சொல்லும் உண்மைகள்

நகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நகங்கள்

விரல் நகங்களின் அமைப்பும் பலன்களும்

கைகளில் விரல்களின் அமைப்பும், நகங்களின் அமைப்பும்கூட ஒருவருடைய குணாதிசயங்களைத் தெரிவித்துவிடும் என்கிறது பஞ்சாங்குலி சாஸ்திரம். நகத்தை நீளமாக வளர்த் தாலும் சரி, குட்டையாக வெட்டிக் கொண்டாலும் சரி, நகங்கள் அமைவதற்காக விரல்களின் மேல் அமைந்துள்ள பகுதியின் வடிவத்தைப் பொறுத்தே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.

ஒருவரின் கைகளைப் பரிசீலிக்கும்போது நகங்களையும், நகக் கண்களையும் கூடச் சோதிக்க வேண்டும். மனித உடலில் உற்பத்தியாகும் காந்த சக்தியானது நகக்கண்கள் மூலமே வெளிப் படுகின்றன. வெளியில் உள்ள காந்த சக்தியும் நகக் கண்கள் மூலமே ஈர்க்கப்படுகின்றன. இந்த சக்தியைப் பாதுகாக்கும் மூடியாக, நகங்கள் உதவுகின்றன.

சிலர் மனக்கலக்கமாக இருக்கும்போதும், சிந்திக்கும் போதும் நகத்தைக் கடிப்பதற்குக் காரணம், அந்த காந்த சக்தியை நெருடி, பலத்தை பெருக் குவதற்குத்தான். அல்லது, தன்னை சமாதானப்படுத்திக் கொள் வதற்குத்தான்.

மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் முதலானவற்றில் கையிலுள்ள நகக் கண்கள் மூலமும், விரல் நுனி மூலமும், காந்த அலைகளைச் செலுத்தித்தான் ஒருவரை ஹிப்னாடிஸ நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். சூழ்நிலையில் உள்ள மின்சக்திகளை உடலில் கடத்தி, உடலின் சக்தியை சமநிலைப் படுத்துவது நகமும், நகக்கண்களும், விரல் நுனிகளுமேயாகும்.

நகங்கள்
நகங்கள்

நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அழகாக வைத்துக்கொள்வதும் அவசியம். நகங்களில் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது, வாழ்க்கையில் ஏற்படும் திடீர் முன்னேற்றங்களைக் கெடுக்கும்.

நகக்கண்கள் என்று சொல்லப்படும் இவற்றின் வடிவமைப்பையும் அதற்கேற்ற மனிதனின் இயல்புகளையும் அங்க லட்சணம் சார்ந்த ஞானநூல்கள் விளக்குகின்றன. அதுபற்றிய தகவல்கள் உங்களுக்காக!சிறிய முக்கோண வடிவம்: மேலே அகலமாகவும், கீழ்ப் பாகம் குவிந்தும் அமைந்த முக்கோண வடிவம் நகம் எனில், அந்த நபர் தனித் தன்மை கொண்டவர்கள். தனிமை விரும்பிகள். கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருக்கும்!அகலத்தைவிட நீளம் அதிகமாக இருந்து கீழே வளைந்து மேலேயும் வளைந்த முட்டை வடிவம் : பூரணமான மனிதர்கள். எதிலும் நிறைவு காண்பவர்கள்.முனையில் அர்த்த சந்திர வடிவில் வளைந்த வட்டம்: ஸ்திர புத்தி மிக்கவர்கள். விரைவில் முடிவெடுக்கும் தன்மை கொண்டவர்கள்.மிகக் குறுகிய, வெளிறிய தன்மை: சந்தர்ப்பவாதிகள். காரியவாதிகள். நம்ப முடியாதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். பிறரை நம்பாதவர்கள்.

மிகச் சிறியது: குறுகிய மனப்பான்மை, சுயநலம் கொண்டவர்கள்.சதுரமான வடிவம்: நகங்கள் சதுரமாக அமைந்தால், பயந்த சுபாவம் உண்டு. தன்னம்பிக்கை இருக்காது.

நீளமான, மேலே கூராக உள்ள வடிவம்: அழகிலும் வசதியிலும் ஈடுபாடு உடையவர்கள். சிற்றின்பப் பிரியர்கள்.சிறிய, செவ்வக வடிவம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள். பயந்த சுபாவக்காரர்கள்.

மிக அகலமான வடிவம்: பிடிவாதக் காரர்கள். சண்டையிடும் குணம் உண்டு்.

விரலை விட சிறியதான நீண்ட வடிவம்: தானாகச் சிந்திக்கும் திறனில்லாதவர்கள். பிறரை நம்பியே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.நீளத்தைவிட அகலம் அதிகமான வடிவம்: கோபப்படக் கூடியவர்கள். உணர்ச்சிவசப்படுவார்கள்.கடினமான, அகலக் குறைவான வடிவம்: நினைத்ததைச் சாதிப்பவர்கள். நன்மை தீமை என பகுத்தறியாதவர்கள்.